கொத்து புட்டு

தேதி: April 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 2
குழம்பு கிரேவி - அரை கப்
உப்பு - சிறிது
தாளிக்க:
எண்ணெய், கடுகு
மிளகாய் வற்றல் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்).
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள்ள புட்டைச் சேர்த்துக் கலந்துவிடவும்.
அத்துடன் குழம்பு கிரேவியை சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
மாலை நேர டீயுடன் சாப்பிட, சுவையான கொத்து புட்டு தயார். கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

இது ஸ்ரீலங்கன் பார்ட்டிகளில் பரிமாறப்படும் உணவு வகைகளில் ஒன்று.

சிக்கன், மட்டன் கிரேவி மற்றும் சால்னா கிரேவியில் செய்தால் அதிகச் சுவையாக இருக்கும். சைவம் உண்பவர்கள் வெஜிடபுள் கிரேவியில் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாணி குறிப்பு அருமை :) காய்கறி கலவை (கோஸ், கேரட், இராகிமாவு) வைத்து செய்தேன் போனவாரம், நல்லா இருந்தது. இதையும் முயற்சிக்கிறேன் :) இராகி மாவை வறுத்துதான் பயன்படுத்துகிறேன், இப்பலாம் நல்லா வருது, தேங்ஸ் வாணி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சம சூப்பர். எனக்கு பொதுவா இலங்கை உணவுகள் பிடிக்கும், நிறைய ட்ரை பண்ணிருக்கேன். அடிக்கடி செய்யும் சில வகைகளும் உண்டு. கட்டாயம் இதையும் செய்துடுவேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது. புட்டு எனக்கு ரொம்ப பிடித்த உணவு. நாளைக்கே செய்து பார்க்கிறேன். படங்கள் எல்லாம் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

புட்டு நல்லாருக்கு வாணி. அடுத்த தடவை புட்டு செய்யும்போது ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

புட்டுல‌ இப்படி கூட‌ செய்யலாமா?!!சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஓ அப்படியா!! சூப்பர் அருள், நீங்களும் புட்டு எக்ஸ்பெட் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க, மிக்க மகிழ்ச்சி. நன்றி

உங்களுக்கும் பிடிக்குமா வனி, நானும் இலங்கை உணவுகள் சில செய்வேன். இதையும் ட்ரை பண்ணிப் பாருங்க. நன்றி

நன்றி பார்வதி, கட்டாயம் செய்து பாருங்க

நன்றி உமா

ஆமாம் ஆமாம் முசி, சூப்பரா செய்யலாம். நன்றி, சூப்பரா செய்யலாம். நன்றி

இனிப்பு புட்டுதான் செய்து இருக்கேன், கொத்து புட்டு கொஞ்சம் காரமாக இருக்கும் போல அதனால் டேஸ்டும் சூப்பர். வித்யசமான குறிப்பு.

வாணி கொத்து புட்டு பார்க்கவே தெரியுது டேஸ்ட் நிச்சயம் நல்லா இருக்கும்னு புட்டு இப்படி காரத்தில் செய்ததில்லை இனிப்பு மட்டும் தான் தெரியும் செய்து பார்க்கறேன்.

அன்பு வாணி,
காரம்னா செய்து பார்த்துடுவேன். வித்தியாசமா இருக்கு. நல்லாவும் இருக்கு வாணி.

அன்புடன்,
செல்வி.

வாணி,

வித்யாசமான குறிப்பு. புட்டுல‌ இனிப்புதான் செய்து இருக்கேன். உங்க‌ கொத்து புட்டு காரமாக சூப்பரா இருக்கு! கட்டாயம் அடுத்தமுறை புட்டு செய்யும்போது இதுபோல‌ செய்துபார்க்கிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

இதுல காரம் அதிகமா இருக்காது, கிரேவியில் காரம் குறைவாத்தான் சேர்த்தேன், காஷ்மீரி சில்லி பவுடர் சேர்ந்திருப்பதால் நல்ல சிவப்பு நிறத்தில் தெரிகிறது. நன்றி பாலபாரதி

அவசியம் செய்துப் பாருங்க உமா, நன்றி

காரப் புட்டுத்தான்,இது அதிக காரம்ன்னு சொல்ல முடியாது, சேவரி(Savory) போன்றிருக்கும்.அவசியம் செய்துப் பாருங்க செல்வி மேடம். நன்றி

இது அதிக காரம்ன்னு சொல்ல முடியாது சுஸ்ரீ, சேவரி(savory) போன்றிருக்கும். செய்துப் பாருங்கள், நன்றி