பார்ட்டி பவுச்

தேதி: April 23, 2014

5
Average: 5 (2 votes)

 

விரும்பிய நிறத்தில் பெரிய துணி - ஒன்று
ஸ்பாஞ்ச் லைனிங் துணி - ஒன்று
விரும்பிய நிறத்தில் சிறிய துணி - ஒன்று
ப்ரோச் (Brooch) - ஒன்று
வெல்க்ரோ(Velcro)
ஜிப்
ஊசி மற்றும் நூல்

 

முதலில் விருப்பமான நிறத் துணியையும், லைனிங் துணியையும் 40 செ.மீ x 25 செ.மீ என்ற அளவிலும், சிறிய துணியை 25 செ.மீ x 12 செ.மீ என்ற அளவிலும் வெட்டிக் கொள்ளவும்.
சிறிய துணியின் ஓரத்தை மெல்லியதாக மடித்துத் தைத்துக் கொண்டு, அதை பெரிய துணியின் வலது புறத்தில் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி அதன் வலது புறம் ஒரு செ.மீ இடைவெளிவிட்டு தைத்துக் கொள்ளவும்.
தைத்த துணியின் மேல் பக்கம் உட்புறமாக இருப்பது போல் ஸ்பாஞ்ச் லைனிங் துணியின் மேல் வைத்து, (பர்ஸைத் திருப்பிக் கொள்வதற்காக 2 இன்ச் அளவிற்கு இடைவெளிவிட்டு) சுற்றிலும் தைத்துக் கொள்ளவும். இவ்வாறு தைக்கும் போது சிறிய துணி உள்பக்கம் இருக்கும். அதாவது பெரிய துணிக்கும், லைனிங் துணிக்கும் இடையில் சிறிய துணி இருக்கும். (நான் பெரிய துணி மேல் பக்கம் இருப்பது போல் படம் எடுத்துள்ளேன். அதன் அடியில் லைனிங் துணி உள்ளது).
2 இன்ச் இடைவெளியின் வழியாக உள்பக்கத்தை வெளியில் திருப்பிக் கொள்ளவும்.
திருப்பிய பிறகு சிறிய துணியின் நடுவில் போவ் (Butterfly knot) போல் தைக்கவும். (நான் சிறிய துணியை இணைப்பதற்கு முன்பே அதன் நடுவில் போவ் செய்வதற்காக குறி வைத்து அயர்ன் செய்து கொண்டேன்).
படத்தில் உள்ளது போல் போவ் உள்ள இடத்தின் எதிர் முனையிலிருந்து இரண்டாக மடித்து அம்புக் குறியிட்டுள்ள இரு ஓரங்களையும் தைத்துக் கொள்ளவும். (இவ்வாறு தைக்கும் போது மேல் புறமிருந்த துணி உள்ளே இருக்கும். லைனிங் துணி வெளியில் இருக்கும்). தைத்த பிறகு லைனிங் உள்புறம் இருக்குமாறு பர்ஸைத் திருப்பிக் கொள்ளவும்.
திருப்பிய பிறகு படத்தில் காட்டியுள்ளபடி ஜிப் வைத்து தைத்து, நடுவில் வெல்க்ரோ வைத்து (வெளிப்புறம் தையல் தெரியாதவாறு) தைத்துக் கொள்ளவும்.
பார்ட்டிகளுக்கு எடுத்துச் செல்ல அழகான பவுச் ரெடி.
போவின் நடுவில் விரும்பிய ப்ரோச் வைத்து அலங்கரிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப‌ அழகாகவும் எளிமையான‌ முறையிலும் இருக்கு பவுச்......

அழகா இருக்குங்க :) கலர் சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கைவினை குறிப்பினை அழகாக‌ எடிட் செய்து வெளியிட்ட‌ அட்மின் $ டீமிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும்,நன்றி.பிரியா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப‌ நன்றி,வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப அழகா இருக்கு முசி. தொடர்ந்து அருமையான தையல் குறிப்புகளாகக் கொடுக்கிறீங்க. பாராட்டுக்கள். நிச்சயம் ட்ரை பண்ணிட்டு வந்து கமண்ட் போடுறேன்.

