வாய் புண்

அன்புள்ள தோழிகளுக்கு ,
எனது தந்தை சிறுவயது முதலே வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர். சமீப காலமாக அவர் வாய் புண்ணால் மிகவும் பாதிக்க பட்டுள்ளார். டாக்டர் ஐ அணுகியபோது வேறு எந்த மாதிரியான பிரச்சனையும் இல்லை, சரியாகிவிடும் என்கிறார். அவரால் கார உணவு வகைகளை சேர்த்து கொள்ளவே முடிவதில்லை. சிறிது காரம் கூட. காரம், மிளகாய் கிள்ளி கூட சேர்க்க முடிவதில்லை. அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது அதனால் இனிப்பு சேர்க்க முடியாது. அவருக்கு என்ன மாதிரியான உணவு குடுக்கலாம் என்று ஆலோசனை சொல்ல வேண்டும். வாய் புண்ணை தடுக்க என்ன வழிகள் பின்பற்றலாம்?

மணத்தக்காளி கீரையை பாசிப்பருப்பு சேர்த்து சாறு வைத்துக் கொடுக்கலாம். காரம் சேர்க்க தேவையில்லை அதுற்கு பதிலாக சீரகம் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால் பிழிந்து அதில் சீனிக்கு பதிலாக தூள் உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

ஹாய்,
காலையில் எழுததும் தண்ணீரால் வாய் கழுவிட்டு, ஒரு ஸ்பூன் சுத்தமான நல்லெண்ணெயை வாயில் விட்டு, வாயில் எல்லா இடத்திலும் படுமாறு உமில் நீரோட சேர்த்து சுழற்றி கொண்டே ஒரு 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.. பின்பு உமிழ்ந்துவிட்டு (அநத உமிழ்நீர் மஞ்சள் நிறமாக இருக்கும்) பின்பு பிரஷ் பண்ணவும். ஒரு மாதம் விடாமல் செய்து பார்க்கவும்.

மேலும் சில பதிவுகள்