Microwave Foods

Is it good to health to eat microwave foods everyday? Is the vitamins spoil when we cook in micorwave?

ஹலோ வினோதா எப்படி இருக்கின்றீர்கள். நல்ல பயனுள்ள கேள்விகளை தான் கேட்டுறுக்கீன்றீர்கள். மைக்ரோஅவனின் நன்மை தீமையை ஆராய்வதற்க்கு முன்பாக அவை சமையர் கட்டுக்கு ஏன் வந்தது என்று பார்த்தோமானால் அவை நம் வேலையின் பளுவை குறைப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட சாதனம் என்று விளங்கும். அதை நாம் எப்படி பயன் படுத்துகின்றோம் என்பதில் தால் உள்ளது அதன் நன்மையும் தீமையும். என்னுடைய அனுபவத்திலிருந்து அவற்றால் தீமையை விட நன்மைகளே அதிகம் என்பேன். இதனை பயன்படுத்தியதால் இந்த பிரச்சனை வந்தது என்று என்னால் எதுவும் கூற முடியாத போது அதனால் உடளுக்கு கெடுதி என்றும் கூற இயலாதல்லவா.
மேலும் வைட்டமின்கள் அழிக்கபடுமா என்று கேட்டிருந்தீர்கள். வைட்டமின் நிறைந்த எந்த உணவையும் எதில் சமைத்தாலும் சமைக்கும்பொழுது அதிலுள்ள சத்துக்கள் வீணாகிவிடும் என்பது எல்லோரும் அறிந்ததே. எவ்வளவு நேரம் சமைக்கின்றோமோ அவ்வளவு சத்துக்களை நாம் வீணாக்கி விடுகிறோம். ஆகவே தான் மருத்துவர்கள் காய்கறிகளை பச்சையாக உண்ணும் படி பரிந்துரை செய்கின்றார்கள். ஆக மைக்ரோஅவனில் சமைப்பதால் தான் வைட்டமின்கள் அழிக்கபடும் என்ற கூற்று சரியா இருக்காது என்பது என் கருத்து.நான் இந்த மைக்ரோஅவனை கிட்டதட்ட பதிமூன்று வருடங்களாக உபயோகித்து வருகின்றேன் என்ற முறையில் என் அனுபவத்தை தங்கள் கேள்விக்கு பதிலாக எழுதலாம் என்று தான் எழுதினேன். அதிகார பூர்வமான பதிலை தங்களின் சுய முயற்சியால் ஆராட்சி செய்து பார்க்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

Thank you, Manohari

விட்டிற்க்கு பயன்படுத்த எந்த மாதிரி மைக்ரோவேவ்அவன் வாங்க வேண்டும்.

டியர் பானு அவர்களுக்கு, மைக்ரோ அவனை வீட்டு உபயோகத்திற்கென்றால் பொதுவாக உணவை சூடு படுத்துவதற்க்கும் ஃபிரீசரில் இருந்து எடுத்த பொருளை உருக்குவதற்க்கும், காய்கறிகள் போன்ற பொருட்களை வேகவைப்பதற்க்கு போன்ற தேவைகளுக்கு தான் பெரும்பான்மையானவர்கள் அதனை உபயோகிக்கின்றோம். இந்த தேவைகளுக்கு மட்டுமென்றால் சாதாரன வகை மைக்ரோஅவன் போதும். பேக்கிங் செய்ய வேண்டும்மென்றால் கன்வெக்ஷன் மைக்ரோ அவன் தான் சிறந்தது. இதில் எல்லாவகை தேவைகளுக்கும் பயன்படும். ஆகவே தங்கள் தேவைக்கேற்ப்ப, விலைக்கேற்ப்ப, மற்றும் முக்கியமாக அதன் சைஸ் க்கு ஏற்ப்ப தேர்வு செய்து வாங்குவது தான் சிறந்தது. மற்றபடி மார்கட்டில் உள்ள எல்லா பிரான்ட்டுக்களுக்கும் கியாரன்டி இருப்பதால் கவலையில்லை. பழுது ஏற்ப்பட்டால் திருப்பி கொடுத்து விடலாம். ஆகவே தங்களுக்கு பிடித்த அவனை தைரியமாக வாங்கலாம்.நன்றி.

மிக்க நன்றி மனோகரி மேடம்.

சாதாரன வகை மைக்ரோவேவ் அவனில் கேக் செய்ய முடியுமா?.நன்றி.

டியர் பானு, சாதாரணவகை மைக்ரோவேவ் அவெனில் பேக்கிங் செய்ய முடியாது. காரணம் மைக்ரோஅவெனிலிருந்து வெளிப்படும் அலைகள் அதில் வைக்கும் பொருட்களில் ஊடுருவிச் சென்று அதிலுள்ள ஈரத்தைக் கொண்டு அதிவிரைவில் வேகவைத்து கொடுக்கும்,அவ்வளவு தான்.ஆனால் கேக் செய்வதற்க்கு சாதாரண வெப்பம் போதுமானது.அவை சாதாரண மைக்ரோவேவ் அவனில் வெளிப்படாது. அதர்கென்று பிரித்தியோகமாக தயாரிக்கபடும் மின் விசிறிகளைக் கொண்ட அவெனால் தான் முடியும். ஆகவே கன்வெக்ஷன் அவெனில் இது போன்ற திறனைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அவை தான் பேக்கிங் செய்ய சிறந்த அவன். அதோடு மட்டுமல்ல மேலும் அவை கிரில்லிங், பிரொவ்னிங், டோஸ்டிங், போன்ற சமையல் முறைகளுக்கும் ஏற்றது. விலை சற்று அதிகம் ஆனால் பயனோ மிக மிக அதிகம். ஒகே. நன்றி

டியர் Monohari மேடம் மிக்க நன்றி.

yes itz safe to cook in microwave..but the only thing iz do not use platic containers inside micrpowave..use something like crockery, Corning Ware, Pyrex or ceramic containers for heating food....thiz iz a request frm john hopkins cancer center..heating plastics emits dioxide which helps in develeoping cancerous cells(breast cancer mostly)

மனோகரி மேடம் நலமா இருக்கிற்களா?.வீட்டிற்க்கு பயன்படுத்த கன்வெக்ஷன் மைக்ரோ அவன் வாங்கலாம் என்று இருக்கிறோம்.ஆனால் கன்வெக்ஷன் மைக்ரோஅவன் என்ன Size And Brand-ல் வாங்குவது என்று தெரியவில்லை.தாங்கள் எனக்கு என்ன Size And Brand-ல் வாங்குவது என்று ஆலோசனை கொடுத்தால் உதவியாக இரூக்கும்.நன்றி.

மேலும் சில பதிவுகள்