பூண்டு ஊறுகாய்

தேதி: April 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பூண்டு - 150 கிராம்
பச்சை மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 10
பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
வரமிளகாய் - 3
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புளிக்கரைசல் - கால் கப்
வினிகர் - கால் கப்
வறுத்துப் பொடிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு துண்டு
சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தோலுரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அத்துடன் வறுத்து பொடித்த தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு சுருள வதக்கவும்.
பிறகு பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
அத்துடன் புளிக்கரைசல் மற்றும் வினிகரை ஊற்றி பூண்டு வேகும் வரை சுருள வேகவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.
காரசாரமான பூண்டு ஊறுகாய் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஊறுகாய் சூப்பர் முசி. ஊறுகாய் கரண்டி அழகா இருக்கு. விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கடைசி படம் வெகு அழகு... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஊறுகாய் சூப்பர்.. எங்க வீட்டில் வெங்காயம் சேர்க்காமல் செய்வோம். நீங்க சொல்லிருக்க மாதிரி வெங்காயம் சேர்த்து செய்து பார்க்கிறேன்.

கலை

முசி பூண்டு ஊறுகாய் அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கடைசி படம் ரொம்ப அழகா இருக்கு பிஷ் மாதிரியே இருக்கு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் இது பூண்டு ஊறுகாயா முசி வற்றல் குழம்பு போல இருக்கேன்னு கேட்டேன், நாங்க பச்சை மிளகாய், வெங்காயம்லாம் ஊறுகாய்க்கு போட மாட்டோம் அதான்.

பூண்டு ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் செய்து பார்கிறேன்.. கடைசி படம் அழகாக‌ உள்ளது.. ஸ்பூன் ரொம்ப‌ நல்லா இருக்கு அக்கா..

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவிர்க்கு நன்றி.
முதல் பதிவிர்க்கு நன்றி,அவசியம் செய்து பாருங்க‌.உமா.
மிக்க‌ நன்றி,வனி.
வெங்காயம் சேர்த்து செய்வதால்,ஒரு வாரம் ஊரவிட்டு சாப்பிட்டால் நல்லா இருக்கும்.நன்றி,கலை.
நன்றி,அருள்.
வாழ்த்தீர்க்கு மிக்க‌ நன்றி.இது வற்றல் குழம்பு இல்லை,வெங்காயத்துடன் வினிகர் சேர்ப்பதால்,வினிகரில் பூண்டு,வெங்காயம் நல்லா ஊறி வித்தியாசமான‌ சுவையாக‌ இருக்கும்,தேவி விஜயாசேகர்.
வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.ஸ்ரீ அபிராமி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,
வெங்காயம் சேர்த்து பூண்டு ஊறுகாய்!!! ரொம்ப‌ நாள் தாங்குமா? கொஞ்சமா செய்துக்கணுமா? நேரம் கிடைத்தால் செய்து பார்த்திடுவேன் (யாராவது கொஞ்சம் நேரம் கடன் கொடுங்களேன்பா, ப்ளீஸ்!)

ஊறுகாயை விட‌ ஸ்பூன் மேலே தான் எனக்கு ஒரு கண்)

அன்புடன்,
செல்வி.

நான் கொஞ்சமாக‌ தான் செய்தேன்.வீட்டில் செய்யும் ஊறுகாய்க்கு வினிகர் சேர்க்க‌ மாட்டார்கள் தானே?நான் வினிகர் சேர்த்து செய்வதால் அதிக‌ நாள் இருக்கும்.சில‌ நாள்கள் பின் பிரிட்ஜில் வைத்து விடுவேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கு அந்த கரண்டி ரெண்டும் பார்சல் ப்ளீஸ். :-)

‍- இமா க்றிஸ்

பூண்டு ஊறுகாய் சூப்பர் முசி, கரண்டிகள் ஸ்பூன் ரெஸ்ட்டர் போன்றே உள்ளன.

காரசாரமான பூண்டு ஊறுகாய் நல்லாருக்கு, கடைசிப்பட ஸ்பூன்ஸ் ரொம்ப சூப்பர்!!

அன்புடன்
சுஸ்ரீ

ஊறுகாய் கரண்டியும்,அதில் இருக்குற ஊறுகாயும் சூப்பர்.

Be simple be sample

உங்களுக்கு இல்லாத்தா?ஆனால்,இது பீங்கான் கரண்டி,பார்சல் போட்டால் உடையாமல் கிடைக்குமா?

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு நன்றி வாணி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.