கறிவேப்பிலை செடிக்கு உரம்

வணக்கம் தோழிகளே, நான் போன வாரம் கறிவேப்பிலை மற்றும் துளசி செடி வாங்கி வந்தேன். வீட்டு தோட்டம் பகுதியில் துளசிக்கு உரம் போட தேவை இல்லை என்று படித்தேன். கறிவேப்பிலை செடிக்கு தேயிலை உரம் போட வேண்டும் என்று படித்தேன். தேயிலையை எப்படி போட வேண்டும் . புதுதேயிலை தூள் போட வேண்டுமா.

துளசி பற்றித் தெரியவில்லை சீதா. கறிவேப்பிலை... ஊரிலிருந்தவரை சிறிய செடியாக இருக்கும் போது எதுவும் போட்டதில்லை. ஓரளவு வேர் பிடித்த பின்னால் தரையில் நட்டதன் பின்பு துருப்பிடித்த தகரம் தாட்டு வைப்போம். (திராட்சைக்கும் எலுமிச்சைக்கும் கூட இது போல செய்வதுண்டு.)
//தேயிலையை எப்படி போட வேண்டும் . புதுதேயிலை தூள் போட வேண்டுமா.// தேவையில்லை. தேநீர் ஊற்றியபின் மீதித்தூளை ஆற விட்டு போட்டால் போதும். சாயம் மீந்திருந்தால் அதையும் சேர்த்து ஊற்றலாம். தூளை அப்படியே குவியலாகப் போடாமல் மண்ணோடு கலந்துவிடுவது நல்லது. தேயிலை பலவிதமான செடிகளுக்குப் பயன்படுத்தலாம். தூள் மண்ணின் தன்மையையும் மேம்படுத்தும்.
இன்னொரு டிப் இருக்கிறது சீதா. உங்களுக்கு தனி மெசேஜ் ஒன்று அனுப்புகிறேன், பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா,

இந்த சீதாலஷ்மி வேற, நான் அவர் இல்லை. இப்பதான் உங்க மெசேஜ் பாத்தேன், கொஞ்சம் குழம்பிட்டு, இங்க வந்து பாத்ததும் புரிஞ்சுது.

இருந்தாலும் உங்க டிப்ஸ் கொடுங்க, எல்லோருக்கும் பயன்படும்தானே.

அன்புடன்

சீதாலஷ்மி

வணக்கம் imma , பதில் போட்டதற்கு நன்றி. நான் எப்பொ ழுதும் பாலுடன் தேயிலையை சேர்த்து கொதிக்க வைப்பது தான் வழக்கம் . அந்த தேயிலையை போடலாமா . எத்தனை நாட்களுக்கு ஒரு முறை போட vendum . அதிகம் கேள்வி கேட்கிறேன் மன்னிக்கவும் . வாழை பழ தோல் போடலாமா.

சீதாலக்‌ஷ்மி மாடசாமி அவர்கள் கேட்ட அதே கேள்வி தான் எனக்கும்... பாலோடு சேர்த்து கொதிக்க வைத்த தேயிலை பயன்படுத்தலாமா? குப்பைக்கு தான் போகுது.. சொல்லுங்க அவசியம், செடிக்காவது சத்து கிடைக்கும்.

//உங்களுக்கு இப்போ அடிக்கடி பெயர் குழப்பம் வருது போலவே ;) தூக்கம் வந்த பின்னே சுத்திக்கொண்டிருக்கீங்க இமா.//

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

////உங்களுக்கு இப்போ அடிக்கடி பெயர் குழப்பம் வருது போலவே ;) தூக்கம் வந்த பின்னே சுத்திக்கொண்டிருக்கீங்க இமா.//// ம்... 'அது' உலாவும் நேரம்தான் படுக்கைக்குப் போகக் கிடைக்குது, அதற்கு முன் இங்கே விசிட். ஆமாம், நீங்க வாணிதானே!! ;))))

மன்னியுங்கள் சீதாலக்ஷ்மி சுப்ரமணியம். :-) இந்த அளவு தட்டினது கூட, 'சீதா எங்கேதான் நடப் போறாங்க?' என்று நிறைய யோசிச்சுட்டேதான் தட்டினேன். பரவால்ல, அங்க போனதுலயும் ஒரு நன்மை இருந்தது. ;)

