தேதி: March 31, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - 2 கப்
பீட்ரூட் - 2 (சிறியது)
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணெய் (அ) நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் விட்டு துருவிய பீட்ரூட், சர்க்கரை மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.

சர்க்கரை இளகியதும் தண்ணீர் விட்டு நன்கு சுருள வதங்கி வரும். வதங்கியதும் இறக்கி வைத்து ஆறவிடவும்.

ஆறியதும் அதனுடன் கோதுமை மாவு சேர்த்து பிசையவும். (பிசைவதற்கு ஈரப்பதம் போதவில்லையெனில் சிறிது வெந்நீர் தெளித்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்).

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தொட்டுக் கொண்டு மெல்லிய சப்பாத்தியாக போட்டுக் கொள்ளவும்.

தோசைக் கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக சிவந்ததும் எடுக்கவும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கலர் ஃபுல்லான பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி ரெடி.

சர்க்கரை சேர்ப்பதால் மாவைப் பிசைந்த பிறகு அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது.
Comments
செல்வியக்கா
கலர்ஃபுல் சப்பாத்தி அக்கா. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
செல்வி
கலர்ஃபுல் சப்பாத்தியா வருது வருசையா... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Selvi madam
என் மகளுக்கு பீட்ரூட் இட்லி செய்து கொடுத்துள்ளேன், சப்பாத்தி செய்ததில்லை செல்வி மேடம்,அவசியம் டிரை பண்றேன்
செல்வியக்கா
குட்டிஸ்க்கு ரொம்ப பிடிக்கும்.நல்லாஇருக்கு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
செல்வியக்கா
அக்கா சப்பாத்தி செய்து மகளுக்கு கொடுத்தேன். ரொம்ப நல்லாருந்தது. குறிப்புக்கு நன்றிக்கா.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
நன்றி உமா
அன்பு உமா,
அதுக்குள்ளே செய்தும் பார்த்துட்டீங்க! ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.
வனி
அன்பு வனி,
இனிப்பு சப்பாத்தி செய்யும் போது காரம் வேணும்னு செய்தது, மற்ற இரண்டும்(?!)
எப்பவுமே ஒரு விதமாக செய்யும் போது, கூடவே இன்னொன்றையும் முயற்சிப்பேன். ஒண்ணு காலை வாரினாலும், ஒண்ணு கை கொடுக்கும்கிற நம்பிக்கை:)
அன்புடன்,
செல்வி.
வாணி
அன்பு வாணி,
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்க வீட்டு குழந்தைக்கே பிடிச்சதில்ல:)
செய்துட்டு சொல்லுங்க.
அன்புடன்,
செல்வி.
ஆமாம் முசி
அன்பு முசி,
நிச்சயம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
அன்புடன்,
செல்வி.
கலர்ஃபுல் & ஹெல்தி சப்பாத்தி!
செல்விக்கா, கலர்ஃபுல் & ஹெல்தி சப்பாத்தி... அதுவும் இனிப்பா! ;-) கண்டிப்பாக என் பசங்களுக்காகவே முயற்சிக்கிறேன். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
பீட்ரூட் சப்பாத்தி
செல்விக்கா சப்பாத்தி கலர் அழகா இருக்கு :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சுஸ்ரீ
அன்பு சுஸ்ரீ,
கண்டிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும். செய்து பாருங்க.
அன்புடன்,
செல்வி.
அருட்செல்வி
அன்பு அருட்செல்வி,
கலர் மட்டுமல்ல. டேஸ்ட்டும் நல்லா இருக்கும்.
அன்புடன்,
செல்வி.