கோஸ் ரொட்டியும் தேங்காய் சம்பலும்

தேதி: May 6, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

ரொட்டிக்கு:
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சம்பலுக்கு:
துருவிய தேங்காய் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மாசித்தூள் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
எலுமிச்சை சாறு - புளிப்பிற்கேற்ப
உப்பு - தேவையான அளவு

ரொட்டி மற்றும் சம்பலுக்கு தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கோஸ் சேர்த்து வதக்கவும்.
பவுலில் மைதாவுடன் கோதுமை மாவு, வதக்கிய கோஸ், தேங்காய் துருவல் மற்றும் உப்புச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பிறகு மாவை சப்பாத்திக்கு உருட்டும் அளவைவிட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி மொத்தமான சிறிய ரொட்டிகளாக கையால் தட்டிக் கொள்ளவும்.
தட்டிய ரொட்டிகளை எண்ணெய் தடவிய தவாவில் போட்டு சுட்டெடுக்கவும்.
சம்பல் செய்யக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து பிசைந்து சம்பலைத் தயார் செய்து கொள்ளவும்.
சுவையான கோஸ் ரொட்டியை தேங்காய் சம்பலுடன் பரிமாறவும்.

மாவில் கோஸ் சேர்த்திருப்பதே தெரியாது. காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை காய்கறி சாப்பிட வைப்பதற்கேற்ற இலகுவான வழி இது. விரும்பினால் கோஸுடன் வேறு காய்கறிகளையும் நறுக்கிச் சேர்க்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

கோஸ் ரொட்டி வித் பொல் சம்பல் அருமையான ரெசிபி, நீங்க சொன்ன மாதிரி குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாது. இது மாதிரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.

கோஸ் ரொட்டி சம்பல் வித்தியாசமாகவும்,அருமையாகவும் இருக்கு.மாசித்தூள்னா என்ன ஆங்கிலத்தில் அதன் பெயர் என்ன்பா ப்ளீஸ் சிரமம் பார்க்காமல் சொல்லுங்க.

ரொட்டி நல்லா இருக்கு ஈஸியான செய்முறை. கடைசி படத்தில் சம்பலுடன் பார்க்க வாயுறுது.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கு நன்றி பாரதி. எங்க வீட்டு சின்ன மேடமும் அப்படித்தான். லேசில் காய்கறி சாப்பிட மாட்டா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி இனியா. மாசித்தூள்னா Maldiv fish chips இது உடைக்காமல் முழுசாவும் இருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி காயத்ரி. வாயூறுதுங்குறிங்க அப்புறம் என்ன சும்மா பார்த்துகிட்டு எடுத்து சாப்டுருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சத்தான குறிப்பு, உமா, லஞ்ச் பாக்ஸ்க்கு நல்ல ஐடியா ,

வருகைக்கு நன்றி வாணி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்புடன் சகோதரிக்கு.
தங்களின் இந்த சமையல் குறிப்பு மிக்க நன்றாக உள்ளது.
தயவு செய்து குறிப்பை முழுமையான தமிழில் "கோஸ் ரொட்டியும் தேங்காய் சம்பலும்" என்று நல்ல தமிழில் தலைப்பை மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பொல் என்பது சிங்கள சொல்
வித் என்பது ஆங்கிலம்

நன்றி

ஈஸ்வரன்

கருத்துக்கு நன்றி சகோதரா! வித்தியாசமான தலைப்பாக இருக்கும் என்பதற்காகவே அவ்வாறு கொடுத்தேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பாபு அண்ணா அவர்களுக்கு, திரு. ஈசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு தலைப்பை கோஸ் ரொட்டியும் தேங்காய் சம்பலும் என மாற்றிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குழுவினருக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கேல்தியான ரேசிப்பி நல்ல குறிப்புக்கு,,,,,நன்றி

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

அன்பு உமா,
கோஸ் ரொட்டி தேங்காய் சேர்க்காமல் நான் செய்வேன். சம்பல் நன்றாக‌ இருக்கு. செய்து பார்த்துட்டு சொல்றேன்.

அன்புடன்,
செல்வி.

நன்றி சகோதரி

உங்களின் வித்தியாசமான ரசனையை நான் மதிக்கிறேன் சகோதரி. ஆனால் வாசிக்கும்போது ஏதோ அந்த வேற்று மொழி சொற்கள் ஒரு விதமான கசப்பாக உள்ளது. மொழிகளை நான் ஒரு குறையும் சொல்லவில்லை.
மீண்டும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈஸ்வரன்

நன்றி தோழி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கு நன்றி அக்கா. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி சகோதரா! இனி முடிந்தவரை வேற்றுமொழி கலப்பில்லாமல் குறிப்புகளுக்கு பெயர் கொடுக்க முயற்சிக்கிறேன். நான் அனுப்பியுள்ள அடுத்த குறிப்பு ஆங்கில மொழி பெயர் கொண்டது. அதற்கான தமிழ் பெயர் எனக்கு தெரியவில்லை.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கோஸ் ரொட்டி தேங்காய் சம்பல் மிகவும் அருமயா இருந்தது நன்றி