ஜாக்கிரதை தோழிகளே!!

ஸ்ட்ரைட்டா விசியத்துக்கு வாரேன்..

முன்னாடிலாம், அதாவது செல்போன் டெக்னாலாஜிக்கு முந்தின கால கட்டங்களில், பொண்ணுங்களை யாரேனும் ஃபோட்டோ எடுத்தா, முதுகில டின் கட்டி அனுப்பிடுவாங்க. இப்பலாம் சர்வ சாதாரணமா க்ளிக் பண்ணிடறாங்க. கோயில், கடற்கரை, ரோடு, கடை கண்ணி, திருமண பந்தல்கள் ஒரு இடம் பாக்கி இல்லாம, செல்போன்ல சிறை பிடிச்சிடுறாங்க. இது டெக்னாலஜினால வந்த சாபம்னே சொல்லலாம்.

திருமணங்களில் புகைப்படக்காரர் மட்டுமே புகைப்படம் எடுத்த நிலை மாறி, கிட்டத்தட்ட அனைத்து உறவுகள், நட்புகளுமே புகைப்படம் எடுப்பதும், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும், இப்பலாம் மிகச் சாதாரண விஷயமாகிவிட்டது. அதை தெரிந்தோ, தெரியாமலோ பப்ளிக் ஆகவோ, ஃப்ரண்ட்ஸோட ஃப்ரண்ட்ஸ்களுக்கோ தெரியும்படி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுகின்றனர். ப்ரியமானவர்களுக்கான (ஆபத்தில்லாதவர்களுக்கு) ஆப்ஷனை பயன்படுத்தி வெளியிட்டால் பரவாயில்லை.

மாப்பிள்ளை வீட்டுக்கு புகைப்படம் கொடுக்கவே தயங்கிய நிலையிலிருந்து இன்று வெகு தூரம் பயணப்பட்டு வந்திருக்கிறோம். மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான் ஆனால், சில மாற்றங்கள் முகச் சுளிப்பை உண்டு பண்ணுகின்றன என்று சொன்னால் மிகையேதுமில்லை.

பொது இடங்களில் மது அருந்துவதும், புகைபிடிப்பதும் எப்படி தடை செய்யப்பட்டுள்ளதோ (?) அது போல புகைப்படம் பிடிப்பதற்கும் தடை வந்தால் நன்றாகவே இருக்கும். இளம் பெண்கள் மட்டுமின்றி, அடுத்தவர் குழந்தை அழகாக இருந்தாலும் புகைப்படம் எடுப்பதும் தவறுதானே!!

கூகுளில் சுத்திக் கொண்டிருக்கும், ஏராளமான புகைப்படங்களில் எப்போதாவது, நம் வீட்டு குழந்தைகளும், ஏன் நாமே கூட வெளிவந்தால் ஆச்சரிய்படுவதற்கு இல்லை தான்.

கோடைக்கு பெரும்பாலும் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல நேர்ந்தால் கவனமுடன் இருக்கவேண்டியது மிக அவசியமே!!

அருவிகளில் நம்மையும் அறியாமல், கேமராக்கள் கோணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்னும் நினைப்பு அவசியம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழவேண்டும்.

கடந்த முறை (வனபோஜனம்) கோவை குற்றாலம் போயிருந்த பொழுது, அருவியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பல பெண்களையும், போன் பேசுவது போல போட்டோ எடுத்துக்கொண்டிருந்த நிலையை கண்டவுடன் மனம் பதறித்தான் போனது.

இப்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் கோவையில் இருக்கும் இரண்டு ஷாப்பிங் மால்களும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது. போற வாரவங்களை போட்டோ எடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர். இதெல்லாம் தடுக்க முடியாது, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத் தான் இதுவும்.

அதற்காக முகமூடி அணிந்துதான் நடமாடவேண்டும் என்று சொல்வதற்காக இந்த பதிவல்ல. போகும் இடங்களிலும், தங்கும் இடங்களிலும் இயன்ற அளவு கவனமுடன் இருந்து கொள்வோம் என்பதற்காகவே இதை பதிவிட்டுள்ளேன். இயன்ற வரை நாமும் மற்றவர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை தவிர்ப்போம். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது, ஆனால் மற்றவர்களின் தனிமைக்கு மதிப்பளிக்கலாமே!!

