பள்ளி செல்லும் குழந்தைக்கான ஜூஸ்

அன்பான தோழிகளே, எனது மகளுக்கு 2.3 வயது . இந்த மாதத்தில் இருந்து preschool போகிறாள். காலையில் எழுந்து வெறும் பால் மட்டும் குடித்து விட்டு போகிறாள். நான் அவளுக்கு காலை உணவு, மதிய உணவு கொடுத்தனுப்புகிறேன். ஆனால் அவள் எதையும் சாப்பிடுவது இல்லை. வெறும் ஜூஸ் மட்டுமே குடிக்கிறாள். நான் அவள் daycare இல் சென்று விசாரித்த போது ஜூஸ் கொடுத்தனுப்பினால் அதை பிரிட்ஜில் வைத்து கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அப்படி எதுவும் செய்வது இல்லை. எனவே சில நாட்கள் tropicana போன்ற பாக்கெட் ஜூஸ் கொடுதனுபுகிறேன். ஆனால் அதில் preservatives சேர்ப்பதால் எனக்கு தினமும் இதை கொடுக்க விருப்பம் இல்லை. எனவே தோழிகளே நான் எந்த மாதிரியான ஜூஸ் கொடுக்கலாம்? குறைந்தது 2 மணி நேரத்திற்கு கெடாமல் இருக்கும்படி எப்படி தயாரிக்கலாம்? உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து எனக்கு உதவுங்கள்.
எதாவது milkshake மாதிரியான ரெசிபிக்கள் இருந்தாலும் சொல்லுங்களேன்.

நன்றியுடன்,
மகாசங்கர்

குழந்தைகளுக்கு காலை உணவு எற்காரணம் கொண்டு தவிர்க‌ கூடாது.. பால் மற்றும் ஜூஸ் வகைகள் உணவு இடைவெளியில் தரகூடியது அதையே உணவாக‌ கொடுத்தால் எப்படி.. குழந்தை சாப்பிட‌ மறுத்தால் நாம் தான் சமாதானம் படுத்தி சாப்பிட‌ வைக்க‌ வேண்டும்..முதலில் குழந்தைக்கு எந்த‌ உணவு பிடிக்குமோ அதை கொடுத்து பழக்குங்கள்.. பிறகு சத்தான‌ உணவை கொடுக்க‌ ஆரம்பிக்கலாம்.. பள்ளியில் ஆசிரியரிடம் சொல்லி சாப்பிட‌ வையுங்கள்.. மற்ற‌ குழந்தைகள் சாப்பிடும் பொழுது அவங்களும் சாப்பிட்டு பழகுவாங்க‌.. என்ன‌ வகை ஜூஸ் எப்படி தரலாம்ணு யோசிக்கிறது விட‌ குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு சாப்பிட‌ வைப்பது தான் நல்லது..

அன்பான தோழிக்கு,
நீங்கள் உங்கள் குழந்தையின் விருப்பத்திற்கு விட்டுவிடாதீகள், எந்த காரணம் கொண்டும் காலை ௨ணவை தவிா்பது நல்லது ௮ல்ல,,,,,,,'ஐந்தில் வலையாதது ஐம்பதில் வலையாது' என்பதை சிந்தித்து குழந்தைக்கு ௨ணவுமுறையை பழக்கவும்,,,,குழந்தையின் முுடுக்கு தகுந்தாா் போல் ௨ணவை வகைபடுத்தி கொடுக்கவும்,,,,,

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

அன்பான தோழி திவ்யா மற்றும் அபிராமி, பதில் அளித்தமைக்கு நன்றி. நானும் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டேன். என் குழந்தை எதுவுமே சாப்பிட மாட்டேன் என்கிறாள். பால் மற்றும் ஜூஸ் மட்டுமே குடிக்கிறாள். இதை விட்டால் கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், பிரெஞ்சு பிரீஸ் மாதிரியான உணவுகளை மட்டுமே விரும்புகிறாள். வேறு எதுவுமே சாப்பிடுவது இல்லை. அதனால் தான் இந்த கேள்வியை அனுப்பினேன். நீங்கள் சொல்வது போன்று எப்படியாவது உணவு கொடுக்க முயற்சிக்கறேன். இப்போது அவள் daycare செல்வதால் அங்கு அவளுக்கு அதிக நேரம் எடுத்து உணவு தருவார்களா என மிகவும் கவலையாக உள்ளது.
அத்துடன் இன்னும் சில நாட்களில் நானும் வேலைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். அப்போது முழு நேரமும் அவள் daycare இல் இருக்க வேண்டி இருக்கும். அதனால் அப்போது என்ன மாதிரியான ஜூஸ் கொடுக்கலாம் என திட்டமிட வேண்டியே இந்த கேள்வியை அனுப்பினேன். உங்களுக்கு எதாவது வழிகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்.

