எப்படி நிறை குறைப்பது?

வணக்கம், எனக்கு 6 மாதங்களுக்கு முன் குழந்தை கிடைத்தது. அதற்கு பின் 15கிலோ கூடியுள்ளேன்,டாக்ரர் நிறை குறைக்கும்படி கூறியுள்ளார்.எப்படி நிறை குறைப்பது? தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் கூறவும். குறிப்பாக தொடை,வயிறு,கை என்பவையே நிறை கூடிய பகுதி. எந்தவிதமான உடற்பயிற்சி சிறந்தது. நன்றி...

வணக்கம் லக்ஷனா. முதலில் தங்களுக்கும் தங்கள் குழந்தைக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தாங்கள் குழந்தைக்கு பால் கொடுப்பவராக இருந்தால் எடையை குறைக்க காலதாமதமாகும். காரணம் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடவேண்டும். ஆனால் அப்படி இல்லை என்றால் நல்ல உணவு கட்டுபாட்டிலும், உடற்பயிர்ச்சியிலும் எடையைக் குறைக்கலாம். வயிரு, தொடை கைகள், ஆகிய எல்லா உறுப்பிற்கும் சேர்த்து செய்யும் ஆரோக்கியமான உடற்பயிர்ச்சி நடை பழகுதல் தான். தினமும் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். நன்கு பழகிய பிறகு நேரத்தைக் குறைத்து வேகத்தைக் கூட்ட வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் நடந்த தூரத்தை அரைமணி நேரத்தில் நடக்க வேண்டும்.கைகளை நன்கு வீசி நடக்க வேண்டும். குளிர் காலத்தில் ட்ரெட்மில்லில் நடக்கலாம். அதன் கைப்பிடிகளைப் பிடிக்காமல் அதிலும் கைய்களை வீசி நடக்கவேண்டும்.மேலும் உணவு கட்டுப்பாட்டில் சாதாரனமாக சாப்பிடும் அளவிலிருந்து பாதியைக் குறைத்து அதர்க்கு பதிலாக பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு நீக்கிய பால் நிறைய்ய குடிக்கலாம். ஆகவே நடைபழகுதல், உணவு கட்டுபாடு,ஆகிய இரண்டு முயற்சியினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.

நன்றி மனோகரி உங்கள் கருத்துக்கு, நான் குழந்தைக்கு பால் கொடுப்பது இல்லை. சாப்பிடும்சாப்பாட்டை எப்படி குறைப்பது தயவுசெய்து கூறுங்கள்.

THuSHI

நல்லது லக்ஷனா, தாங்கள் கேட்டபடி சாப்பாட்டை எப்படி குறைப்பது என்று எனக்கு தெரிந்ததை எழுதுகின்ரேன்.பொதுவாக டயட் என்றவுடன் எண்ணெயை குறைப்பது, பாலை குறைப்பது, அரிசியைக் குறைப்பது போன்ற பொதுவான எண்ணத்தை விட்டு விட்டு நாம் சாப்பிடும் உணவின் அளவை (volume) குறைத்து சாப்பிடுவது தான் ஆரோக்கியமான டயட் முறையாகும்.உதாரணமாக இரண்டு கோப்பை சோறு சாப்பிடிவீர்களானால் அதை ஒரு கோப்பை சோறு எடுத்துக் கொள்ளவேண்டும். அதைப் போலவே நாம் உண்ணும் எல்லா பொருட்களையும் பாதியாக குறைத்துக் கொண்டால் கார சாரமாக உண்ட நாம் எதையும் இழக்க தேவையும் இருக்காது உடல் எடையைத் தவிர.
பொதுவாக நாம் இப்பொழுது நம் உடலின் தேவைக்கு மீறிய அளவில் தான் சாப்பிடுகின்றோம்.அதற்கேட்றார் உடல் உழைப்பும் அப்படி இல்லை. முதலில் அரைவயிராக சாப்பிடும் பொழுது கொஞ்சம் கடினமாக இருக்கும். எப்போழுதும் பசி எடுத்துக் கொண்டிருக்கும்.ஒரு வாரம் கழித்து நமது உடல் அதர்கேட்றார்ப் போல் மாறிவிடும். பாப் கார்னை (ready made அல்ல) வெறும் சட்டியில் போட்டு மூடி போட்டு பொரிய வைத்து வைத்துக் கொண்டால் பசிக்கும் பொழுது சிறிது சாப்பிடலாம்.தண்ணீர் நிரைய்ய குடிக்கலாம்.அளவு குறைவாக சாப்பிடும் பொழுதுதான் உடர்பயிற்சியினால் நல்ல பயன் கிடைக்கும்.ஆகவே எதைச் சாப்பிட்டாலும் kids size ல் எடுத்துக் கொண்டால், தினமும் mcDonald foods சாப்பிட்டால்கூட எடைகூடாது என்பது என் நம்பிக்கை.நன்றி.