கோடை விடுமுறையை சீரும் சிறப்புமாக கொண்டாட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி விடைபெறுகிறேன்.

நன்றி _()_ :).

(புகைப்படம் இணைக்கும் வசதி இந்த கணினியில் இல்லை என்ற காரணத்தால், பிறிதொரு சமயம் புகைப்படம் இணைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்).

5
Average: 4.8 (5 votes)

Comments

நல்ல பகிர்வு. நான் பல முறை முகபுத்தகத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் புகைப்படங்களை காணும் போது யோசிப்பது உண்டு... அவர்கள் கவனிக்காதபோது எடுத்ததாக இருந்தால், என்னடா, இப்படி நம்ம ஃபோட்டோ எங்க எல்லாம் சுத்துதோன்னு நினைப்பேன். பல புகைப்பட ஆர்வமுள்ளவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சேலை கட்டி பொது விழாவில் வந்திருந்த நடிகை ஒருவரின் புகைப்படத்தை மிக அவலமாக(என்னால் இங்கு சித்தரிக்க முடியவில்லை) net-ல் போட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே இந்த நடிகையின் சேலை கட்டிய இதே படத்தை செய்தி தாளில் முன்பு ஒருக்கில் பார்த்த நினைவு. செய்தி தாளில் பார்த்த போது ஆபாசமாக இல்லையே, இப்போது மட்டும் எப்படி இது என்று யோசித்து google-ல் பார்த்தால், அதிர்ச்சி. நடிகையின் ஃபோட்டோவை எடிட் செய்து மாற்றியிருக்கிறார்கள்.ஆனால் எடிட் செய்யப் பட்டது என்று தெரியவே இல்லை. அப்படின்னா நாம் மட்டும் விதி விலக்கா என்ன? யாருடைய படத்தையும் எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி விடலாமே !!
சுற்றுலா தலங்களில் தேனிலவு தம்பதிகளையும் இந்த படம் எடுக்கும் நபர்கள் விட்டு வைப்பதில்லை என்றும் கேள்விப் பட்ட நியாபகம். பெண்கள் எப்போதும் குனிந்து கீழேயிருந்து ஏதாவது எடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

மிகவும் பயனுள்ள பதிவு. நீங்கள் சொன்ன பதிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

மிக‌ நல்ல விழிப்புணர்வு பதிவு அருள்!
நீங்க‌ சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை, கூகுள் க்ளாஸசை தொடர்ந்து, அடுத்து கண்களிலேயே ஒட்டிக்கொள்ளும் விதமாக‌ காமிரா பொருந்திய‌ லென்ஸ் கொண்டுவரப்போவதாக‌ சமீபத்தில் ‌எங்கோ இணையத்தில் படித்தேன்! சும்மாவே கையில் செல்போன் வைத்து கண்டபடி போய்கொண்டிருக்கு உலகம், இந்த‌ நிலமையில் இதுவேற‌ கேட்கவே வேண்டாம். தொழில்நுட்பம் முன்னேற‌ முன்னேற‌, தொல்லைகளும் ஏறிக்கொண்டேதான் போகிறது.

அன்புடன்
சுஸ்ரீ

அனைவருக்கும் தேவையான பதிவு. எப்பவும் ஒரு பயத்தோடவே உலவ வேண்டி இருக்கு இப்பலாம் வெளீய

Be simple be sample

அன்பு அருட்செல்வி,
வெளியில் மட்டும் இல்லை. டிரையல் ரூமில் கூட‌ ஜாக்கிரதையாக‌ இருக்கணும். ஹோட்டல் ரூமில் தங்கும் போதும் எல்லாம் செக் பண்ணனும். பயமாகத்தான் இருக்கு. ரொம்ப‌ ரொம்ப‌ ஜாக்கிரதையா எல்லா இடத்திலும் இருக்கணும்.

அன்புடன்,
செல்வி.

அருள் அக்கா,
இப்ப இந்த‌ கால‌ கட்டத்துல‌ ரொம்ப‌ ரொம்ப‌ அவசியமான‌ பதிவு ..........

இப்ப கோவில்ல‌ சாமி கும்பிடறப்ப , திருவிழா , எங்க‌ பாத்தாலும் எல்லாரும் மொபைலும் கையுமா தான் இருக்காங்க‌, அவங்க‌ தெரிஞ்சவங்க‌ தெரியாதவங்க‌ எல்லாரையும் கிளிக் பண்றாங்க‌, இதை யாரும் கேட்கவும் முடியாது,

ஆனா பொது இடத்துல‌ நம்மாளல‌ முடிஞ்சவரை பாத்து நடக்கனும் ,

அதே போல் நம்ம‌ ப்ரெண்ட்ஸ் மேரேஜ் ல‌ க்ருப் போட்டோ எடுக்கும் போது ஒண்ணும் பண்ண‌ முடில‌ அது அடுத்த‌ நாளே, இல்ல‌ அன்னைக்கே முக நூல் ல‌ வந்துடுது, நாம‌ போடாடியும் யாராவது போட்டுறாங்க‌.

நீங்க‌ சொன்ன மாதிரி அருவில‌, கிஸ்கிந்தா, பிளாக் தண்டர்ல‌ அப்புரம் கடற்கரை ல‌ குளிக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும் ....

எதையுமே பயன்படுத்துற‌ விதத்துல‌ தான் இருக்கு.... தயவு செய்து மொபலையும் நல்ல விதமா பயன்படுத்தினா பராவல‌ ...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு அருள்,

நல்ல‌ பதிவு.

என்ன‌ பண்றது, பயந்துகிட்டேதான் நடமாட‌ வேண்டியிருக்கு.

குற்றாலம் போவதை நிறுத்தி எத்தனையோ வருஷங்களாகிடுச்சு. கொஞ்சம் கூட‌ மனசாட்சியே இல்லாம‌, மக்கள் வேடிக்கை பார்ப்பத்தை பார்த்து, வெறுப்பாக‌ இருக்கு. என்னதான் செய்யறது.

அன்புடன்

சீதாலஷ்மி

கருத்து பகிர்விற்கு மிக்க நன்றி வனி. சில நேரங்களில் இதையெல்லாம் பார்க்கும் போது மிக பயமாகத்தான் உள்ளது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//சுற்றுலா தலங்களில் தேனிலவு தம்பதிகளையும் இந்த படம் எடுக்கும் நபர்கள் விட்டு வைப்பதில்லை என்றும் கேள்விப் பட்ட நியாபகம். பெண்கள் எப்போதும் குனிந்து கீழேயிருந்து ஏதாவது எடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.//
ஆம் மிகச்சரியாக கூறியுள்ளீர்கள்.
மிக்க நன்றி வாணி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாரதி மிக்க நன்றி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கூகுள் கிளாஸ் படித்தேன், ஆனா கண்களில் ஒட்டிக்குகொள்ளும் லென்ஸா, நினைக்கவே பயமாகத்தான் இருக்கிறது.
மிக்க நன்றி சுஸ்ரீ.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாம், இன்னும் போக போக பயமுறுத்தும் விஷயங்கள் அதிகமாகிட்டே போகும் போலத்தான் இருக்கு. மிக்க நன்றி ரேவ்ஸ்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//டிரையல் ரூமில் கூட‌ ஜாக்கிரதையாக‌ இருக்கணும். ஹோட்டல் ரூமில் தங்கும் போதும் எல்லாம் செக் பண்ணனும்.// நீங்கள் சொல்வதை பின்பற்றியே ஆகவேண்டும். மிக்க நன்றி செல்விக்கா.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல கருத்தினை பதிந்து சென்றுள்ளீர்கள் சுபி, மிக்க நன்றி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பயத்தில் பாதி இடங்களுக்கு செல்லமுடியாத சூழ்நிலைதான் இப்பலாம் உருவாகியிருக்கு.
குற்றாலம் நான் இன்னும் சென்றதில்லை, ஆனால் கூட்டம் அதிகம் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அங்கிருக்கும் கூட்டத்திற்கு கவனமாகத்தான் இருந்தாக வேண்டும், வேறு வழியேயில்லை.
கருத்துபகிர்விற்கு மிக்க நன்றிங்க சீதாமேடம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

thanks for your good informations madam