//பாலோடு சேர்த்து கொதிக்க வைத்த தேயிலை//
நிஜமாவே சொல்றேன், எனக்கு இந்த விஷயம் புதுசு. இப்படில்லாம் பண்ணுவீங்கன்னு தெரியாது. சந்தேகம் சந்தேகமா வருது. பாலை தூள் உறிஞ்சிராது!! சாயம் இறங்கும் வரை பால் கொதிக்கணும்ல!! தேநீரின் சுவைக்காக மட்டும் பால் சேர்க்கிறதால... பாலின் முழுமையான சிறப்பும் கிடைக்கணும்கிறது இல்லைதான். ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு முறை. அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி. நாங்கள் தேயிலையைக் கொதிக்க வைப்பது கிடையாது. ஊரிலிருந்தவை காப்பி, தேநீருக்கு கண்டென்ஸ்ட் மில்க் அல்லது பால்மாதான். எப்போதாவது பசுப்பால் கிடைத்தால் கூட கடைசியாகத்தான் சேர்ப்போம்.

இனி தேயிலைத்தூள் பசளை பற்றி - சாதாரணமாக தொட்டியில் தேயிலைத்தூளைக் குவியலாகக் கொட்டினால் தரை மேற்பரப்பிற்கு மேல் மெழுகிவிட்ட மாதிரி ஒரு படையாக காய்ந்துவிடும். அது மண்ணுக்குள் காற்று நுழைய விடாமல் தடுக்கக்கூடும். குவியலாக தூள் புளித்துப் போகும் போது பழஈக்களைக் கவரும். கூடவே மேற்பரப்பில் பூஞ்சணவிழை படரவும் இடமளிக்கும். அதனால்தான் கிளறிவிடச் சொன்னேன். இது பால்சேர்க்காத தூள் பற்றிய என் அவதானிப்பு. பால் சேர்த்தால் பிரச்சினை இன்னும் அதிகமாக இருக்கும்.

கிளறிவிட்டு மேலே தனி மண் தூவி மூடிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். அதை விடச் சிறந்தது... தூளை வேறு ஒரு தொட்டியில் சிறிது மண்ணோடு கலந்துவைத்து சில நாட்கள் கழித்து செடிக்குச் சேர்ப்பது. அல்லது கம்போஸ்ட் / மண்புழுப் பண்ணைக்குச் சேர்த்துவிடுங்கள். எதுவானாலும் கிளறிவிடுவது நல்லது.

பால் வாசனை ஈ, பூனை, எலி எல்லாவற்றுக்கும் அழைப்பு வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

காலாவதியான தேயிலை இருந்தால் அப்படியே மண்ணோடு கலந்துவிடலாம்.

கறிவேப்பிலைச் செடிக்கு விலங்கு உரங்கள் மிக நல்லது. மீன் கழுவிய நீர், சமையலறையிலிருந்து மீன் & மாமிசக் கழிவுகள், இறந்த பிராணிகள் போன்ற எதுவானாலும் புதைக்கலாம். 'ப்ளட் அண்ட் போன்' என்று இங்கு உரம் விற்பனைக்குக் கிடைக்கிறது. கோழித்தீவனம் விற்கும் கடைகளில் இது போன்று உரம் கிடைக்கும். புதைத்த பின்னால் மறக்காமல் அந்த இடத்தில் பாரமான கல் அல்லது தொட்டி ஒன்றை வைத்துவிடுங்கள். அல்லாவிட்டால் பூனை, நாய் கிளறி வைக்கும்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா,

தண்ணீரில் தேயிலைத் தூள் மட்டும் போட்டுக் கொதிக்க‌ விட்டு(காஃபி டிகாக்ஷன் போல‌), பிறகுதான் பால் சேர்க்கிற‌ வழக்கம். ஆனா, அது ரொம்ப‌ வருஷத்துக்கு முன்னால்.

இப்பல்லாம் பாலில் சர்க்கரையும் தேயிலைத் தூளும் போட்டு, நல்லாக் கொதிக்க‌ விட்டு, பிறகு வடிகட்டி, டீ தயாரிக்கிறோம்.

நான் டீ குடிப்பதில்லை, ஆனா, தேயிலைத் தூள் மட்டும் போட்டுக் கொதிக்க‌ விட்டுத் தயாரிக்கிற‌ முறையில் டீ வாசனை நல்லா இருக்குதுன்னு நினைப்பதுண்டு.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி இமா, நீங்கள் கூறிய முறையில் செய்து பார்கிறேன். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உரம் போட வேண்டும். அதிகம் கேள்வி கேட்கிறேன் மன்னிக்கவும்.

மேலும் சில பதிவுகள்