சுவிஸ் சார்ட் கூட்டு

தேதி: April 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

சுவிஸ் சார்ட் கீரை - ஒரு கட்டு
மசூர் தால் - 50 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, சீரகம் - சிறிதளவு
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 3 பல்
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய்

மசூர் தாலில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
சுவிஸ் சார்ட் கீரையை நன்கு சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்த மசூர் தாலுடன் சுவிஸ் சார்ட் கீரை, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகு, சீரகத் தூள் மற்றும் உப்புச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கீரை வெந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, கீரைக் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான சுவிஸ் சார்ட் கூட்டு தயார்.

சுவிஸ் சார்ட் கீரையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கவிதாவின் <a href="/tamil/node/24769"> சுவிஸ் சார்ட் பொரியல் </a> குறிப்பைப் பார்க்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

முசி குறிப்பு சூப்பர். ட்ரை பண்ணி பார்க்க கீரைதான் கிடைக்காது.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பு சூப்பர்... உமா சொல்வது போல் கீரை தான்கிடைக்காது.

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் $ டீமிர்க்கு நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கு நன்றி,உமா.கீரை கிடைத்தால் என் நியாபகம் உங்களுக்கு வரும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,

கலர்ஃபுல்லாக‌ இருக்கு குறிப்பு. மசூர்தாலின் ஆரஞ்சு நிறமும் கீரையின் பச்சை நிறமும் கான்ட்ராஸ்ட் ஆக‌ இருப்பது அழகு.

நல்ல‌ குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

கீரை சூப்பர் முசி, தக்காளி சேர்க்காமலே நல்லா இருக்குமா ?

பாராட்டிர்க்கு மிக்க‌ நனறி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தக்காளி சேர்க்காமலே செய்யலாம்.நல்லா இருக்கும்.விரும்பினால் சேர்த்தும் செய்யலாம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,
சுவிஸ் சார்ட் கீரைன்னா என்னன்னு தான் எனக்கு தெரியலை. கிடைத்தால் செய்து பார்க்கலாம்.

அன்புடன்,
செல்வி.

பதிவிர்க்கு நன்றி அக்கா.கிடைக்கும் போது என் குறிப்பு உங்களுக்கு நினைவு வரும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.