வணக்கம் மனோகரி,உங்கள் கருத்துக்கு நன்றி.இந்த குறிப்பினை பின்பற்றி எனது நிறையினை குறைத்துவிட்டு மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன். உங்கள் அன்புக்கு நன்றி.

THuSHI

dear manohari madam...

i am a new visitor to arusuvai...
i am also in need of ur suggestion for reducing my tummy...
as i read ur above tips..in winter its better to walk in treadmill..i wish to follow that now.

i have 10 months old kid.. stopped feeding 2 months back..so shall i start my treadmill walk..
if s.. for how many mins???

moreover mam..my friend says not to do for 1 year as i underwent c-section i may get hernia...

wat hernia means???
is it she saying right???

pls reply me ...

ஹலோ balammu அறுசுவையின் புதிய வரவான தங்களை,மற்றும் தங்களின் குடும்பத்தையும் அறுசுவை சார்ப்பாக வருக.... வருக... என, வரவேற்ப்பதில் ம்கிழ்ச்சி அடைகின்றேன்.அதிலும் என்னை நோக்கி விடப்பட்ட கேள்விக்காக எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.உடற்பயிற்ச்சியைப் பற்றி பொதுவாக நான் கொண்டுள்ள கருத்துக்களை என்னால்தாராளமாக வழங்க முடியும். ஆனால் மருத்துவ ரீதியாக பதிலளிக்க என்னால் முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிச்சயமாக குழந்தை பிறந்த பின்புஉடற்பயிற்ச்சிகளை அவரவரின் உடல் நிலைகளுக்கேற்றவாறு செய்ய தொடங்கலாம். நீங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே உடற்பயிற்ச்சி செய்பவராக இருந்தால் நடை பழகுதலிலிருந்து அரம்பிக்கலாம். இதற்கும், அறுவைச் சிகிச்சைக்கும், ஹெர்னியாவிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று தான் நினைக்கின்றேன்.

ஆனால் அவ்வாறு இதற்கு முன்பு எப்போதுமே உடற்பயிற்ச்சி செய்யாதவராக இருந்தால், அறுவைச் சிகிச்சையில் குழந்தை பெற்றிருந்தால் நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனைப்படியே எந்த மாதிரியான உடற்பயிற்ச்சியை செய்வது என்று கேட்டு தொடங்குவது தான் நல்லது என்பது என்கருத்து. நன்றி.

நன்றி மனோகரி மேடம்...
நான் தமிழில் எழுதும் 1 கடிதம் இது...

hello mano mam,
eppadi tamil la type pannuvathu? any software is there?
pls.do reply for me
kavyapaul

go to http://www.arusuvai.com/tamil_help.html. மிக எழிதாக தமிலில் type பன்னலாம்.

anunissa
ஹலோ லக்க்ஷனா நீங்க இலங்கையா "தெஹிவல" நான் நிஷாஅனுஷாத் ஞாபகம் இருக்கா

anunissa

மேலும் சில பதிவுகள்