கொள்ளுப் பயறு குழம்பு

தேதி: April 21, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கொள்ளு - 150 கிராம்
கத்தரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - ஒன்று
தக்காளி ‍- ஒன்று (சிறியது)
சின்ன வெங்காயம் - கால் கிலோ
இஞ்சி ‍- சிறு துண்டு
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் ‍- ஒன்றரை தேக்கரண்டி
மல்லித் தூள் ‍- 2 தேக்கரண்டி
குரு மிளகு ‍- அரை தேக்கரண்டி
சீரகம் - ‍ அரை தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் - ‍கால் மூடி (அ) தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான‌ அளவு
எண்ணெய் - சிறிதளவு


 

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, குரு மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வதக்கியெடுத்து ஆறவைத்து, மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து விழுதாக‌ அரைத்துக் கொள்ளவும். தேங்காயை தனியாக‌ அரைத்து வைக்கவும். புளியுடன் சிறிது நீர் ஊற்றி ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
கொள்ளை நன்கு சுத்தம் செய்து அலசி ஒரு நாள் முழுவதும் ஊற‌விட்டு, பிறகு அதை இரவில் ஒரு துணியில் கட்டி வெளிச்சம் படாமல் வைக்கவும். காலையில் நன்கு முளைத்து இருக்கும். அத்துடன் சிறிது நீர் ஊற்றி வேக‌ வைக்கவும்.
ஓரளவு வெந்ததும் அரைத்து வைத்துள்ள வெங்காய‌ விழுது, பெரிய துண்டுகளாக‌ நறுக்கிய‌ கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு கொதிக்க‌விடவும்.
நன்கு கொதித்து, காய்கறிகளும், கொள்ளும் நன்கு வெந்த‌தும் புளிக்கரைசல் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க்வும்.
நல்ல சுவையான‌. மணமான‌ முளைவிட்ட‌ கொள்ளுப் பயறு குழம்பு தயார்.

விரும்பினால் தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் சிறிது சின்ன வெங்காயம் தாளித்து குழம்பில் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு ஊக்கபடுத்தும் அட்மின் மற்றும் டீமிற்கு மிக்க‌ நன்றி....

குழம்பு பார்கவே அருமையா இருக்கு.குரு மிளகுனா என்னனு சொல்லுங்கலேன்

அன்பு பிரியா,
கொள்ளு குழம்பு நான் செய்தது இல்லை. முயற்சித்து பார்க்கிறேன். ரொம்ப‌ நல்லா இருக்கு. நம்ம‌ பக்க‌ சமையல்னாலே தனி ருசிதான்;)

நித்யா, கருப்பு மிளகைத்தான் எங்க‌ பக்கம் குருமிளகுன்னு சொல்வாங்க‌:)

அன்புடன்,
செல்வி.

நன்றி....

:)))

அன்புடன்,
செல்வி.

சத்தான கொள்ளு குழம்பு பார்க்கவே நல்லாருக்கு. நான் கொள்ளு சமைப்பது குறைவு.(வீட்ல யாருக்கும் பிடிக்காது) ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும். விருப்பபட்டியலில் சேர்த்துருக்கேன் ட்ரை பண்ணி பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கொள்ளு பயறு குழம்பு மிகவும் அருமை,

௧ண்ணில் பட்டதும் நாவில் எச்சில் ஊ௫துங்க,,,,,
௮க்கா,,,,,, சீக்கீரம் பாா்சல் பன்னுங்க,,,,,,,,,௮௫மையான குறிப்பு<<<<<<<<<<<<

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

ஆரோக்கியமான குறிப்புக்கு வாழ்த்துக்கள்

முளை கட்டிய கொள்ளு, வதக்கி வேறு அரைச்சிருக்கீங்க, நிச்சயம் நல்லா இருக்கும்.

ப்ரியா இன்னிக்கு இந்த குழம்பு பன்னுனேன், ரெம்ப நல்லா இருந்தது...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா