எச்சரிக்கை தோழிகளே! உஷார்!

எச்சரிக்கை தோழிகளே!
எங்கள் அம்மா வீட்டிற்கு அருகில் நடந்தது. குழந்தை பெற வேண்டும் என்பதற்காக வேப்பமர பட்டையை உரித்து 2 சொம்பு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, 1 1/2 டம்ளர் ஆக்கி குடித்துள்ளார் ஒரு பெண். கசப்பின் தன்மை தொண்டையை அடைக்க பலனின்றி இறந்து விட்டார்.

குழந்தை பேரு அடைவதற்காக எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் போது தயவு செய்து நன்கு யோசித்து சிந்தித்து செயல்படுங்கள்.

வேப்பமர பட்டையை குடிகாதிங்க.

இதுபோல் பின் விளைவுகளை யோசித்து செயல்படுங்கள்.

கடவுள் நமக்கு துணை இருப்பார். கண்டிப்பாக நமக்கு குழந்தையை கொடுப்பார்.

உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!உஷார்!

Thank u so much for your reply.operation apadina konjam payama iruku pa athan keten.

PURIYATHA PIRIYAM PIRIYUM POTHU PURIYUM
NANDRIKALUDAN
ANGEL

Thank u for yr kind reply.neenga elarum reply kuduthathu romba happy ah iruku.

PURIYATH PIRIYAM PIRIYUM POTHU PURIYUM

//இதை படிப்பவர்கள் இனி மேல் இந்த மாதிரி செயல்களில் ஈடு பட மாட்டார்கள்.// :-) யார் என்ன சொன்னாலும் சிலர் மட்டும்தான் யோசிக்கிறவங்க பாலபாரதி.

//இது போல் எந்த ஒரு முயற்சியும் செயும்போது பெரியவர்களின் துணையோடு கலந்தாலோசித்து ஈடுபடுவது நல்லது.// இந்த விடயத்தில் பெரியவர்கள் சொல்வது கூட சரியாக இருக்க வேண்டும் என்பது இல்லை சங்கீதா. அவர்கள் சொல்லித்தானே பலரும் செய்கிறார்கள்!! ;( வயது மட்டும் அனுபவத்தைக் கொடுப்பதில்லை.
இந்த மாதிரி மருந்துகளைத் தாங்கள் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையே வந்திராது. ஆனால் யாரோ செய்ததை, சொன்னதை வைத்து சின்னவர்களுக்கு அட்வைஸ்!! அனுபவிக்கிறது சாப்பிடும் ஆள்தான். ;(
இப்படிச் செய்யாமல் சிந்தித்துச் செயல்படும் பெரியவர்களுக்கு ஒரு சல்யூட்.

என்ன நடந்தாலும் கடைசியில் மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும். ஆரம்பம் முதலே அவர்கள் ஆலோசனையோடு நடந்தால் ஒரு பிரச்சினை என்றால் கூட எப்படி சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குப் புரியும். "என்ன சாப்பிட்டாங்க?" என்று கேட்டால் சொல்ல நோயாளியை அழைத்துப் போனவர்களுக்குத் தெரிய வேண்டும். "இதையும் அதையும் இன்ன விகிதத்தில் கலந்து அவித்து, இத்தனை பங்கு ஆனதும் குடிக்கக் கொடுத்தேன்," என்று சொன்னால் மருத்துவர் என்னதான் புரிந்து கொள்வார்!! எப்படி மாற்று மருந்து கொடுப்பது! கடைசியில் சிரமம் யாருக்கு!!

//இறந்து விட்டார்.// ஹ்ம்! வேறு எதையாவது கூட சாப்பிட்டிருக்கலாம் அவங்க. உங்களுக்கும் சரியாகத் தெரியாது இல்லையா!! :-) வேப்பம் பட்டை கசாயம் குடிக்கும் எல்லோரும் இறந்தது இல்லை. :-)

//பின் விளைவுகளை யோசித்து செயல்படுங்கள்.// இதைச் சொல்லத்தான் இப்போ இமா வந்ததே. இப்படியான மருந்துகளின் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது சரியாகத் தெரிய வாராது யாருக்கும். விசாரிப்பதில் பயனில்லை. ரெக்கார்ட் எல்லாம் இராது. பிரச்சினை இல்லை என்று சொல்வர் பிரச்சினை அனுபவிக்காதோர். பிரச்சினை அனுபவித்தவர்கள் இதனால்தான் பிரச்சினை என்பதைப் புரிந்திருப்பார்களோ என்னவோ! ரிஸ்க் எதுக்கு!!

