பொட்டேட்டோ பாப்பர்ஸ்

தேதி: April 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 கப்
மைதா மாவு - கால் கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய புதினா - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசையவும்.
நன்கு பிசைந்ததும் சப்பாத்தி மாவு போல வரும்.
பிறகு சப்பாத்திப் பலகையில் சிறிது மாவு தூவி உருளைக்கிழங்கு கலவையை நீளமான ரோல் போல உருட்டிக் கொள்ளவும்.
உருட்டி வைத்துள்ள ரோலை கத்தியால் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய துண்டுகளை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
டேஸ்டி & க்ரிஸ்பி பொட்டேட்டோ பாப்பர்ஸ் தயார். கெச்சப் அல்லது விரும்பிய சாஸுடன் பரிமாறலாம்.

ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் இல்லையென்றால் ஒரு காய்ந்த மிளகாயை மிக்ஸியில் பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லாருக்கு வாணி. ஈசியான குறிப்பும் கூட ட்ரை பண்ணி பாக்குறேன். எப்பவும் போல படங்கள் பளிச்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Wow. Pakum bothu vai ooruthunga. Ipave seithu pathutu solren. Tnx

Wow. Pakum bothu saapita thonuthu superraa iruku

சூப்பர்... எங்க மக்கள் வீடுகளில் நிறைய பார்ட்டிகளில் இருக்கும். சிலர் செய்வதில் எண்ணெய் குடிச்சிருக்கும், அதனாலயே பயம் எனக்கு. உங்களுடையது பார்க்க நல்லா இருக்கு. :) செய்துருவோம். இன்னைக்கு சிக்கன் வாங்கி வந்தாச்சு, உங்க ரெசிபி அட்டம்ப்ட் அடிக்க போறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி குறிப்பு அருமை :) கூடை நிறைய‌ இருக்கு, அப்படியே கூடையோட‌ அனுப்பிடுங்க‌ :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கொஞ்சம் புதுமையா இருக்கு..நன்றி

கைரேகை வைத்து வாழ்கையை தீர்மானிக்காதே!!
கை இல்லாதவனுக்கும் வாழ்கை உள்ளது!!

அன்பு வாணி,
ரொம்ப‌ நல்லா இருக்கு. செய்து பார்த்துடணும். பேக்கிங் சோடா ஒரு தேக்கரண்டி கொஞ்சம் அதிகமில்லையா? எண்ணெய் இழுக்காதா?

அன்புடன்,
செல்வி.

நன்றி உமா, செய்துவிட்டு சொல்லுங்க

நன்றி நஸ்ரியா,

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

சோடா குறைவா போட்டுக்கோங்க வனி, நான் 1/2 ஸ்பூன் தான் சேர்த்தேன்.

சரி அருள் கூடையோட அனுப்பிடரேன் :))

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

நான் பாதிதான் பேகிங் சோடா சேர்த்தேன் மேடம். செய்துப் பாருங்க.

பொட்டெட்டோ பாப்பர்ஸ் நேற்று செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது வாணி, குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள் ரொம்ப நல்ல ரெசிப்பி நன்றி

பொன்னி

செய்துப் பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு நன்றி .உங்க குழந்தைகளுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி தோழி, நன்றி

வாணி, எதற்கு ரோல் செய்து கட் பண்ணி போட சொல்லுரீங்க?சும்மா கிள்ளி போடலாமா?காரணம் ஏதும் இருக்கா?

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், தாராளமாக கிள்ளிப் போடலாம், நான் ஒரெ அளவில் வேண்டுமென்றுதான் கட் பண்ணிப் போட்டேன்.
நன்றி

NACHUNNU IRRUKU PA!

Ama Pa

eXCELLENT!!!!!