நன்றியுடன்,
மகாசங்கர்

உன் பொண்ணு ஜூஸ் மட்டும் குடிக்கிறா என்றால், குட்டிக்கு லிக்விட் பார்ம் தான் பிடிசிருக்குனு தெரியுது. சாதமா குடுக்காமல் கஞ்சி போல சிக்கன், மீன், காய்கறி சேர்த்து மாத்தி மாத்தி குடுங்க. கேசரி செய்றோம் ல அதில் கொஞ்சம் சர்க்கரை குறைவாய் பாதாம் சேர்த்து கொஞ்சம் லிக்விட் பார்ம்ல குடுத்து பாருங்க... காய்கறி சூப் வச்சு சாதம் ஊட்டிப்பாருங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

\\காலையில் எழுந்து வெறும் பால் மட்டும் குடித்து விட்டு போகிறாள்//
\\பால் மற்றும் ஜூஸ் மட்டுமே குடிக்கிறாள். இதை விட்டால் கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், பிரெஞ்சு பிரீஸ் மாதிரியான உணவுகளை மட்டுமே விரும்புகிறாள். வேறு எதுவுமே சாப்பிடுவது இல்லை//

குழந்தைக்கு எப்போதுமே இதே உணவுப் பழக்க தானா ? இல்லை இப்போது புதிதாக தொடங்கியுள்ளதா? இதற்க்கு முன்பும் இப்படித்தான் எனில் அவள் மீது தவறில்லை, ஆரம்பத்திலேயே சரிப் படுத்தியிருந்திருக்கலாம். புதிய பழக்கம் என்றால் இதைத் தொடர வேண்டாம்.சரிப் படுத்தி விடுங்கள். பிள்ளைகளை ஒரு நாளும் அவர்கள் விருப்பத்திற்க்கு விடக் கூடாது, உணவிலும் எது நல்லது எது கெட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. பலர் தநாமாக எல்லாவற்றையும் பழக்கப் படுத்தி விட்டு பின்னால் அடம்பிடிக்கிறார்கள் என்று அவர்கள் மீது பழியைப் போடுகிறார்கள். மேலை நாடுகளிலுள்ள பெற்றோருகு இப்படி ஒரு பிரச்சனை இருந்ததில்ல, சிறு வயதிலிருந்தே சரிவிகித உணவைக் கொடுத்து விடுவார்கள்.அதனால் பிள்ளைகள் காய் சாப்பிட வில்லை, பழம் சாப்பிடவில்லை என்கிற குற்றச்சாட்டிற்க்கே இடம் இல்லை.
எப்பொழுதுமே குழந்தைகளின் பழக்க வழக்கங்களை அவ்வப்பொழுதே சரி செய்து விடுவது தான் அவர்களுக்கும், நமக்கும் நல்லது. இனி நீங்கள் வேலைக்கும் செல்லவிருப்பதால் இது இருவருக்கும் மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