வாழ்க்கையில் சில விடயங்களை அனுபவிக்காமல் இருப்பதே நல்லது. ;)

‍- இமா க்றிஸ்

நம்ம ஊரில் பிள்ளை இல்லைன்னா பொண்ணை பேசும் பேச்சுக்கு பயந்தே பாதி பெண்கள் எதை தின்றால் பித்தம் தெளியும்னு பார்க்கறாங்க. நிறைய பேர் பிள்ளை இல்லை என்பதை விட அதிகமா வருத்தப்படுவது மற்றவர் பேச்சுக்கு தான். அந்த ஏச்சு பேச்சுக்கு பயந்து எதையும் செய்ய தயாரா இருக்காங்க. கஷ்டப்படப்போறது அந்த பொண்ணு தானே... வைத்தியம் சொல்றவங்களுக்கு என்ன போச்சு? இமா சொன்னது போல மருத்துவமனை வைத்தியங்களை கூட நான் நம்புறதே இல்லை... இதே பிள்ளையின்மைக்காக வைத்தியம் பார்க்க போய் எமன் வீட்டு வாசல் கதவை தட்டிவிட்டு வந்த பெண்கள் சிலரை தெரியும் எனக்கு. மருத்துவர்களே கைவிட்ட கேஸ் எல்லாம். பிழைத்தது கடவுள் அருள்னு தான் நினைப்பேன். அவங்க பண்ண வைத்தியம் ஏன் தப்பா போய் உயிருக்கு ஆபத்தா போச்சுன்னு இம்புட்டு படிச்சுட்டு வந்த அவங்களுக்கே தெரியல... அப்பறம் சாதாரண வேப்பம்பட்டை சாப்பிட்டதில் என்ன ஆச்சுன்னு கொடுத்தவருக்கு தெரியுமா என்ன? நிறைய பேர் இந்த வைத்தியங்கள் செய்ய காரணம்.. இயற்கையா உள்ளது தானே, இதை சாப்பிட்டு நல்லது நடந்தா நடக்கட்டுமே... கெட்டது இல்லை என்ற நம்பிக்கை. ஆனால் மருந்துகளில் கூட அலர்ஜி என்றென உண்டு. கத்திரிக்காய் சாப்பிட்டா அலர்ஜி ஆகுறவங்க இல்லையா? அப்படி தான்... வேப்பம்பட்டையில் உயிர் போயிருக்கவும் வாய்ப்பு இருக்கு. சிலவற்றோடு சிலவற்றை சேர்த்து சாப்பிட்டால் தப்பு நடக்க வாய்ப்பு அதிகம் தான். பொதுவாகவே நாட்டு மருந்துகள் சொல்பவர்கள் பத்தியமும் சொல்வாங்கன்னு கேட்டிருக்கேன்... அதுக்கு இது தான் காரணம். சிலது அளவு இருக்கு... அதை சரியா எடுக்கலன்னா? விஷமாகும். பெரியவங்களை தயவு செய்து கேட்காதீங்க... மாமியார் மகனுக்கு வாரிசு வேணும்னு சொல்வாங்க, அம்மாக்கள் பொண்ணு வாழக்கைன்னு சொல்வாங்க... மொத்தத்தில் யாருமே உங்களை விடப்போறதில்லை. கடவுளை நம்புங்க... நல்லது நடக்கும், இந்த வைத்தியம் எல்லாம் முயற்சி செய்து உள்ளதும் போச்சுன்னு ஆக்கிடாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா இமா, வனிதா நீங்க ரெண்டு பேர் சொல்றதும் ரொம்ப சரி நெறைய பேர் பலரோட பேச்சிக்கு பயந்துதான் இதுபோல வேலைகள ஈடுபட்ரங்க. சில நேரத்துல பெரியவங்களுகுமே தெரியறது இல்லைதான். கடவுளை நம்பனும் சரியான மருத்துவரை அணுகனும், இதெல்லாமும் இருக்கு. சிந்தித்து செயல்படுவதே சிறந்தது.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்