தேதி: May 10, 2014
க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ்
க்வில்லிங் டூல்
கம்
கத்தரிக்கோல்
பேப்பர் ப்ளேட் (அ) ப்ளாஸ்டிக் தட்டு
தேவையான நிறங்களில் க்வில்லிங் பேப்பர்களை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிவப்பு நிற க்வில்லிங் பேப்பரில் பூவின் இதழ்களைப் போல் செய்து கொள்ளவும். பூவின் இதழ்களின் மேல் காண்ட்ராஸ்ட் நிற பேப்பரில் க்வில் செய்து அவுட் லைனாக ஒட்டவும். இதே போல் மூன்று இதழ்கள் செய்து அவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒட்டிக் கொள்ளவும். பச்சை நிற பேப்பரில் கொடிகளாக செய்து ஒட்டவும்.

க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸை ஒரே அளவாக வெட்டி எடுத்து படத்தில் காட்டியவாறு வெவ்வேறு நிறங்களில் பட்டன்கள் செய்யவும்.

முதலில் பேப்பர் ப்ளேட்டில் பென்சிலால் பெயர்களை எழுதிக் கொள்ளவும். பெயரின் அளவைவிட சற்று நீளமாக பேப்பரை வெட்டி எடுத்து, பேப்பரின் நுனியில் சிறிது க்வில் செய்து பென்சிலால் எழுதிய பெயரின் மீது ஒட்டவும். இடையில் வரும் கோடுகளுக்கு நீல நிற பேப்பரில் நீள்வட்டமாக க்வில் செய்து, படத்தில் இருக்கும்படி ஒட்டவும். (நான் க்வில்லிங்கில் மணமக்களின் பெயர்களை எழுதியுள்ளேன்).

மீதமுள்ள இடத்தில் தயார் செய்த பூக்களையும், கொடிகளையும் ஒட்டிவிடவும்.

பேப்பர் ப்ளேட்டின் ஓரங்களில் தயார் செய்து வைத்துள்ள பேப்பர் பட்டன்களை ஒட்டி. விருப்பம் போல அலங்கரிக்கவும். க்வில்லிங் ஆரத்தி தட்டு ரெடி

Comments
க்வில்லிங் ஆரத்திதட்டு
க்வில்லிங் ஆரத்திதட்டு அழகாக செய்திருக்கீங்க.வாழ்த்துக்கள் .
ஆரத்தித்தட்டு
அழகா இருக்கு ப்ரியா.
ஒரு சின்..ன சந்தேகம், இதுல ஆரத்தி எப்படி!!
- இமா க்றிஸ்
இமா
நாங்க இதில் ஆரத்தி எடுக்கவில்லை... வரவேற்பு தட்டாக வைத்தோம்...
பிரியா
மிகவும் சுலபமாக செய்ய கூடிய ஆரத்திதட்டு மிகவும் அழகாக உள்ளது. ப்ளேட்டின் ஓரங்களில் கலர்புல்லான க்வில்லிங் பேப்பர் அழகாக உள்ளது.
இமா, ப்ரியா
ஆரத்தி தட்டு ஐடியா சூப்பர், நல்லா இருக்கு கலர். இன்னும் நிறைய வச்சு பில் செய்திருக்காலம்ல இன்னும் அழகா இருந்திருக்கும்.
இமா ஆரத்தி எடுக்க தண்ணில குங்குமம் சுண்ணாம்பு கலந்து வெத்தலைல சூடம் வச்சி எடுக்கறது அது மட்டும் தான் மற்றபடி ஆரத்தி தட்டுகள் எல்லாமே நம்ம கலை ரசனைக்காகவும், நம்ம வீட்டு திருமணத்தை இன்னும் அழகுப்படுத்தவும் தான் அதனால எல்லாவற்றிலும் ஆரத்தி எடுக்கறதில்லை.
ப்ரியா
ப்ரியா க்வில்லிங் பேஸிக் வச்சு ஆரத்து தட்டுலாம் கூட பண்ணலாமா ரொம்ப சூப்பரா இருக்கு. நல்ல ஐடியா ப்ரியா.
ஆரத்தி தட்டு
ப்ரியா மேடம் ஆரத்தி தட்டு ரொம்ப எளிமையாக, அழகாக இருக்கு...
கலை
காயத்ரி
விளக்கமாக பதில் சொன்னதற்கு நன்றி. எனக்கு இது எல்லாம் புதிது. ஆரத்தி என்றால் சுற்றிப் போடுவது என்று மட்டும்தான் தெரிந்திருந்தது. ப்ரியாவுக்கும் என் நன்றி.
- இமா க்றிஸ்
ஒரு சின்..ன சந்தேகம், இதுல ஆரத்தி எப்படி!!
@imma
தட்டின் நடுவில் டீ லைட் வைக்கலாம் ..
paper macheதட்டு மிக உகந்தது
ஆரத்தி தட்டு
இப்போ மூங்கில் தட்டுக்களும் கிடைக்குது அதில் கப் கான்டில் வைக்க ஸ்பேஸ் விட்டு மத்த இடத்தை டெகரேட் செய்யணும்
அஞ்சூஸ்..
;)) யார்ப்பா என்னைப் போலவே டவுட்டு கேட்கிறாங்க என்று யோசிச்சுட்டே வந்தேன். யூசர் ஐடீ ரிக்கவர் பண்ணியாச்சு என்று புரியுது. ;)
எனக்கு இது எல்லாமே புதுசுதான் ஏஞ்சல். விம் பாருக்கு நன்றி. ;D
- இமா க்றிஸ்