11 மாதக் குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கலாம்?

எனது மகனுக்கு 11 மாதங்கள் ஆகிறது. காலை- மாலை வேளைகளில் என்னென்ன உணவுகளை கொடுக்கலாம்? Cereal,Poridge,ods - இவை தவிர்ந்த (பொதுவாக கடைகளில் விற்பனையாகும் பாதுகாக்கப்பட்ட போத்தல்களில் அடைத்து விற்பனையாகும் உணவை நான் வாங்குவதில்லை) வேறு வீட்டில் செய்யக்கூடிய உணவுகள் எவை? பகல் வேளைகளில் பழங்கள் - காய்கறிகள் - சோறு ஆகியவற்றை கொடுக்கிறேன்.

இரவில் சூப் கொடுக்கலாமா? தெரிந்தால் சொல்லுங்கள்?

டியர் அம்பிகை தங்களுடைய கேள்விக்கு என்னுடைய சொந்த அனுபவத்தை தவிர்த்து பொதுவாக விடையளிக்கலாம் என்று நினைக்கின்றேன். காரணம் என் மூன்று குழந்தைகளும் குழந்தையாக இருக்கும் பொழுது உணவு விசயத்தில் வெவ்வேரு விதமாக இருந்தார்கள். ஆகவே அந்த அனுபவங்களைக் கொண்டு தங்களை குழப்பாமல் நேரிடையாக தங்கள் கேள்விக்கு மட்டும் விடையளிக்க முயற்சி செய்கின்றேன்.
குழந்தைகளுக்கு காலைஉணவு மாலைஉணவு என்று எதுவும்மில்லை.ஆகவே தங்கள் குழந்தையின் ஆரோக்கியதிற்கு ஏற்ற எல்லா உணவையும் எல்லா நேரத்திலும் கொடுக்கலாம்.
கடைகளில் கிடைக்கும் குழந்தை உணவுகளை வாங்குவதில்லை என்று கூறியுள்ளீர்கள் ஏன் என்று கூறவில்லை.என்னை பொருத்தவரை அவற்றினால் எந்த கெடுதலும் கிடையாது. ரெடிமேட் பேபி ஃபூட்ஸ் நல்ல சுகாதாரன முறையிலும் அதிலுள்ள சத்துக்கள் அதிகம் சேதாரமில்லாமலும் தான் நமக்கு விற்பனையில் உள்ளது. ஆகவே அவற்றை வாங்கி குழந்தைக்கு கொடுப்பதில் எந்த தவறுமில்லை.
தங்களின் 11 மாத குழந்தைக்கு திரவ பொருட்களுடன் திட உணவை அதிகம் கொடுக்கலாம்.காய்கறி பழங்களுடன் தாங்கள் அசைவபிரியரானால் இறைச்சி மீன் முட்டையை சேர்த்து கொடுக்களாம்.தயிர் சாதம், எல்லா வகை பருப்பிபிலும் சாதத்தை பிசைந்து நெய்யை சேர்த்து கொடுக்கலாம்.சூப்பில் சாதத்தை பிசைந்து கொடுக்கலாம்.
எதைச் செய்தாலும் நன்கு வேகவைத்து குழைத்து கொடுக்கவும்.சப்பாத்தி, இட்லி தோசை போன்ற உணவுகளை பாலில் நன்கு ஊறவைத்து ஊட்டி விடலாம்.குழந்தையின் தலையை நேராக பிடித்துக் கொண்டு தான் திட உணவை ஊட்ட வேண்டுன்.இல்லை யென்றால் சட்டென்று பொரைக்கு ஏறிவிடும்.மிகவும் சிறிய அளவில் தான் ஊட்டவேண்டும்.
இரவில் சூப்பு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் கிட்ட தட்ட ஒரு வயது வளரும் குழந்தைக்கு ஜீரண சக்தி அதிகமாக இருக்கும். இதனால் இரவில் தூக்கம் தடைபட வாய்ப்புள்ளது. ஆகவே இரவில் நல்ல திட உணவை கொடுப்பதால் குழந்தை நன்கு தடையில்லாமல் தூங்கும். இரவு தூக்கம் தான் குழந்தையுன் உடல் வளற்ச்சிக்கு மிகவும் அவசியம். மற்றபடி பால், சூப், பழரசம், தண்ணீர், போன்ற திரவ உணவை பகலில் அதிகம் கொடுக்குக்கலாம்.
ஆகவே குழந்தைக்கு எதை செய்துக் கொடுத்தாலும் அதனுடன் பொருமையையும் தங்களின் விலைமதிப்பில்லாத தாயன்பையும் சேர்த்து கொடுப்பிர்கள் என்ற நம்பிக்கையில் எனது கருத்தை இதனுடன் முடித்துக் கொள்கின்றேன். நன்றி.

டியர் மனோகரி.

ரெடிமேட் பேபி பூட்ஸ்ஸை நான் வாங்குவதில்லை என்று குறிப்பிட்டதற்கான முதன்மைக் காரணம் - மகனைப் பராமரிப்பதற்காக வேலைக்குப் போகாமல் வீட்டில்தான் இருக்கின்றேன். வாய்க்கு இதமாக உடனுக்குடன் புதிய உணவாக செய்து கொடுக்கலாமே என்றுதான்.

மற்றப்படி ஆரம்பத்தில் குழந்தைக்கு - ரெடிமேட் பேபி பூட்ஸ்ஸை கொடுக்கலாமா என்ற தயக்கம் இருக்கத்தான் செய்தது. இதைக் குழந்தைக்கு கொடுப்பதில் என் கணவரும் விரும்பவில்லை. ஆகவே இது பற்றி மாதாந்தம் குழந்தையை பார்வையிடும் "தாதி"யிடம் கேட்டபோது- ரெடிமேட் பேபி பூட்ஸினால் தீங்கில்லை> இருந்தாலும் வீட்டில் செய்யப்படும் உணவு சிறந்தது என்றதனாலும் - சுத்தம் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும் வாங்குவதில்லை.

மற்றும் நீங்கள் சொன்ன அறிவுரையை நான் பின்பற்றுகிறேன். நன்றி

மேலும் சில பதிவுகள்