தலைமுடி

எனக்கு தலைமுடி நல்ல‌ நீளம் அடர்தி. ஆனால் இடையில் வெள்ளை முடி நிறைய‌ வருகிறது.. தலைமுடி கருப்பாக‌ எதாவது இயற்கை முறை உள்ளதா.. மருதானி போட்டால் தலைமுடி ஆரஞ்சு கலரில் தெரியும்.. கார்னியர் கலர் பயன் படுத்தலாமா இதில் எதாவது பக்க‌ விளைவு வருமா...

இங்க‌ சிலர் மருதாணி போட்டு ஊற‌ வைத்து பின்பு indigo போடுவார்கள், நல்ல‌ கறுப்பு கலர் கிடைக்கும். google-ல‌ தேடி பாருங்க, எப்படி போடுவதுனு நிறைய‌ டிப்ஸ் இருக்கும்.

//எதாவது பக்க‌ விளைவு வருமா...// உங்களுக்கு எத்தனை வயது என்று தெரியவில்லை. பொதுவாக இப்படியான தயாரிப்புகள் ரசாயனப் பொருட்கள் சேர்க்காமல் தயாரிக்கப்படுவது இல்லை. பெட்டியில் 'சென்சிட்டிவ் டெஸ்ட்' பற்றி எழுதி இருப்பார்கள். சாதாரணமாக வேறு எதுவும் அலர்ஜியாகாதவர்களுக்குக் கூட இவை அலர்ஜி ஆகலாம். பலருக்கு பிரச்சினை இருப்பதில்லை. முதல் சில, ஏன் பல வருடங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இராது. பிறகு ஒவ்வாமை அறிகுறி தெரியும். வேறு ப்ராண்ட் மாற்ற வேண்டும். மெதுவே அதுவும் ஒவ்வாமல் போகக் கூடும். மோசமானால் அதைப் போல சிரமம் வேறு இல்லை. தயாரிப்புகளை ஒவ்வொன்றாக மாற்றிப் பார்த்தாலும் செலவு, மனஉளைச்சல் தவிர வேறு எதுவும் ஆவது இல்லை. நிறைய வருடங்கள் பிரச்சினையே இல்லாமல் பயன்படுத்திய பின்புதான் பலருக்கும் இப்படி ஆகிறது. பிரச்சினையே இல்லாதவர்களும் இருக்கிறார்கள்தான். எதற்கும் முடிந்தவரை சந்தையில் கிடைக்கும் பூச்சுகளைப் பயன்படுத்துவதைத் தள்ளிப் போடலாம். ஆரம்பத்தில் நரை குறைவாக இருக்கும் போது மருதாணி போடலாம். ஒன்றிரண்டு முடிகளில் அப்படிப் பழுப்பு தெரியாது. அழகாகக் கூட இருக்கும். சிறு வயதிலேயே இவற்றை ஆரம்பித்தால் வயதான பின்பு நரையை மறைக்க வேறு வழி இராது.

தற்காலிகமான பூச்சுகள் கிடைக்குமே! லிப்ஸ்டிக் போல இருக்கும். வெளியே போகும் போது சட்டென்று பூசிக்கொண்டு கிளம்பலாம்.

‍- இமா க்றிஸ்

அக்கா எனக்கு வயது 27.. வெள்ளை முடி அதிகமாக‌ இல்லை.. 5% தான் இருக்கு.. ஆனால் அதிகமாகி விடுமோ என்று பயம்.. அதானால் தான் மருதானி பயன்படுத்தினால் அனைத்துமுடியும் கலர் மாறிவிடுமோனு இருக்கு.. எண்ணெய் தேய்தால் வெள்ளை முடி தெரியாது.. அந்த‌ அளவுக்கு தான் இருக்கு நிறைய‌ இல்லை

Don't use color in hair its change the black color in to ash

எனக்கும் அதே பயம் தான்..எனக்கு 25 வயதுதான் ஆகிறது.இப்பொழுதுதான் வெள்ளை முடி வர ஆரம்பித்து இருக்கிறது....அப்படியே எல்லா முடியும் வெள்ளையாக மாறிவிடுமோ என்று கவலையாக இருக்கு....தலக்கு மருதாணி போட்டால் சிகப்பாக ஆகிவிடும்...அது நல்லா இருக்காதுனு நினைக்கிறேன்...கறுப்பாக மாற என்ன செய்வது..

கரிசலாங்கண்ணியும்,கறிவேப்பிலையும் அரைத்து சின்னசின்ன‌ வடைகளாக‌ தட்டி எண்ணெய் காய்ச்சி தலைக்கு தடவுங்கள்.ஒரு மாதம்,இரண்டு மாதம் ஏன் தினமும் இதனை செய்யலாம். குளிக்க‌ செம்பருத்தி இலை,பூ இவற்றை சீகக்காய் பொடி அல்லது அரப்புடன் அரைத்து தேய்த்து கொஞ்ச‌ நேரம்விட்டு கழுவுங்கள்.

மருதாணி இது தடவியவுடன் சிகப்பு கலர் ஆகாதுப்பா. தடவி அரைமணி ஊறவைத்து பின் குளித்தால் முடி பளபளப்பாக‌ ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஷைனிங்கா இருக்கும்(கன்டிசனர் தனியா தேவையில்லை).இதில் வெள்ளைமுடிகள் தெரியாது. 4,5 முறை தலைக்கு குளிக்கும்வரை இப்படியே இருக்கும். பிந்தான் லைட் பிரவுனா மாறும்.இதுவும் கலரிங்போலதான் இருக்கும்.கவலைபடதீங்க‌.நான் மருதாணிதான் யூஸ் பண்ணூறேன்.(என்ன‌ இங்கத்த‌ கிளைமெட்டுக்கு அடிக்கடி பண்ண‌ முடியாது. பிளைன்ஸ்ன்னா வாரம் ஒருமுறை போடலாம்,).

அக்கா நம்ம‌ ஊர்ல‌ இருக்கும் போது நீங்க‌ சொல்றமாதிரி போட்டு இருக்க.. நான் டெல்லில‌ இருப்பதால் இதற்கு வழி இல்லாமல் இருக்கிறேன் அக்கா.. இங்கு வந்ததற்கு பிறகுதான் நரைமுடி பிரச்சனை அதிகரித்தது.. இங்கு பெண்கள் அழகு நிலையத்தில் ஹென்னா போடுவாங்க‌ ரொம்ப‌ கலர் வித்தியாசம் தெரிவதால் எனக்கு ஹென்னா போட‌ பிடிக்கவில்லை அக்கா....

மருதாணி போட்டால் வெள்ளை முடி மட்டும் மருதானி கலர் ஆகுமா?இல்லை எல்லாமுடியும் கலர் ஆகி விடுமா?இப்பொழுதே போட்டால் கன்ட்ரோல் பன்னிவிடலாமா?

//வெள்ளை முடி மட்டும் மருதானி கலர் ஆகுமா?// ஆமாம்.
//கன்ட்ரோல் பன்னிவிடலாமா?// மருதாணி நரையை மறைக்குமே தவிர குறைக்காது.

‍- இமா க்றிஸ்

பதிலுக்கு நன்றி.வீட்டிலேயே எப்படி மருதாணி போடுவது..

மேலும் சில பதிவுகள்