வரகரிசி பாயசம்

தேதி: May 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வரகரிசி - கால் கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 10 - 15 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - சிறிது
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
நீர் - ஒன்றரை கப்
முந்திரி, திராட்சை, நெய் - தேவையான அளவு
குங்குமப்பூ - சிறிது


 

வரகரிசியை சுத்தம் செய்து ஒன்றரை கப் நீர் ஊற்றி, பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
அரிசி அரை பதமாக வெந்ததும் பால் சேர்த்து வேகவிடவும்.
வெதுவெதுப்பான பாலைச் சிறிதளவு எடுத்து, அத்துடன் குங்குமப்பூவைப் போட்டு தனியாக வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
அரிசி குழைய வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி, சற்று கெட்டியாகத் துவங்கியதும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்து, ஏலக்காய்த் தூள் மற்றும் குங்குமப்பூ கலவையைச் சேர்த்துக் கிளறவும்.
சுவையான வரகரிசி பாயசம் தயார். விரும்பினால் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

ஏலக்காய்த் தூளுக்கு பதிலாக ஏலக்காயைத் தட்டி பட்டை மற்றும் லவங்கத்துடன் சேர்த்து சாதத்தில் போட்டு வேகவிடலாம். பட்டை மற்றும் லவங்கத்தை இனிப்பில் சேர்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் சேர்க்காமல் விட்டுவிடலாம். இதில் ஏலக்காய்க்கு பதிலாக எஸன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

முதலில் நீரில் மசாலா பொருட்களைப் போட்டு, கொதி வந்ததும் அரிசியைச் சேர்க்கலாம். பாலுக்கு பதிலாக முக்கால் கப் கன்டண்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்.

நான் சர்க்கரையைக் குறைவான அளவில் சேர்த்துள்ளேன், உங்கள் சுவைக்கேற்ப சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு வனி,

சிறு/குறு தானியங்களில் வெரைட்டியாகக் கொடுத்து அசத்துறீங்க. பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய்,
சித்ரா பவுர்னமிக்கு வரகரசி பாயசம் பதிவுகொடுத்து அதுதாங்க‌ இனிப்பு கொடுத்துட்டீங்க‌.வாழ்த்துக்கள்.நானும் வரகரசி பாயசம் செய்து அசத்தப்போறேன்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

வரகரிசி குறிப்பாகொடுத்து அசத்துதீங்க .நல்லாருக்கு ஆனா இங்குவரகரிசி கிடைக்காது.நீங்க ஒருகுவிண்டால் வரகரிசி வாங்கிருப்பீங்க போல அதுல ஒரேஒருகிலோ மட்டும் எனக்கு அனுப்புங்க வனிக்கா.

பார்க்கவே மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் வணி வரகரசி எப்படி இருக்கும்.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

வரகரிசி பாயசம் மிகவும் அருமை பாயசத்தில் ஏலக்காய் போடுவாங்க ஆனால் பட்டை, லவங்கம் இதெல்லாம் போடுவாங்களா வனிதா,

அந்த பிள்ளையார் சிலை பார்க்க ரொம்ப அழகாக உள்ளது கோல்டன் கலர்.

யம்மி வனி. சூப்பர். ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க. இன்னும் என்னல்லாம் இருக்கு வரகரிசில? அசத்துங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனி அசத்தலான சமையல் செய்து பாப்போம்னா ........................
வரகரிசினா என்னான்டே தெரியாதுங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பு வனி,
வரகரிசி பாயசம் சூப்பர். வரகரிசி வச்சிருக்கேன். பாயசம் தான் வைக்க‌ முடியாது. ஏதும் விஷேசம்னா இதை செய்துடறேன்.

அன்புடன்,
செல்வி.

பாயசம் அருமை பார்க்கவே வாயூறுது. வாசனைக்காக வேகும் போதே பட்டை லவங்கம் சேர்க்கனுமா வனிதா.

பாயசம் சூப்பர்,கடைசி படம் நாவூறுது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வரகரிசி பாயாசம் சூப்பர்.. இந்த‌ அரிசியை பற்றி நான் கேள்விப்பட்டது இல்லை.. இதற்கு வேறு எதாவது பெயர் உண்டா...

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த ஒரு வரகரிசி தான் என்கிட்ட சிக்கியிருக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி ;) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் வாங்கி வந்ததே 1 கிலோ தாங்க ;) நீங்க விரும்பினா இதை பச்சரிசியில் செய்து பாருங்க :) மிக்க நன்றி. வரகு அரிசி வாங்கி அனுப்பிடுறேன் சீக்கிரம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வெண்னிலா. நலமா? வரகரிசி என்பது ஆங்கிலத்தில் Kodo millet. கூகிலில் தேடினால் கிடைக்கும்... பார்க்க பொடியான ஜவ்வரிசி போல இருக்கும். முனையில் புள்ளியாக ப்ரவுன் கலர் காணப்படும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டை லவங்கம் சேர்த்து பாயாசம் செய்வது மாலத்தீவு ஸ்டைல். சாகோ போந்திபாய் என ஒரு குறிப்பு இருக்கும்... அதை பார்த்தால் தெரியும். அவர்கள் பட்டை / லவங்கம் / ரம்பை இலை தான் பயன்படுத்துவார்கள். அந்த முறையில் தான் இந்த பாயாசம் முயற்சித்தேன். மிக்க நன்றி பாரதி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) வரகரிசி இன்னும் கொஞம் இருக்கு, என்ன செய்யலாம்னு யோசனை தான்... முடிவு பண்ணல. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது ஒரு வகை சிறு தானியம் தான். அரிசியில் செய்யும் எல்லாம் இதிலும் செய்யலாம். இட்லி, தோசை, பனியாரத்துக்கு கூட அரைக்கலாம். ஆனால் அரிசியை விட சத்தானது. ஜவ்வரிசி போல தான் இருக்கும், சிறியதாக இருக்கும். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ஆமாம் வேகும் போதே சேர்த்தால் அரிசியில் அதன் வாசம் நன்றாக கலந்திருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Kodo millet என்பது தான் இதன் ஆங்கில பெயர். கூகிலில் தேடினால் படம் கிடைக்கும், வாங்க சுலபமா இருக்கும். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா