கட்டி பெருங்காயம் பொடி செய்வது எப்படி

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான் கடைகளில் கிடைக்கும் பெருங்காய பொடிகளை விட கட்டி பெருங்காயம் பொடித்து உபயோக படுத்த விரும்புகிறேன். கட்டி பெருங்காயம் பொடி செய்வது எப்படி என்று யாருக்காவது தெரிந்தால் உதவுங்களேன்.

அன்புடன்,
மகாசங்கர்

ஒரு துணியில் முடிந்து பலகையில் வைத்து இன்னொரு கட்டையால் தட்டுங்கள். ஓரளவு சிறிய துண்டுகளாக உடையும். பிறகு சிறிய உரலில் போட்டு மாவாக்கி எடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

ஹாய்,
பெருங்காயம் பாக்கெட்டில் இருந்து பிரித்தவுடனேயே ஈரபதமாகமாக இருக்கும் போதே கையால் பிய்த்து சிறு உருண்டைகளாக உருட்டி காய வைத்து, பின் மிக்சியில் பொடித்துகொள்ளலாம். பாக்கெட்டிலேய கட்டியா இருந்தால் பாக்கு வெட்டியால் கட் பண்ணி பொடித்து கொள்ளலாம். பாக்கெட்டை பிரிக்காமல் பிரிட்ஜில் ஒரு வாரம் வைத்து ஈர பதம் வந்தவுடன் முன் சொன்னமாதிரி உருட்டி காய வைத்து பொடி பண்ணலாம்.

மேலும் சில பதிவுகள்