பட்டை

எனக்கு குழந்தைபிறந்து 9மாதம் ஆகிறது.. அறுவை சிகிச்சையின் மூலம் தான் எனக்கு குழந்தை பிறந்தது.. எனக்கு உடல் சற்று பருமனாக‌ இருக்கிறது.. எனக்கு பின் இடுப்பு வலி. கால் வலி இருந்தது. நல்ல‌ உடற்பயிற்சி மூலம் எனக்கு இப்போ வலி இருப்பது இல்லை.. ஆனால் உடல் பருமனாக‌ இருப்பது மிகவும் சிரமமாக‌ உள்ளது.. உடம்பை குறைக்க‌ தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் பட்டை போட்டு கொதிக்க‌ வைத்து அந்த‌ நீரில் தேன் கலந்து குடித்தால் பருமன் குறையும் என்று படித்தேன்.. இது உண்மையா.. இதனால் எதாவது பக்க‌ விளைவு வருமா? பட்டை சூடு என்று சொல்வார்கள் இதனால் கருப்பைக்கு எதாவது பாதிப்பு வருமா என்று கூறுங்கள்..

மேலும் சில பதிவுகள்