உருளைக்கிழங்கு சமோசா

தேதி: April 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மாவு பிசைய:
கோதுமை மாவு - ஒரு கப்
கோதுமை ரவை - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மசாலா தயாரிக்க:
உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று (விரும்பினால்)
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோம்பு - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைக்கவும். இஞ்சி மற்றும் பூணடை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, (சோம்பிற்கு பதிலாக கடுகு, கடலைப்பருப்பும் தாளிக்கலாம்). வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
மசாலா உருளைக்கிழங்குடன் நன்றாகச் சேரும்படி கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சப்பாத்திகளாக தேய்த்து, சமோசா அச்சினுள் வைத்து அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
பிறகு சமோசா அச்சினை மூடி அதன் வெளிப்புறத்திலிருக்கும் மாவை நீக்கிவிட்டு, அச்சினைத் திறந்து சமோசாவை வெளியே எடுத்து வைக்கவும்.
இதே முறையில் மீதமுள்ள மாவிலும் சமோசாக்களைத் தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய, மாலை நேர டீயுடன் சாப்பிட சுவையான சமோசா தயார்.

இந்த சமோசாவை கோதுமை மாவுக்கு பதிலாக மைதா மாவு சேர்த்தும் செய்யலாம். உள்ளே வைக்கும் மசாலாக் கலவையை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரான சமோசா, சமோசா நல்ல பார்ப்பதற்கு முறுமுறுப்பாக இருக்கு. இப்பவே சாப்பிடனும் உள்ளது அருமை.

சமோசா நல்லா இருக்கு... ஒரு டவுட் இது மேல‌ மொறு மொறுனு இருக்குமா இல்ல‌ ஸ்டஃப்டு பூரி மாறி இருக்குமா? செஞ்சு பாக்கணும்....

அவசியம் செய்து சாப்பிட்டு சொல்லுங்க பாரதி மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ப்ரியா மொறு மொறுப்பாகத்தான் இருக்கும். இரவை சேர்ப்பதால் மொறு மொறுப்பு வந்துவிடும். அவசியம் செய்து பாருங்க, மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருட்செல்வி,
சமோசா பார்க்கவே சூப்பரா இருக்கு:)

அன்புடன்,
செல்வி.

சமோசா சூப்பர் செல்வி. எனக்கு ரெண்டு மட்டும் குடுத்துடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இங்கெல்லாம் ரெடிமேடா ஃப்ரோஸன் சமோசாத்தான் கிடைக்கும்,கலவையில் உப்பு அதிகமிருக்கும்,இது சுலபமா இருக்கு அதுவும் கோதுமை மாவில், அடுத்து செய்திடறேன் அருள்,