க்ரீமீ கஸ்டர்ட் கப்ஸ்

தேதி: March 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

க்ரீம் செய்ய:
பால் - அரை லிட்டர்
கஸ்டர்ட் பவுடர் - 3 மேசைக்கரண்டி (வெனிலா ஃப்ளேவர்)
மைதா - 2 தேக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் - 2 தேக்கரண்டி
சீனி - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடல்பாசி செய்ய:
கடல்பாசி - சிறிய கைப்பிடி அளவு (5 கிராம்)
சீனி - 4 மேசைக்கரண்டி
ஃபுட் கலர் - சில துளிகள்
வெனிலா எசன்ஸ் - ஒரு துளி
கிவி பழம் - ஒன்று


 

க்ரீம் செய்ய கொடுத்துள்ளவற்றில் வெண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து க்ரீம் பதத்திற்கு காய்ச்சவும்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் கொதிக்கும் தண்ணீரில் கடல்பாசியைப் போட்டு கரைந்ததும் சீனி மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் இறக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆறவிடவும்.
காய்ச்சி வைத்துள்ள க்ரீமுடன் வெண்ணெயைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.
தயார் செய்த க்ரீமை சிறு கோப்பைகளில் ஊற்றி, செட் ஆகும் வரை (5 நிமிடங்கள்) வைத்திருக்கவும்.
அதன்மீது வட்டமாக நறுக்கிய கிவி பழத்தை வைக்கவும்.
பிறகு அதன் மேல் ஆற வைத்துள்ள கடல்பாசியை ஊற்றவும்.
க்ரீமீ கஸ்டர்ட் கப்ஸ் ரெடி. ஃப்ரிஜில் வைத்தெடுத்துப் பரிமாறவும்.

கிவி பழம் கிடைக்கவில்லையெனில் ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி என ஏதேனும் ஒரு வகைப் பழத்தைச் சேர்த்துச் செய்யலாம்.

ஃபுட் கலர் ஒரு சில துளியே விட வேண்டும், அடர் நிறத்தில் இருந்தால் உள்ளிருக்கும் பழம் கண்ணுக்கு தெரியாமல் போகும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு... கடைசி படத்துக்கு முந்திய படம் அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு அருமை முசி. ட்ரை பண்றேன். ஃப்ரெஷ் க்றீம் கண்டிப்பா யூஸ் பண்ணணுமா? அதுக்கு பதில் வேற ஏதும் யூஸ் பண்ணலாமா? இங்க கடல்பாசி கிடைக்கிறது கஷ்டம். ஜெலட்டின்தான் யூஸ் பண்ணனும். ஜெலட்டின் யூஸ் பண்றதா இருந்தா எவ்வள்வு போடனும்?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

100 வது குறிப்புக்கு வாழ்த்துக்கள் முசி, கலர்ஃபுல் கஸ்டர்ட் நல்லா இருக்கு, கஸ்டர்ட் பௌடர் எங்கே கிடைக்குது ஃப்ரான்ஸில்?

Eat healthy

கஸ்டர்ட் கப்ஸ் சூப்பர். கிவி பழத்தோட இந்த கப்ஸ் பார்க்கும் போது ரொம்ப அழகாக கலர் புல்லா சூப்பரா இருக்கு. உங்களோட நூராவது குறிப்புக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்.

குறிப்பும், போட்டோஸும் அழகாக இருக்கு. 100 வது குறிப்புக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.. இன்னும் வித விதமாக நிறைய குறிப்புகள் கொடுப்பதற்காகவும் வாழ்த்துக்கள்...

கலை

இது உங்களோட 100வது குறிப்பா? சாரி தெரியாது. வாழ்த்துக்கள் முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

100 வது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை டீம்மிர்க்கு,மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி:முதல் பதிவிர்க்கும் வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி.

உமா:பிரஷ் கிரிம் இல்லாமலும் செய்யலாம்.பாலிலன் அளவை சற்று கூட்டி கொள்ளவும்.ஒரு ஜெலடின் தாளின் அளவு 2 கிராம் ஆகும்.நான் இதற்க்கு 5 கிராம் எடுத்தேன்.மீண்டும் வாழ்த்தியத‌ர்க்கு நன்றி உமா.

ரசியா:என்னொட‌ 100வது குறிப்பிர்க்கு நியாபகமாக‌ பாராட்டியதர்க்கு மிக்க‌ நன்றி,தமிழ் கடையில் கிடைக்குமே.அடிக்கடி அறுசுவை பக்கம் வந்து போங்க‌,ரசியா.

பாலபாரதி:வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.

கலை:வாழ்த்திர்க்கு ரொம்ப‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பரான சுவையான குறிப்பு முசி, வாழ்த்துக்கள்

செல்வி மேடம் குறிப்புல(பீட்ரூட் சப்பாத்தி) தெரியாம என் பெயரை போட்டுட்டீங்க முசி, மாற்றிடுங்க.
நன்றி

அன்பு முசி,
நூறாவது குறிப்புக்கு வாழ்த்துக்கள்! பார்க்கவே சாப்பிடணும் போல‌ இருக்கு. பார்ட்டிக்கு செய்தால் நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

க்ரீமீ கஸ்டர்ட் கப்ஸ் ஸூபர்

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி,சாரி பா ஏதோ யோசனையில் பெயரை மாற்றிவிட்டேன்.சுட்டி காட்டியமைக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி,செய்து பாருங்க‌,நல்லா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

க்ரீமி கஸ்டர்ட் கப்ஸ் சூப்பரா, பார்க்கவே சாப்பிடனும்போல இருக்கு. படங்களும் அழகு! அசத்தலான 100 வது குறிப்புக்கு வாழ்த்துக்கள் முசி!

அன்புடன்
சுஸ்ரீ

க்ரீமி கஸ்டர்ட் கப்ஸ் சூப்பர்.kiwi பழம் வைத்திருப்பது தான் அழகு...பார்க்கவே சாப்பிடனும்போல இருக்கு... 100 வது குறிப்புக்கு வாழ்த்துக்கள் முசி!

சூப்பராக இருக்கிறது இந்தக் குறிப்பு. நூறாவதா! அதற்கு மேல் இருக்கும் என்று நினைத்தேன். இன்னும் அதிக குறிப்புகள் கொடுக்க வேண்டும் முசி. உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

முசி நூறாவது குறிப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :) குறிப்பு மிக அருமையாக உள்ளது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,சுஸ்ரீ.
100 வது குறிப்பிர்க்கு மறக்காமல் பதிவிடும் உன் அன்பிர்க்கு நன்றி,கலை.
அன்பான‌ வாழ்த்திர்க்கு ரொம்ப‌ நன்றி.இமாம்மா.
தொடர்ந்து பாராட்டும் உங்க‌ அன்பிர்க்கு நன்றி.அருள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.