அளவுகள்... ஒரு இடத்தில் மெட்ரிக் சிஸ்டம் இன்னொரு இடத்தில் இம்பீரியல் அளவு போட்டிருக்கீங்க. அது பிரச்சினையே இல்லை. முக்கியமான 40 x 25 & 25 x 12 மட்டும் எந்த சிஸ்டம் என்று குறிப்பிட்டிருக்கலாம் என்று தோணிச்சு. (சென்டிமீட்டர் என்று எனக்குப் புரியுது.) அப்படியே அடுத்த தடவை ஆஸ்டரிக்ஸ் (*) போடாமல் பெருக்கல் அடையாளத்துக்கு ஆங்கில X எழுத்து தட்டுங்க.

‍- இமா க்றிஸ்

பவுச் மிகவும் அழகாக உள்ளது, நல்ல கலர்புல்லா இருக்கு.

பாராட்டிர்க்கு மிக்க‌ நன்றி இமாம்மா,நானும் நேற்று கவனித்தேன்,ஆனால் இன்று அட்மின் மாற்றி விட்டார்கள்.தையல் நான் முறைப்படி கற்று கொள்ள‌வில்லை,அதனால் எனக்கு சரியான‌ விளக்கம் தர‌ ச‌ற்று சிரமம்.அட்மின் $ டீம் அழகாக‌ வெளியிட்டு உள்ளனர்.நீங்கள் சொன்னதை கவனத்தில் வைக்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி,பாலபாரதி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

//தையல் நான் முறைப்படி கற்று கொள்ள‌வில்லை,// நானும் கற்கவில்லை. ஆனால் எது வேண்டுமானாலும் தைப்பேன். தையல் க்ராஃப்ட்தானே!

கண்ணாலேயே அளவெடுத்துக் கச்சிதமாகத் தைத்துக் கொடுக்கும் டெய்லர்ஸ் எல்லோரும் தையல் கற்றவர்களா என்ன! இப்படி அழகாக ஒரு பொருளை ஆக்கி எடுக்க ரசனை, நிறைய ப்ளானிங் & பொறுமை தேவை. உங்கள் க்ராஃப்ட் என்னைக் கவர்ந்தது. செய்து பார்க்க விரும்பியதால்தான் அத்தனை உன்னிப்பாகக் கவனித்தேன்.

பாராட்டுக்கள். தொடர்ந்து உங்கள் குறிப்புகளை அனுப்பி வையுங்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ அழகாக‌ இருக்கிறது.அவசியம் செய்து பார்க்க‌ போகிறேன்

ரொம்ப அழகான பவுட்ச் முசி. கலர் காம்பினேஷன் சூப்பரா இருக்கு. எளிமையான செய்முறை எனக்கு ஜிப் எப்படி வைத்து தைப்பது என்று தெரியல முசி.

நிச்சய‌மாக‌ இமாம்மா,அவசியம் தொடர்ந்து அனுப்ப‌ முயர்ச்சி செய்கிறென்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி,செய்து பார்த்து பதிவிடுங்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பயதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி,சும்மா ரஃப்பா தைத்து பாருங்க‌,அப்ப‌ புறியும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

//திருப்பிய பிறகு படத்தில் காட்டியுள்ளபடி ஜிப் வைத்து தைத்து, நடுவில் வெல்க்ரோ வைத்து (வெளிப்புறம் தையல் தெரியாதவாறு) தைத்துக் கொள்ளவும்.// ஜிப் தைக்கிற சமயம் பவுச் வெளி மடிப்புல (நீல துணில) நீளமா ஒரு வரி தையல் மட்டும் தெரியணும் இல்ல!!!!

‍- இமா க்றிஸ்

நீல‌ துணியில் வெளி மடிப்புல‌ தையல் தெறிய‌ கூடாது.லைனிங் துணியை சற்று இழுத்து பிடித்து மிசினில் ஜிப்பை தைக்கவும்.இவ்வாரு தைக்கும் போது லைனிங் துணி மீது தான் தையல் விழும்.முடியவில்லை எனில் கண்ணுக்கு தெறியாத‌ வாறு ஊசி,நூலால் கைத்தையல் போடவும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அழகாகவும்,நேர்த்தியாகவும் இருக்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி,இனியா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பவுச் அழகாக இருக்கு.. கலர் காம்பினேஷன் சூப்பர்...

கலை

மிகவும் நன்றாக‌ உள்ளது. எனது பாரட்டுகள்.

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பாரட்டிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.