கோடை காலத்தை எப்படி சமாளிப்பது?

வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு இப்பவே ரொம்ப வெயில் அதிகாம இருக்கு, இன்னும் போக போக நிச்சயம் வெயிலின் தாக்கம் அதிகமாகதான் இருக்கும். அதை சமாளிக்க எந்த மாதிரி உணவுகள் சாப்பிடலாம், சருமத்தை எப்படி காத்துக் கொள்வது, வெளி ஊர்கள் டூர் செல்லும் போது எப்படிலாம் நம்மை நாம் கவனித்து கொள்ளலாம், பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்கலாம்? வீட்டை எப்படி குளிர்ச்சியா வச்சுக்கறது ? என்பதை பற்றி எல்லாம் பகிர்ந்துக்கலாம் வாங்க தோழிகளே நிச்சயம் இது எல்லாருக்கும் பயன்படும்படி அமையட்டும்.

இப்போ கொஞ்சம் நாட்களா நாங்க செய்துட்டு வரது, தண்ணீர் நிறைய குடிக்கிறோம், நாங்க செய்வதை பார்த்து இப்ப பசங்களும் செய்றாங்க, மோர் நீர்க்க கரைச்சி வச்சு தாளித்து ப்ரிட்ஜில் வைச்சுட்டு அதை தான் குடிச்சுட்டு வரோம். 2 நாட்களுக்கு ஒரு முறை கீரை சேர்த்துக்கறோம் உணவில் கொஞ்சம் நான்வெஜ் குறைச்சாச்சு. தர்பூசணி, சாத்துக்குடி ஜூஸ், போட்டு வச்சுட்டு டைய்லி ஏதாவது ஒரு ஜூஸ் குடிக்கறோம். காலையில் எழுந்ததும் நீராகாரம் குடிக்கறோம். மதியம் சாப்பிடும் போது தயிர் சாதத்துடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுறோம்.
இவை தான் நாங்க செய்துட்டு வரது தோழிகள் வந்து சொல்லுங்களேன் இன்னும் வேற என்னலாம் பாலோ பண்ணலாம் வெயில்லை சமாளிக்க.

தண்ணீர் நிறைய குடிக்கவும்., நுங்கு,எலனீர்,வெள்ரிக்காய்,தர்பூசணி,மோர் சாப்பிடவும்
தினமும் இரண்டு முறை குளிக்கவும்,முடிந்த அளவு காபி,டீ தவிர்த்தல் நல்லது வெயிலில் செல்லும் முன் சன்ஸ்கிரின் லோசன் பயன்படுத்தவும்

வெயில் காலத்தை தவிர்க்க ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். ஜெனி சொன்ன மாதிரி இளநீர், மோர், நுங்கு, எல்லா வகையான பழங்களும் சேர்த்துக் கொள்ளலாம். ஜீஸ் போட்டும் குடிக்கலாம், தினமும் மதிய உணவில் ஏதாவது ஒரு வகை கீரை சேர்த்துக்கொள்ளவும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

தினமும் மதியம் சமைத்து முடித்தவுடன் வீட்டை தண்ணீர் கொண்டு துடைத்து அல்லது கழுவி விட்டால் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.
வெளியில் செல்வதாக இருந்தால் சன் க்ரீம் கை, முகத்தில் தடவி செல்லாம்.
இன்னும் நம் தோழிகள் வந்து சொல்வார்கள்.

ஆமாம் ஜென்னி நிறைய தண்ணீர் குடிச்சுட்டு தான் இருக்கோம், நுங்கு இங்க இன்னும் வர ஆரம்பிக்கல. ரொம்ப தாங்ஸ் உங்க பதிவுக்கு.

பாரதி உங்க ஐடியாக்கும் நன்றி.

அதே தான் நானும் சொல்வேன் நிறைய தண்ணி குடிக்கலாம், ஜூஸ் நிறைய குடிக்கலாம் பாட்டிலில் போட்டு வரும் ஜூஸ் இல்லாம நம் வீட்டில் பழங்களை வைத்து ப்ரஷ் ஜூஸ் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கலாம், காட்டன் ஆடைகள் அணியலாம் பிள்ளைகளுக்கும் காட்டன் ஆடைகளையே அணிவிக்கலாம், வெயிலில் விளையாடிட்டு வரும் குழந்தைகளுக்கு வந்ததும் ஜூஸ் கொடுக்க வேண்டாம் கொஞ்சம் நேரம் கழித்து வேர்வை அடங்கியதும் கொடுக்கலாம்.
முகத்துக்கு சந்தனத்துடன் பன்னீர் கலந்து பேக் போட்டா வேர்க்குரு, கட்டி வராது. வெள்ளரிக்காயை ஸ்லைஸ் செய்து கண்ணில் வைத்தால் குளிர்ச்சி கண் கட்டி வராது.

Friends,

வெளியில் போகும்போது கண்டிப்பாக குடை அல்லது துணி எடுத்துச் செல்லவும்.மிகவும் பயன்படும்.கருப்புத்துணி வேண்டாம்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

வெயில் காலங்களில் தர்பூஸ், கிர்னி, ஆரஞ்சு, லெமன் ஜூஸ்கள் எடுத்துகலாம். சூட்டை உண்டாக்கும் மாங்காய், பப்பாளி போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளலாம். எங்க வீட்டில் பப்பாளி சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பால் குடிக்க சொல்லி எங்க அப்பா சொல்லுவாங்க.

முள்ளங்கி, பூசனி, சௌ சொ, நூக்கல், பீர்க்கங்காய் போன்ற நீர் காய்களை உணவில் அதிகம் சேர்த்துக்கலாம். காரம் குறைவாக சேர்த்துக் கொள்வது நலம்.

நிறைய தண்ணீர் குடிக்கனும். தண்ணீரை காய்ச்சும்போது சிறிது சீரகம் போட்டுக்கலாம். ஒரு சில நாட்கள் வெந்தயம் போட்டுகலாம். நீர் மோர் அருந்தலாம்.

இரண்டு மூன்று முறை குளிக்கலாம். வெளியில் சொல்லும்போது சன் ஸ்க்ரீன் லோசன் போட்டுக்கலாம். குடை எடுத்து செல்வதும் நல்லது. மெலிதான காட்டன் ஆடைகள் உகந்தது. ரொம்ப இறுக்கமாய் இல்லாமல் உடைகள் அணிவது நல்லது.

முடிந்தவரை பகலில் சமைத்து விடுவது நல்லது. பகலை விட இரவு நேரத்தில் வீட்டினுள் வெப்பம் அதிகமாக தெரியும். அதனால் இரவு சமைத்தால் வீட்டின் வெப்பம் இன்னும் கூடுதலா தெரியும். ஆதலால் முடிந்த அளவு இரவிற்க்கும் சேர்த்து பகலிலேயே சமைத்து விடுவது நல்லது. தினம் வீட்டை தண்ணீர்க்கொண்டு துடைத்து விடுங்கள்.

வீட்டில் குறைவான விளக்குகளை உபயோகியுங்கள். மஞ்சள் நிற ஆடம்பர விளக்குகள் வெப்பத்தை அதிகமாக வெளியிடும். குளுமையான வெள்ளை நிற சி எஃப் எல் பல்புகள், டியூப் லைட்டுகள் சிறந்தது. சீலிங் பேன் உபயோகித்தாலாலும் காற்று வெப்பமாய் இருக்கும். டேபிள் பேன் உபயோகித்தால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும். அதும் டேபிள் பேனை ஜன்னலருகில் இருந்தால் குளிர்ச்சியாய் காற்று வரும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்