மணத்தக்காளிக் காய் குழம்பு

தேதி: April 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

மணத்தக்காளிக் காய் - அரை கப் (பச்சையாக)
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 4
பூண்டு - 2 (முழு பூண்டு)
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 4
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - அரை கப்


 

வெங்காயத்தை இரண்டாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை உரித்து வைக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி மற்றும் கசகசா சேர்த்து நைசாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டுத் தாளித்து, பூண்டைச் சேர்த்து வதக்கவும்.
பூண்டு பாதி வதங்கியதும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மணத்தக்காளிக் காயைச் சேர்த்து வதக்கவும். (மணத்தக்காளிக் காய் சேர்த்து வதக்கும் போது லேசாக மூடி வைத்திருக்கவும். இல்லையெனில் காய் வெடித்து வெளியில் சிதறி விழும்).
காய் வதங்கியதும் தக்காளி, தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
சுவையான மணத்தக்காளிக் காய் குழம்பு தயார்.

ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தக்காளிக்கு பதிலாக புளிக் கரைசல் சேர்த்தும் செய்யலாம்.

மணத்தக்காளிக் காய் உடம்புக்கு மிகவும் நல்லது. சூட்டை தணிக்கும். வயிற்றுப் புண் மற்றும் வாய்ப் புண்ணை ஆற்றும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

parkave romba super ra irrukku , nanum try panni pakkuren

செல்விக்கா அவசியம் செய்து பார்க்கிறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இந்த காயெல்லாம் நான் சமைத்ததே இல்லை. கிடைக்குமா கடைகளில்னு தெரியல... ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மணத்தக்காளிக்காய் குழம்பு அருமை அக்கா. கண்டிப்பா ட்ரை பண்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அருமையாக‌ செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குழம்பு கலர்ஃபுல்லா கண்ணப் பறிக்குது செல்வி மேடம்

பார்க்கவே சூப்பரா வத்தல் குழம்பு மாதிரி இருக்கு, படங்களும் தெளிவாக உள்ளது. மணத்தக்காளிக்காய் குழம்பு நல்ல கலர்புல்லா இருக்கு. இப்பவே சாப்பிடனும் போல இருக்கு,

செல்வி மேடம் குழம்பு பார்க்கவே நாவூருது, படங்கள் நல்லா இருக்கு.

அன்பு சிவகாமி,
மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.

அன்புடன்,
செல்வி.

அன்பு அருட்செல்வி,
அவசியம் செய்து பாருங்க. நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு வனி,
நல்லா இருக்கும். உடம்புக்கும் நல்லது. இங்கெல்லாம் கிடைப்பதில்லை. கீரை வாங்கும் போதே அதில் நிறைய காய்கள் இருக்கும். அதை சேமிப்பேன். எங்க ஊர்ல படி கணக்கில் விற்கும். வாங்கி வற்றலும் போட்டு வைப்போம். சென்னையில் கிடைக்குமே. அம்மா வீட்டுக்கு வரும் போது கிடைக்குதா பாருங்க.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
மிக்க நன்றி. செய்துட்டு சொல்லுங்க.

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
மிக்க நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
பிடிச்சிருக்கா? பார்சல் அனுப்பவா?
நன்றி வாணி!

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
வத்தக் குழம்பு போலத்தான். பத்தியத்துக்கு ரொம்ப‌ நல்லது.
/இப்பவே சாப்பிடனும் போல இருக்கு/
இங்கே வந்தால் கண்டிப்பாக‌ கிடைக்கும்:)

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
என்ன‌ செய்ய‌? வீட்டுக்கு வந்தா செய்து தர்றேன். படங்கள் கிரிடிட் என் கணவருக்கு:)

அன்புடன்,
செல்வி.

இரண்டு முறை:)

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா,

மணத்தக்காளிக்காய் குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு, கடைசிப்படம் சூப்பர்! இங்கே பச்சைகாய் கிடைக்காது. ஊருக்குபோய்ட்டு வரும்போது நிறைய‌ மணத்தக்காளி வற்றல் கொண்டுவந்திருக்கேன். அதில‌ அடிக்கடி வத்தகுழம்பு செய்வதுண்டு.

இந்த‌ மணத்தக்காளி கீரை, காய் எல்லாமே உடம்புக்கு நல்ல‌ குளிர்ச்சி இல்லையா? ஸ்கூல் டேஸ்ல‌ எனக்கு அடிக்கடி வரும் வாய்ப்புண்ணுக்கு, அம்மா இந்த‌ கீரையை நல்லா பருப்பு போட்டு கூட்டுமாதிரி செய்துக்கொடுப்பாங்க‌. நெய்விட்டு சாப்பிட‌ சூப்பர் டேஸ்ட்டா இருக்கும், வாய்ப்புண்ணையும் சட்டுனு ஆற்றும். உங்க‌ குழம்பு பார்த்ததும் எனக்கு சின்ன‌ வயசு ஞாபகம் எல்லாம் வருது.

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு சுஸ்ரீ,
ஆமாம் சுஸ்ரீ. உடம்புக்கு ரொம்ப‌ நல்லது. வாய்ப்புண், வயிற்றுப் புண்ணுக்கு ரொம்பவே நல்லது வற்றலிலும் செய்யலாம். பலன் கிடைக்கும்.

அதிலும் சிவப்பு பழம் பழுக்குமே, சாப்பிட‌ நல்ல‌ இனிப்பா இருக்கும். அது இப்ப‌ கிடைப்பதே இல்லை:(

நன்றிம்மா.

அன்புடன்,
செல்வி.

நம்ம‌ ஊர் ரெசிபி.... இது சுக்கிட்டி காய் தானே... நாங்க‌ புளி ஊத்தி தான் செய்வோம்... மறுநாள் சாப்பிட்டா தான் டேஸ்ட் அதுவும் அப்பளத்தோட‌... சூப்பர்க்கா... இப்பலாம் படி கணக்கு இல்ல‌ டம்ளர் கணக்கு அதுவும் குட்டி டம்ளர்... ஒரு டம்ளர் காய் 5 - 10 ரூபாய்..

அன்பு பிரியா,
அதே சுக்கிட்டி காய் தான். புளி ஊற்றியும் செய்வோம். இந்தக் குழம்பு சுண்ட‌ சுண்டதான் ருசியே!

ஓ! அப்படியா? நம்ம‌ ஊரு இப்ப‌ ரொம்ப‌ கெட்டுப் போச்சு தங்கச்சி!

அன்புடன்,
செல்வி.

மணத்தக்காளிக் காய் குழம்புசெய்தேன் ரொம்ப சூப்பர்ரா இருந்ததுநன்றி