மகளிரும் வாக்குரிமையும்

பெண்களுக்கான வாக்குரிமைப்போராட்டம் பிரான்ஸ் நாட்டில் தான் முதன்முதலாக தொடங்கியது. அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை மகாசூசெட்ஸ் மாகாணத்தில் கி.பி 1756 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை முதலில் வழங்கப்பட்டது. நியூ இங்கிலாந்தில் நகராட்சித்தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து நியூஜெர்சியிலும் பெண்கள் வாக்களிக்க அனுமதி தரப்பட்டது. வாக்களிக்க நிபந்தனையாக தன் பெயரில் சொத்து வைத்திருக்கும் திருமணமாகாத பெண்களுக்கே ஓட்டுரிமை என வரையறுக்கப்பட்டிருந்தது.
பிரான்ஸ்வில்லி கி.பி.1889 ஆண்டு சுதந்திரம் அடைந்த பசிபிக் கடல் தீவுநாடு. "எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் அனைத்து பெண்களும் வாக்களிக்கலாம்" என அனுமதி அளித்த முதல்நாடு ஆகும்.
சுதந்திர நாடுகளாக இப்போதுவரை இருக்கும் நாடுகளில் முதன்முதல் வாக்குரிமை தந்த நாடு நியூசிலாந்து. இந்த உரிமை அந்நாட்டுப்பெண்களுக்கு கி.பி.1893 ஆம் ஆண்டு கிடைத்தது.
ஐரோப்பிய நாடான பின்லாந்து பெண்கள் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதியளித்த முதல்நாடு. கி.பி 1906ல் சட்டம் இயற்றி உலகில் முதல்முறையாக கி.பி 1907ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குள் 19 பெண் எம்.பி.க்களாக நுழைந்த பெருமைக்குரியவர்கள் பின்லாந்து பெண்கள்.
மத்தியக்கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் ஆண்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஆனால், பெண்கள் ஆரம்பக்கல்வி முடித்திருருந்தால் படிப்புக்கான ஆதாரங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்ற நிபந்தனை உள்ளது.
இன்றுவரை பெண்களுக்கு வாக்குரிமை வழங்காத நாடு சவுதி அரேபியா. அங்கு நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் ஆண்கள் மட்டுமே போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி உள்ளது.

வரும் 2015 ஆம் ஆண்டில் பெண்களுக்கும் இவ்வுரிமை தரப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.
ஆசிய நாடுகளில் பெண்களுக்கு எவ்வித நிபந்தனையற்ற வாக்குரிமை அளித்த முதல்நாடு இலங்கை. 21 வயதான அனைத்துப்பெண்களுக்கும் வாக்குரிமை. கி.பி 1960 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக உலகின் முதல்பெண் பிரதமராக இந்தநாட்டில் பதவியேற்றார்.
நம் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்தே பெண்களுக்கு வாக்குரிமை சில நிபந்தனைகளுடன் இருந்தது. பின்னாளில் சுதந்திரம் கிடைத்தபின் அனைத்துப்பெண்களும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைத்து இந்தியக்குடிமக்களும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. வாக்களிப்பது குடிமகன்/குடிமகளின் ஜனநாயக கடமைகளுள் ஒன்று.. அனைவரும் வாக்களிப்போம்..

5
Average: 5 (3 votes)

Comments

சாதாரணமாக 'பெண்கள் வாக்குரிமை' என்றாலே முதலில் அனுமதித்தது நியூசிலாந்து என்பார்கள். அதற்கு முன்பான சரித்திரத்தைக் கணக்கிலெடுத்தால்... முதலிடத்திலிருப்பது ஸ்வீடன் இல்லையா!! அப்படித்தான் நினைத்திருந்தேன். தேடிப் பார்க்கப் போகிறேன் இப்போது. குணா உதவியால் புதிதாக வேறு என்ன தகவல்கள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். :-)

‍- இமா க்றிஸ்

நியூசிலாந்து பற்றி பதிவிட்டிருக்கேன் மா..
ஸ்வீடன் இல் சிலபகுதிகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை இருந்தாலும் பல நிபந்தனைகளோடு தான் வாக்களிக்கும்படி இருந்திருக்கிறது. 1780 ல் ஸ்வீடன் என்றால் அதற்கு முன்பே 1756 ல் அமெரிக்கா உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உரிமை அளித்துள்ளார்களே, தேடினால் இங்கேயும் பகிருங்கள் :-)

நட்புடன்
குணா

தேர்தல் நேரத்தில் மிகவும் பயனுள்ள தகவல்கள்,

எந்த எந்த நாட்டில் எந்த எந்த வருடம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது என்று குணா மூலம் தெரிந்துகொண்டோம். நன்றி

\\18 வயது நிரம்பிய அனைத்து இந்தியக்குடிமக்களும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. வாக்களிப்பது குடிமகன்/குடிமகளின் ஜனநாயக கடமைகளுள் ஒன்று.. அனைவரும் வாக்களிப்போம்.\\.

நாங்களும் வாக்களிப்போம்.

அன்பு குணாங்,

சிறப்பான‌ தொகுப்பு, அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

வருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றிங்க ..

நட்புடன்
குணா

பாராட்டிற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

சரியான நேரத்தில் பதிவு போட்டு இருக்கீங்க, தகவல்கள் அருமை குணாங் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருமையான தொகுப்புடன் எல்லாரையும் அலர்ம் செய்யும் விஷயங்கள் குணா. இன்னக்கி எல்லாருமே நிச்சயம் தங்கள் ஜனநாயக கடமையை செய்யனும்.

சரியான நேரத்தில் சரியான பதிவு போட்டு தெரியாத தகவல்களை தொகுத்து வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்க தான் :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருகைக்கும், பாராட்டிற்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

வருகைக்கும் பதிவுக்கும் ரொம்ப நன்றிங்க. .

நட்புடன்
குணா

ஒரு விழிப்புணர்வுக்காக, வனிதாங்க வருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

பல தகவல்கள் புதிதாக அறிந்து கொண்டேன் நன்றி

அன்பு குணா,
சரியான‌ நேரத்தில் சரியான‌ தகவல்கள். நிறைய‌ புதிய‌ விஷயம் தெரிந்து கொண்டேன் நன்றி.

அன்புடன்,
செல்வி.

மிக பயனுள்ள தகவல்கள் குணா சார்

வருகைக்கும் மறுமொழி இட்டமைக்கும் ரொம்ப நன்றிஙக. .

நட்புடன்
குணா

வருகைக்கு ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

ரொம்ப நன்றிங்க

நட்புடன்
குணா

புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம். அருமை

ரொம்ப நன்றிங்க..

நட்புடன்
குணா

டைமிங் தகவல். அருமையான தகவல்..தம்பிங்

Be simple be sample

ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா