சின்ன வெங்காய சாம்பார்

தேதி: April 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

அறுசுவை டீமின் சின்ன வெங்காய சாம்பார் குறிப்பினைப் பார்த்து சிறு மாற்றங்களுடன் செய்தது.

சின்ன வெங்காயம் - கால் கிலோ
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மைசூர் பருப்பு - ஒரு கப்
கல் உப்பு - தேவையான அளவு
வெல்லம் - ஒரு தேக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு

புளியுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து ஊற வைத்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மசாலாப் பொருட்களையும், தேங்காய் துருவலையும் தனித்தனியாக வறுத்தெடுத்து ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைக்கவும். மைசூர் பருப்புடன் தேவையான அளவு நீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்தெடுத்து மசித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகைப் போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் தோலுரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த மைசூர் பருப்பைக் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிட்டு, புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்றாகக் கொதிக்கவிடவும்.
அதனுடன் தேங்காய் மசாலா விழுதைச் சேர்த்து கிளறவும்.
நன்றாக கொதி வந்தவுடன் கறிவேப்பிலையை கசக்கித் தூவி இறக்கவும்.
சுவையான சின்ன வெங்காய சாம்பார் தயார்.

சாம்பார் சுவை பிரமாதம். குறிப்பை தந்த டீமுக்கு நன்றி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

எனக்கு நம்ம டீம் போட்ட பழைய குறிப்புகள் எல்லாம் விருப்பம்... நல்லா வரும், அளவு பிசகாம. அவசியம் செய்து பார்க்குறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா சின்னவெங்காயம் தனியாக வதக்கிபோட்டு செய்திருப்பது, பார்க்கவே நல்லா இருக்கு :) முயற்சிக்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உண்மை வனி. இட்லிக்குதான் இந்த சாம்பார் செஞ்சேன். ரொம்ப அருமையா இருந்தது.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி செல்வி. அவசியம் செஞ்சு பாருங்க நல்லாருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சாம்பார் நல்லா இருக்கு, நாங்களும் இதே போன்று செய்வோம்,பருப்பு குழம்புன்னு சொல்வோம். சின்ன வெங்காயம் தான் கிடைப்பது அரிது

அன்பு உமா,
சின்ன‌ வெங்காய‌ சாம்பார்னாலே தனி ருசிதான். அதிஉம் அரைத்து விட்டு... ம்ம்ம்..
ஆனா, மைசூர் பருப்பில் நான் இப்படி செய்ததில்லை. செய்து பார்க்கணும்.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப நல்லா இருக்குங்க... டிரை பண்றேன்

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி வாணி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி அக்கா. இங்க துவரம்பருப்பு விலை அதிகம். நாங்க கூடுதலா யூஸ் பண்றது மைசூர் பருப்புதான்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி ப்ரியா. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா