பாகற்காய் தொக்கு

தேதி: April 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாகற்காய் - ஒன்று (பெரியது)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
வெல்லம் - சிறிது (சுண்டைக்காய் அளவு)
கறிவேப்பிலை - 5
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - கால் கப்


 

வெங்காயம், தக்காளி மற்றும் பாகற்காயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாகற்காயுடன் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். (தனியாகவும் வேக வைக்கலாம்).
வேக வைத்த பாகற்காயை ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மசித்து வைத்துள்ள பாகற்காய், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.
பாகற்காய் தொக்கு ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கசப்பே தெரியாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Selvi madam romba super ra koduthu irrukkinga . Pavakka kasappa irrukkum atahanala seyya matten . neenga sonna mathiri senithu parkkiren. romba thanks

பாகற்காய் தொக்கு சூப்பர்.

Superb

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பு சிவகாமி,
மிக்க‌ நன்றி. பாகற்காய் உடம்புக்கு ரொம்ப‌ நல்லது. தவிர்க்கவே கூடாது. இந்த‌ முறையில் செய்து பாருங்க‌ கசப்பே தெரியாது. இன்று கூட‌ எங்க வீட்டில் இதுதான்.

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு ஜனாதுல்,
மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா,பாகற்தொக்கு அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருட்செல்வி,
மிக்க‌ நன்றி. இப்படி செய்தாலும் என் ஆத்துக்காரரை சாப்பிட‌ வைப்பத்ற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது:(

அன்புடன்,
செல்வி.