கொள்ளு ரசம்

தேதி: April 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கொள்ளு பருப்பு - ஒரு கரண்டி
தக்காளி - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
பூண்டு - 5 பல்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
வரமிளகாய் - ஒன்று


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் வைக்கவும். தக்காளியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கொள்ளு பருப்பு குறிப்பிற்கான லிங்க்: http://www.arusuvai.com/tamil/node/28060
மிக்ஸியில் பூண்டு, சீரகம், மிளகு மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு அரைத்துக் கொள்ளவும். (நைசாக அரைக்க வேண்டாம்). வேக வைத்த தக்காளியை கரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளிக்கவும்.
அத்துடன் தக்காளிக் கரைசலை ஊற்றி, பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
பிறகு கொள்ளு பருப்பு மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிட்டு, நன்கு நுரைத்து வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
சூடான சுவையான கொள்ளு ரசம் தயார். இது சளிக்கு மிகவும் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கொள்ளு ரசத்திற்க்கு நான் அரைக்காமல் அப்படியே வேக வைத்துதான் செய்துப் பழக்கம்.ஏற்கனவே உங்க கொள்ளுப் பருப்பு செய்ய வேண்டிஉள்ளது, இரண்டையும் செய்துப் பார்த்துட்டு பதிவிடுரேன். அருள்

கொள்ளு ரசம் அருமை. இந்த ரசம் பார்க்கவே டேஸ்டியா இருக்கும் போல தெரியுது, சூப்பர்.

அன்பு அருட்செல்வி,
வேக‌ வைத்த‌ கொள்ளு சேர்ப்பீங்களா? நான் பச்சைக் கொள்ளை ஊற‌ வைத்து அரைத்து செய்வேன். இல்லைன்னா, வேக‌ வைத்த‌ தண்ணீர் எடுத்து செய்வேன்

அன்புடன்,
செல்வி.

அரைத்தும் செய்வதுண்டு, வேகவைத்த‌ நீரை சேர்த்தும் செய்வதுண்டு, கொள்ளு பருப்பு செய்யும் அன்று கட்டாயம் கொள்ளு இரசம் செய்துவிடுவேன் :)
மிக்க‌ நன்றி வாணி :)

வாணி என்னோட‌ மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் :)
//இரண்டையும் செய்துப் பார்த்துட்டு பதிவிடுரேன்//
ஆமா நீங்க‌ சாப்பிடலாமா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க‌ நன்றி பாரதி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நானும் நீங்கள் செய்வது போலவும் வைப்பதுண்டு. ஆனால் அடிக்கடி செய்வது இந்த முறைதான். மிக்க நன்றி செல்விக்கா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சூப்பர். நான் வெறுமனே வேக வைத்து மசித்து சேர்ப்பேன். உங்க முறையில் கட்டாயம் செய்யுடுறேன். நல்லா சுவையா இருக்கும்னு தெரியுது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொள்ளு பருப்பு செய்யும் போது, நிறைய தண்ணீர் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை இருத்து வைப்பதுண்டு. பருப்பை அரைத்து விடுவேன்.
மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செல்வி ரசம் பார்க்கும்போதே சாப்பிட தோணுது. இன்னும் உங்க கொள்ளு பருப்பு பெண்டிங். அதை முடிச்சிட்டு இதை ட்ரை பண்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கொஞ்சம் புளி சேர்த்து செய்வோம்... நல்லா இருக்கு... அடிக்கடி செஞ்சுடுவோம்... வெயில்னால‌ செய்ய‌ முடியல‌..... ஆசைய‌ கிளப்பிடேங்கப்பா... எனக்கு இது மிகவும் பிடிக்கும்......