தேதி: May 7, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ப்ரெட் - 10 துண்டுகள்
துருவிய சீஸ் - ஒரு கப்
வெங்காயம் - 2
கேரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை வேகவைத்து மசித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் மசித்து வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.

அதிலுள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் மசாலாக் கலவையை படத்தில் உள்ளவாறு உருட்டிக் கொள்ளவும்.

ப்ரெட் துண்டுங்களின் ஓரங்களை நறுக்கிவிட்டு, கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு ப்ரெட்டை அழுத்தவும். மீதமுள்ள ப்ரெட் துண்டுகளையும் இதே போல் தண்ணீர் தொட்டு அழுத்தி வைக்கவும்.

ப்ரெட் துண்டுகளின் மேல் சீஸ் துருவலைப் பரவலாகத் தூவி, உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டையை ப்ரெட்டின் மீது ஒரு ஓரமாக வைக்கவும்.

பிறகு தண்ணீர் தொட்டுக் கொண்டு ப்ரெட்டை ரோல் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ப்ரெட் ரோல்ஸைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சுவையான ப்ரெட் ரோல் தயார். டொமேட்டோ சாஸுடன் பரிமாறவும்.

விரும்பினால் இதனுடன் பட்டாணி, பீட்ரூட் மற்றும் பீன்ஸ் சேர்த்துச் செய்யலாம்.
Comments
நித்யா
குறிப்பு அருமை,படங்கள் அழகு;நானும் இது போல் செய்வதுண்டு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நித்யா
சூப்பர் அருமையாக உள்ளது. ப்ரெட்டால் ஒரு வித்தியாசமான ரெசிபி, படங்களும் தெளிவாக உள்ளன.
நித்யா
இதைப் போலவே எங்கள் ஊர் பேக்கரியிலும் கிடைக்கிறது நானும் முயற்சி செய்ய நினைச்சுருக்கேன் இப்போ குறிப்பே கிடைச்சுடுச்சு நன்றி நித்யா
ப்ரெட் ரோல்
அன்பு நித்யா,
நல்லதொரு ஸ்னாக்ஸ் குறிப்பு. பாராட்டுக்கள்.
அன்புடன்
சீதாலஷ்மி
நித்யா
பிரட் ரோல் அருமையா இருக்கு நித்யா, நான் செய்துப் பார்த்துவிட்டு சொல்ரேன்
அருமை.................
சமையலில் அதிக அனுபவம் இல்லாவிட்டால் கூட செய்ய முடியும் ஒரு சுலபமான ரெசிபி............ கட்லட் ரெசிபி போலவெ உள்ளது... நிச்சயம் முயற்சி செய்கிறேன்.
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
நித்யா
யம்மி ரோல் சூப்பர். உங்க மீன் மக்ரோனி செய்தேன் நித்யா ரொம்ப நல்லாருந்தது.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
நித்யா
அருமையா பண்ணிருக்கீங்க,வாழ்த்துக்கள் நித்யா
sis
எனக்கு பிடிச்ச ரோல்ஸ் அருமையா இருக்கு வாழ்த்துக்கள் sis by Elaya.G
நித்யா
அன்பு நித்யா,
பிரட் ரோல் அழகா இருக்கு. நான் இதனுடன் பனீர் சேர்ப்பேன்.
அன்புடன்,
செல்வி.
hi friend
hi friend, naan arusuvaiku puthiya member naan firsta try pannathu onkada bread rolla than. athu superva irunthathu.
நித்யா
அழகா இருக்கு . நானும் செய்து பார்க்கிறேன்
Be simple be sample
நித்யா
செய்ய எல்லாம் வாங்கி வெச்சுட்டேன், செய்துட்டு சொல்றேன் நித்யா... சூப்பரா இருக்குங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி.
குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி..
தோழிகள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி..
உமா மீன் மக்ரோனி செய்து பார்தது பதிவு போட்டது ரொம்ப சந்தோசம்.
செஃபா செய்து பார்தது பதிவு போட்டது நன்றி...
வானி அக்கா செய்து பாருங்கள்.
ஹாய் நித்யா
செய்வதுக்கு மிகவும் சுலபமான குறிப்பு செய்துபார்துட்டு சொல்கிறேன்.
என்றும் அன்புடன்,
கதீஜா
நித்யா
சத்தியமா உங்களுக்கு ரொம்ப பொறுமைங்க... நான் 3 தான் செய்தேன், அதுக்கு மேல முடியல ;) ஆனா சுவை... வெகு அருமை. உங்க சாய்ஸ் சீஸ்... அது தான் ரொம்ப ஸ்பெஷலா இருந்துது. மேல க்ரிஸ்பியா, உள்ள கொஞ்சம் இனிப்பு கலந்து ஜூஸி சீஸ், அதுக்கு உள்ள காரமான ஸ்டஃபிங்... யம்மி!!! எனக்கு ரொம்ப பிடிச்சுது நித்யா, செய்ய தான் பொறுமை அல்லது சாமர்த்தியம் அதிகம் வேண்டும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பார்க்கும் போதே நாக்கு
பார்க்கும் போதே நாக்கு ஊருகிரது.பிரெட் ரோல் சூப்பர்.
நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா