கொள்ளுப் பருப்பு

தேதி: April 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

கொள்ளு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - கால் கப்
தனியா - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறு துண்டு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 இணுக்கு
வரமிளகாய் - 3 (அவரவர் காரத்திற்கேற்ப)
தக்காளி - ஒன்று
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். கொள்ளை நன்கு சுத்தம் செய்து கல் போக அரித்தெடுக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியைத் தோல் நீக்கி வைக்கவும்.
குக்கரில் கொள்ளுடன் மஞ்சள் தூள், தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் நறுக்கிய தக்காளி போட்டு, மூழ்கும் அளவு நீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் அடுப்பை சிறு தீயில் வைத்து தனியா, சீரகம் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றை எடுத்து ஆறவிடவும். குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து வேகவைத்த கொள்ளையும் எடுத்து ஆறவிடவும்.
ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு உப்புச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
சுவையான கொள்ளுப் பருப்பு தயார். நெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.

இவை அனைத்தையும் குக்கரில் போட்டு வேகவிட்டு ஆறவைத்து அரைத்தும் சாப்பிடலாம். வெங்காயத்தை வதக்காமல் போடும் போது ஒரு துளிகூட எண்ணெய் இல்லாத கொள்ளுப் பருப்பு இன்னும் ஆரோக்கியமானதே!

இந்த கொள்ளுப் பருப்பு தயார் செய்த சில மணி நேரங்களிலேயே புளித்து போய்விடும். அதனால் இதை ஒரு வேளைக்கு மட்டுமே சாப்பிடலாம். தக்காளிக்கு பதிலாக புளி (சிறு கோலி அளவு) சேர்த்தால் மாலை வரை வீணாகாமல் இருக்கும்.

கொள்ளு உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகிறது நார்ச்சத்து உடையது. இது சூடான உணவு என்பதால், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் டீமிற்கு மிக்க நன்றி :) குறிப்புகள் அனுப்பி நாட்களாகிவிட்டாலும், ஒவ்வொன்றாக வெளிவரும்போது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சத்தான குறிப்பு செல்வி. அவசியம் ட்ரை பண்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இது போல எங்கோ சாப்பிட்டிருக்கேன்... யோசிச்சாலும் நினைவுக்கு வரல. அவசியம் செய்துடுறேன் அருள். :) சளிக்கு கொள்ளு நல்லதாச்சே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இங்கலாம் கொள்ளு அடிக்கடி செய்வது வழக்கம், சின்ன வயசிலிருந்தே ரொம்ப பிடிச்ச ஐட்டம் கூட எனக்கு :) வேண்டுமானால் 4 மிளகு கூட சேர்த்து போட்டு அரைத்துவிடுங்கள் சளிக்கு நல்லது. கூடவே இரசம் குறிப்பும் அனுப்பி இருக்கேன்.
மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கொள்ளு ரசம்,சாம்பார் வைத்துள்ளேன்,இந்த முறையில் செய்ததில்லை,அடுத்து செய்து விடுகிறேன். டெடி நல்லா இருக்கு அருள், நானும் ஒரு ரெஸிப்பியில் நாய்க்குட்டி வைத்து அனுப்பினேன். எப்போ வருதுன்னு தெரியல.

அதுசரி கர்ப்பமா இருக்கிரவங்க கொள்ளு சாப்பிடக் கூடாதுதானே அருள்

அருள் அக்கா,
சுலபமான‌ , சத்தான‌ குறிப்பு .....
அருள் அக்கா டெடி சூப்பர் அக்கா, சாப்பிடற‌ மாதிரி அழகா போஸ் கொடுக்குது.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடவும்// - இப்ப எந்த மருத்துவரும் நோ சொல்றதில்லை உணவு விஷயத்தில் :) அதனால் பெட்டர் அவங்களை கேட்காம சுடான கொள்ளை கர்ப்பமா இருக்கவங்க அவாய்ட் பண்றது தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருள்
உங்க குறிப்பில் இடையூறுவதற்க்கு மன்னிக்கவும்.
வனி உங்க மிக்ஸ்ட் ஃப்ரூட் அல்வா ரெசிப்பியோட லிங்க் கொஞ்சம் கொடுங்களேன். இன்றைக்கு செய்து பார்க்கலாமென்றிருக்கேன்.
நன்றி

ஹாய் அருள் நானும் இது போல தான் செய்வேன்.... அரைக்காமல் மத்தால் நன்கு கடைந்து விடுவேன்....ஆனால் இஞ்சி மட்டும் சேர்த்ததில்லை. வேகவைத்த நீரில் ரசம் வைப்போம் எனக்கும் இது மிக பிடிக்கும்... அந்த ரசத்துடன் சிறிது பருப்பும் கலந்து சாப்பிட்டால் சுவை அலாதி தான்... அம்மை போட்டவர்களுக்கு முதல் தண்ணி ஊத்திய பிறகு இந்த பருப்பு கொடுப்பாங்க......

