electric rice cooker

hai friends.....
electric rice cookeril rice vaithaal rice vithaya iruku... enaku ithai eppadi use pandrathu? evalavu rice.ku evalavu water vaikanumnu sollunga friends....

அதோடு ஒரு புக் வந்திருக்குமே! அதிகப்படியாக எவ்வளவு அரிசி போடலாம் என்பது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அளவுக் கிண்ணமும் வைத்திருப்பார்கள். நீர் விடும் அளவு குறிப்பிட்டிருப்பார்கள். குக்கர் உட்பகுதியிலும் அடையாளம் இருக்கும்.

மாக்சிமம் எத்தனை கிண்ணம் அரிசி போடலாம் என்பதைக் கட்டாயம் கவனித்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் நிச்சயம் போடக் கூடாது. (ஒரேயொரு கப் அரிசி போட்டாலும் நன்றாக வராது.) வழமை போல் அரிசியைக் கழுவி, ஒரு இறை நீர் மேலே இருப்பது போல வைத்து ஆன் செய்தால் சரியாக இருக்கும். நீர் வற்ற ஆரம்பிக்கும் சமயம் ஒரு முறை கிளறி விட்டு மூடிவிடுவேன். இது கூட தேவையிராது. 'வார்ம்' லைட் வந்த பின்னால் அதிக நேரம் அப்படியே விட வேண்டாம்.

நான் சொன்னதை விட நல்ல யோசனைகள் இங்கு வேறு எங்காவது இருக்கும். தேடிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய்,

சில குக்கரில் 1 கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்று எழுதி இருப்பாங்க, சில குக்கரில் 1 கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் விடனும்னு எழுதி இருப்பாங்க... 1 கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் வச்சிருந்து சாதம் விதை விதையாய் இருந்தால் அரை கப் அல்லது 1 கப் தண்ணீர் ஒரு கப் அரிசிக்கு அதிகம் வச்சு பாருங்க... ரொம்ப கம்மியா அரிசி வைத்தால் 1 கப் அரிசி சாதம் நல்லா வராது...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பொதுவாக, குக்கரில் சாதம் வைப்பதற்க்கு இரண்டு மடங்கு தண்ணீர் வைத்தால், ரைஸ் குக்கரில் மூன்று மடங்கு வைக்க வேண்டும்.. அப்பதான் சாதம் நன்றாக வேகும்.

Thanks all of friends...

Enaku innoru doubt iruku.... Cooker timing mudiyumbothu automatica off agura varaikum wait pannanuma illa namma off pannidalama?

தயாரானதும் தானாகவே warm லைட்டுக்கு மாறும். பிறகு நீங்கள் அணைக்கும் வரை அப்படியேதான் இருக்கும். சூடாக இருக்கும். ஆனால் அதிக நேரம் விட்டால் சாதம் வரண்டு போக ஆரம்பிக்கும். குக்கரை அணைத்துவிட்டு பாத்திரத்தை வெளியே எடுத்து வையுங்கள்.

‍- இமா க்றிஸ்

thanks imma

மேலும் சில பதிவுகள்