இதை முற்றிலும் மாற்ற உங்களால் தான் முடியும் தோழி.
காலை உணவைத் தவிர்ப்பதுதான் அநேக நோய்களுக்கும் முக்கிய காரணியாக உள்ளது.
மற்ற தோழிகள் சொன்னது போன்று காலை உணவுதான் மிக முக்கியமான உணவு. அவள் உங்கள் வழிக்கு வரும் வரை எந்த விளையாட்டுப் பொருட்களும் அவளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள். அவளுக்குப் பிடித்தமான பொருட்களை எடுத்து ஒளித்து வைத்து விட்டு சாப்பிட்டால் கொடுக்கிறேன் என சொல்லுங்கள்.உங்கள் மகளுக்கு எதாவது செயல் பாடுகளில் ஆர்வமிருந்தால்( எ.கா. நடனம், விளையாட்டு என்று) இதை உண்டால் நன்றாக ஆடலாம், இது முடிக்கு நல்லது, இதை சாப்பிட்டால் கால்கள் பலம் பெறும், தோல் மிளிரும் என்றுசொல்லிக் கொடுங்கள், அவள் சாப்பிடும் வரை அவள் கேட்க்கும் உணவுகளை வீட்டில் வாங்கி வைப்பதைத் தவிருங்கல். மேலும் இவையெல்லாம் சாப்பிட்டால் சீக்கிரம் கை கால்கள் பெலனின்றி போய் விடும், மற்றவர்கள் போன்று ஓட, ஆட முடியாது என்று குழந்தைக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்லுங்கள்.
நான் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு குழந்தை நல மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டவை, தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.
தற்காலிகமாக இதற்க்கு ஏதாவது தீர்வு காண வேண்டியுள்ளதால் சில ஜூஸ் வகைகளைக் குறிப்பிடுகிறேன்.

10 ஸ்ட்ராபெரியை 2 ஸ்பூன் ஓட்ஸுடன்(வறுத்த ஓட்ஸ்), 1 ஸ்பூன் பாதாம் பவுடர் அல்லது தோல் நிக்கிய 2 பாதாம் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து மிக்ஸியில் அடித்தால் பார்க்க ஜூஸ் போன்று வரும், அதை கொடுத்தனுப்புங்கள். ஃபிரிட்ஜில் வைத்து மகளுக்கு கேட்க்கும் போது கொடுக்கலாம். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது சர்க்கரை சேர்க்கவே கூடாது.ஏனெனில் காலை உணவில் சர்க்கரை சேர்ப்பது மூளையின் செயல் பாட்டை தாமதப் படுத்துவதோடு மூளையை மந்தப் படுத்தவும் செய்யும்.
தேன் கலந்து கொடுக்கலாம்.ஓட்ஸ் ஸ்ட்ராபெரி மில்க்ஷேக் ரெசிப்பியை அறுசுவைக்கு படங்களுடன் அனுப்பியுள்ளேன்.
இதைப் போன்று ஒருநாள் வாழைப் பழத்திலும், மற்றோரு நாள் டேட்ஸ் உபயோகித்தும் கொடுத்தனுப்பலாம். வாழை மற்றும் டேட்ஸ் சேர்க்கும் போது தேன் தேவைப் படுவதில்லை.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ரெடிமேட் ஜூஸ் வகைகளில் அதிக சர்க்கரையும் சேர்த்திருப்பதால் அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அதேப் போன்று மதியத்திற்க்கு சூப் போன்றும் செய்து கொடுக்கலாம்.இவையெல்லாம் நீங்கள் வேலைக்கும் சென்று கொண்டே செய்ய வேண்டியிருப்பதால் அதற்க்கும் முன்பே பாப்பாவுக்கு திட உணவு பழக்கத்தைக் கொண்டு வருவது நல்லது.

அன்பு தோழிகள் அனைவருக்கும் மிகவும் நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் நான் எவ்வளவோ முயற்சித்தும் அவள் எதுவுமே சாப்பிட மாட்டேன் என்கிறாள். எப்போதுமே கேக், சாக்லேட், பிரீஸ், பெப்சி , கோக் போன்ற ஜனக் உணவுகளையே மிகவும் விரும்புகிறாள். பழங்கள், பழசாறு எதுவுமே தொடுவது இல்லை. நான் எவ்வளவு தடுத்தாலும் என் கணவர் இதையே அவளுக்கு திரும்ப திரும்ப வாங்கி கொடுக்கிறார். இதனால் அவளுக்கு பசி என்ற உணர்வே வருவது இல்லை.

நீங்கள் சொல்வது போல் மில்க்ஷேக் செய்து கொடுத்து பார்க்கிறேன். மிகவும் தெளிவாக பதில் அளித்ததுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்,
மகாசங்கர்

மேலும் சில பதிவுகள்