அன்பு அருட்செல்வி,
நம்ம‌ ஊர் ஸ்பெஷல்!! மிக்ஸியில் அரைப்பதை விட‌, உரலில் ஆட்டி எடுத்தா அதன் சுவையே தனி, இல்ல‌? நெய் சேர்த்து சாப்பிட‌ அருமை தான். நான் இரண்டு காய்ந்த‌ மிளகாய், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து செய்வேன். கூட‌ கொஞ்சம் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைப்பேன்.

அன்புடன்,
செல்வி.

எனக்கு மிகவும் பிடித்த‌ பருப்பு. செய்முறையும் இதே தான். அடிக்கடி செய்வேன். தெளிவான‌,விளக்கமான‌ குறிப்பு!.
ஆனா ஒரு விஷயம், பச்சை பசேல்ன்னு எவ்வளவு கறிவேப்பில்லை! என் காதுல‌ நல்லா புகை வருதுங்க‌ :). சீசனுக்கு தான் இங்க‌ கறிவேப்பில்லை வரும்.

அன்புடன்
உஷா

வாணி அடிக்கடி இந்த சமையல் இங்கெல்லாம் செய்வதுண்டு. நான் இந்த பொம்மையை அன்னிக்கு சொல்லவில்லை, வேற குறிப்புக்கு, வேறு பொம்மா அனுப்பி இருக்கேன் :))

//கர்ப்பமா இருக்கிரவங்க கொள்ளு சாப்பிடக் கூடாதுதானே // நான்லாம் சாப்பிடிருக்கேன், ஆனாலும் உடல் பொறுத்து மாறுபாடுகள் உண்டாகலாம் என்பதாலேயே, மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற சொல்லி எழுதினேன்.
மிக்க நன்றி வாணி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுபி, ஆமாம் மிக எளிதான சமையல் குறிப்பு இது, எல்லா பொருளையும் குக்கரில் இட்டால் வேலை முடிஞ்சிது, ஆறவைத்து அரைப்பதற்கு, சில நிமிடம் கூட ஆகாது. மிக்க நன்றி சுபி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி நீங்கள் சொல்வது சரிதான், சிசேரியன் பண்ணாக்க தேங்காய் சேர்க்கவே கூடாதுனு வீட்ல சொல்வாங்க, ஆனா மருத்துவர் எல்லாமே சாப்பிடலாம்னு சொல்வாங்க. உடல் அமைப்பை பொறுத்து, மாறினாலும் மாறும்.
மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்ஸ்ட் ஃப்ரூட் அல்வா செய்திட்டீங்களா? இடையூறு செய்தமைக்கு அல்வா பார்சல் வந்தே ஆகணும் சரியா? :)))))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எப்படி இருக்கீங்க ப்ரியா? பார்க்கவே முடில?
என் தோழி ஒருவர் இப்படித்தான் சொல்வாங்க. நான் இன்னும் ட்ரை பண்ணல. நானும் கொள்ளு தண்ணிய இருத்து இரசம் வைப்பேன் :)கூட தக்காளி போட்டு, குறிப்பு அனுப்பி உள்ளேன். குழந்தைகளுக்கும், பிறந்த குழந்தைகளுக்கு, உடலில் சிறு குருணை குருணையாக தோன்றும், அதற்கு கொள்ளு வேகவைத்து புடைப்பார்கள், மேலும் குழந்தைக்கு குளிக்க வைக்கும் போது கொள்ளும் சேர்த்து அரைத்து பூசி குளிப்பார்கள், அப்பொழுது உடலில் உண்டான குருணைகள் மறையும். ஆனால் மருத்துவர்கள் வேண்டாம் என சொல்வதால், யாரும் இப்போதெல்லாம் இதை செய்வதில்லை.

மிக்க நன்றி ப்ரியா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆட்டுக்கல் இன்னும் வாங்கல, நானும் ட்ரை பண்ணிட்டே இருக்கேன், வாங்கவே முடில, வாங்கிட்டு கொள்ளுபருப்பு அரைச்சே ஆகணும் :)) நானும் ப.மிளகாய் போட்டதுண்டு, ஆனால் மல்லிதழை போட்டதேயில்லை, அடுத்தமுறை இது போல் செய்து பார்க்கிறேன், மிக்க நன்றி செல்விக்கா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உஷா, காதுல புகை வரலேணா வருத்தமாயிருப்பேன். போடறதே அதுக்குத்தான் :)))
இங்கயும் இப்பலாம் பூச்சி புடுச்சுகெடக்கு போங்க :(

