பாகற்காய் வற்றல்

தேதி: April 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாகற்காய் ‍- அரை கிலோ
மிளகாய் தூள் ‍- ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பாகற்காயை வட்டமாக‌ நறுக்கி தேவையான‌ அளவு உப்புச் சேர்த்து வேக‌ வைக்கவும். (அதனுள்ளே இருக்கும் முற்றிய‌ பெரிய‌ விதைகளை நீக்கிவிடலாம்).
அரை வேக்காடு வெந்ததும் நீரை சுத்தமாக‌ வடிகட்டிவிட்டு மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
பிறகு ஒரு தட்டில் பரவலாக‌ அடுக்கி வெயிலில் வைத்து நன்கு காய வைக்கவும்.
ஒரு புறம் காய்ந்ததும் பாகற்காயை திருப்பி வைத்து அதன் மறுபுறத்தையும் நன்கு காயவிடவும். 2 - 3 நாட்கள் வெயிலில் காய‌ வைத்தெடுத்து காற்று புகாதபடி பாட்டிலில் போட்டு வைக்கவும். (நன்கு காய்ந்ததும் வற்றலை கையால் உடைத்தால் உடையும் பதத்தில் இருக்கும்).
சுவையான‌ பாகற்காய் வற்றல் தயார். தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். கசப்பே தெரியாது. சிப்ஸ் போல இருக்கும். பருப்பு, ரசம், தயிர் சாதங்களுக்கு நல்ல‌ காம்பினேஷன் இது.

இதே முறையில் வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் கொத்தவரங்காயிலும் செய்யலாம். அவற்றை கொதிக்கும் தண்ணீரில் போட்டால் மட்டும் போதும். வேக வைக்க‌த் தேவையில்லை. விரும்பினால் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வற்றல் ஈஸியா இருக்கு. நாங்கள் பாகற்காய் சம்பல் செய்யும்போது அப்படியே வெட்டி பொரிப்போம். அது லேசான கசப்போட இருக்கும். இது நல்லா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நல்லா இருக்குங்க. முன்பு சுவா இது போல கொடுத்தாங்க, செய்திருக்கேன். வேக வைத்த நியாபகம் இல்லை. அப்படியே செய்த நியாப்கம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாகற்காய் வற்றல் வித்தியாசமா குறிப்பு, நாங்கள் பாகற்காய் பகோடா தான் செய்திருக்கேன் ஆனால் பாகற்காய் வற்றல் இந்த வற்றலை பொரித்து தான் சாப்பிடனுமா, வத்தல் குழம்பு செய்யும் போது இந்த வற்றலையும் சேர்த்து செய்யலமா. சூப்பர்.

வித்தியாசமான‌ குறிப்பு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பாகற்காய் வற்றல்சூப்பர் செய்துபார்க்கிரேன்

அன்பு பிரியா,
வேக‌ வைக்கும் போது நாங்க‌ ஒரு கொட்டை புளி சேர்ப்போம். இதே போல் புளித்த‌ மோரில் ஊற‌ வைத்தும் காய‌ வைப்போம்.

சுகர் இருக்கிறவங்களுக்கு ஓவனில் வைத்து ஃப்ரை பண்ணிக் கொடுக்கலாம்.
நல்ல‌ குறிப்பு.

அன்புடன்,
செல்வி.

வறுத்து வைத்துள்ள பாவக்காய் வற்றல் பார்க்கவே நல்லா இருக்கு.எங்க வீட்ல பொரியலுக்கு இப்படித்தான் காலையிலே வெட்டி எலுமிச்சை சாறு பிளிந்து வெயிலில் காய வைத்து விடுவார்கள், மதியம் பொரியல் செய்வதுண்டு.
எனக்கு பாவக்காய் ஒத்துக் கொள்வதில்லையென்பதால் நான் சாப்பிடுவதில்லை.