க்ரிஸ்பி பழப் பொரி

தேதி: April 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று
மைதா மாவு - கால் கப்
ஓட்ஸ் - ஒரு கப்
சீனி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் மைதா மாவுடன் சீனி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். நேந்திரன் வாழைப்பழத்தை தோல் நீக்கி பஜ்ஜிக்கு சீவுவது போல நீளமாக சீவிக் கொள்ளவும். ஒரு தட்டில் ஓட்ஸைப் பரவலாகக் கொட்டி வைக்கவும்.
சீவிய பழத் துண்டுகளை மைதா மாவு கலவையில் தோய்த்தெடுத்து, ஓட்ஸில் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
பொரிந்ததும் எண்ணெயை வடியவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
டேஸ்டி & கிரிஸ்பி நேந்திரன் பழப் பொரி ரெடி. மாலை நேர டீயுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற டிபன் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர். நான் ஏற்கனவே தளிகா குறிப்பு செய்திருக்கேன், இதுல ஓட்ஸ் எல்லாம் சேர்த்து க்ரிஸ்பி... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேந்திரபழ்த்தில் கேக்கவே வேண்டாம் அருமைங்க.என் குட்டீஸ்க்கு பிடிக்கும்.

நல்லாருக்கு வாணி. இங்க நேந்திரம்பழம் அதிகமா கிடைக்காது. சாதாரண வாழைப்பழத்தில் செய்யலாமா? டேஸ்ட் நல்லாருக்குமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வித்தியாசமா இருக்கு.குழந்தைகலுக்கு ஏற்ற குறிப்பு..

ஈசி குறிப்பு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு வாணி,

ஓட்ஸ் சேர்த்து செய்திருப்பது வித்தியாசமாக‌ இருக்கு.

நல்ல‌ ஐடியா இது.

அன்புடன்

சீதாலஷ்மி

வருகைக்கும்,முதல் பதிவிற்க்கும் நன்றி

ஆமாம் இனியா,பிள்ளைகளுக்குப் பிடிக்கும், செய்து கொடுங்க. நன்றி

உமா, நான் இதுவை வாழைப் பழத்தில் செய்ததில்லை ,எப்படி வரும் என்றும் எனக்குத் தெரியவில்லை, இதை நேந்திரன் பழத்தில் செய்து தான் பார்த்துள்ளேன், நீங்க வேணும்னா ஒரு பழத்தில் கொஞ்சமா செய்துப் பாருங்களேன், நல்லா வந்ததான்னு இங்கே சொல்லுங்க பிளீஸ். நன்றி உமா.

ஆமாம் நித்யா, குழந்தைகளுக்குப் பிடிக்கும். நன்றி

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி முசி

மிக்க நன்றி சீதா மேடம்.

டேஸ்டி &ஈசி. குறிப்பு ..பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு

Be simple be sample

அன்பு வாணி,
எங்க‌ வீட்டில் குடி இருந்த‌ ஒரு மலையாள‌ பெண்மணி செய்து கொடுத்திருக்காங்க‌. ரொம்ப‌ நல்லா இருக்கும். இங்க‌ நேந்திரம் பழம் பார்த்ததே இல்லை. எங்க‌ ஊருக்கு போனால்தான் உண்டு:(

அன்புடன்,
செல்வி.

ஈஸியான‌ இனிப்பான குறிப்பு, செய்துறுவோம்.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பாக்க ப்ரைடு சிக்கன் போலவே இருக்க.. ஏற்கனவே இந்த மாதிரி செய்யனும்னு நினச்சுட்டு இருந்தேன்.. உங்க முறையில் ட்ரை பண்றேன்

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி ரேவதி

ஆமாம் செல்வி மேடம், ரொம்ப நல்லா இருக்கும், கிடைக்கும் போது அவசியம் செய்துப் பாருங்க, நன்றி

நன்றி சுபி

செய்து பாருங்க பிரியா, நன்றி

பழம் பொரி செய்தேன் ஓட்ஸ் சேர்த்து இருப்பதால் நல்ல கிர்ஸ்பியாவும்
நல்ல சுவையாகவும் இருந்தது நன்றி