கொள்ளு குதிரை சாப்புடுதோ இல்லியோ, நமளாம் நல்லாவே ச்சாப்புடறோம் :) நான் முதல்ல ஒருமுறை கொள்ளு பருப்பு செய்யும் போது, பக்கத்தாத்து மாமி, என்னங்க இது குதிரைக்கு வைக்கிறத நீங்க சாப்பிடுறீங்கனு ஆச்சர்யமா கேட்டாங்க. அப்பரம் அவங்களுக்கும் இந்த ரெசிப்பி பிடிச்சிருச்சு :)

மிக்க நன்றி உஷா :) கறிவேப்பிலை கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க கொள்ளுப் பருப்பு எனக்கு சாப்பிடணும் போல இருக்கு, ஆனால் வாங்க கொஞ்ச நாள் ஆகும்ன்னு நினைக்குறேன். மிக்ஸ்ட் அல்வா செய்து நானே எல்லாவற்றையும் சாப்பிட்டுட்டேனே :) உங்களுக்கு படத்தோட அல்வா வந்திட்டிருக்கு. பார்த்துட்டு சொல்லுங்கோ :))

இங்கயும் இப்பலாம் பூச்சி புடுச்சுகெடக்கு போங்க/// அப்பிடியா :) இன்னைக்கு எனக்கு நல்ல தூக்கம் தான் போங்க!.

அன்புடன்
உஷா

நம்ம‌ ஊர்ல தாங்க கொள்ளு பருப்பு அதிகம் சேர்த்துப்போம். நானும் இதேபோல தான் செய்வேன் ஆனால் பருப்பு மத்து கொண்டு கடைந்து விடுவோம். உங்கள் குறிப்பை பார்த்தவுடன் நேத்து பருப்பு கூடவே கொள்ளு ரசமும் செய்து விட்டேன். கடைசி படம் ஸூபர். வாழ்த்துக்கள்.

கொள்ளு பருப்பு சூப்பர் அருள்!. படங்களே பளிச்சுனு செய்துபார்க்க சொல்லுது!. :-) நம்ம வனியோட குறிப்பு கொள்ளு ரசம் அடிக்கடி செய்வதுண்டு, அப்புறம் கொள்ளு சுண்டல் மாதிரிகூட ட்ரை பண்ணியிருக்கேன். உங்களோட இந்த பருப்பு கட்டாயம் கூடிய விரைவில் செய்திட்டு சொல்றேன்.

கடைசி படத்தில இருக்கும் க்யூட்டான பொம்மை பார்த்ததும், நான் ஒருமுறை என்னோட பனானா சாக்லெட் ப்ரெட் குறிப்பில், என் பொண்ணோட பேவரட் டால் போட்டோ போட்ட ஞாபகம் வந்திடிச்சி! ;-)

அன்புடன்
சுஸ்ரீ

போன‌ வாரம் உங்க‌ கொள்ளு பருப்பு செய்து சாப்பிட்டாச்சு அருள்!
சூப்பர் டேஸ்ட், எனக்கு ரொம்ப‌ பிடிச்சுது! :‍) இனி இதையும் அடிக்கடி செய்திடுவேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

///இங்கயும் இப்பலாம் பூச்சி புடுச்சுகெடக்கு போங்க/// அப்பிடியா :) இன்னைக்கு எனக்கு நல்ல தூக்கம் தான் போங்க!..//
(சேச்சே.. இப்படியா உண்மைய சொல்வேன்,) அது வந்துங் உஷாங், இப்ப மருந்து அடிச்சு, பூச்சி கொஞ்சம் கொறஞ்சிடுச்சு, மீண்டும், தள தளனு வளருது...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாம் பார்வதி நீங்க சொல்வது சரிதான், அடிக்கடி கொள்ளு பருப்பு செய்வது வழக்கம் :)
ஓ செய்து சாப்பிட்டிங்களா, மிக்க சந்தோஷம், அரைச்சு செய்தீங்களா?
மிக்க நன்றி பார்வதி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுஸ்ரீ படங்கள் பளிச்சினு சொன்னதே, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு :)
வனியோட கொள்ளு இரசம் தேடி பிடிச்சுடுடறேன் :)
நான் சுண்டல் போல இதுவரை ட்ரை பண்ணியதில்லை.
உங்க பனானா சாக்லெட் ப்ரெட் குறிப்பும் தேடிகண்டுபிடிச்சிடறேன் :)
பதிவு கொஞ்சம் தாமதமாகிவிட்டமைக்கு சாரிப்பா.

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சுஸ்ரீ :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப‌ லேட்ட்ட்ட்ட்டா ரிப்ளை பண்றேன்... என் மகனுக்கும் கொள்ளு புடைச்சிருக்கோம்... அவனுக்கு தோலே சொர‌ சொரனு கலரா திட்டு திட்டா இருந்தது... ரெண்டு தடவ‌ செஞ்சோம்... ஆனா வளர‌ வளர‌ தான் மாறுச்சு...