துளசி செடி வாடல்

வணக்கம் friends, நான் துளசி செடி வீட்டில் வளர்கிறேன் . அதை இருந்து வாங்கி வந்து 2 வாரங்கள் ஆகிறது . முதலில் நன்றாக பூ பூத்தது . இப்பொழுது அதன் இலைகள் லேசாக வாடி இருக்கிறது . சில இலை பழுத்து இருக்கிறது. எங்கள் வீட்டு பல்கனியல் வைத்து உள்ளேன் . மதியம் வெயில் 3 மணியல் இருந்து 6 மணி வரை வெயில் இருக்கும் . இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும். மீண்டும் செழிப்புடன் வளர என்ன போடலாம் .இன்று தான் வர ட்டி வாங்கி வந்து தண்ணீரில் கலந்து உற்றிநீன் .

துளசி செடிக்கென்று அவ்வளவாக பராமரிப்புகள் தேவை இல்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். வரட்டி நீரீல் கரைத்து ஊற்றியதே போதும். இன்னும் ஒரு சில நாளைக்கு தண்ணீர் வேண்டாம். ஓரளவு ஈரம் காய்ந்த பின்பு மண்ணை நன்கு கிளறி விடுங்க. கிளறி விடும் பொழுது வேர்கள் அறுந்து போகாமல் பக்குவமாக கிளறிவிடுங்க. வேருக்கு நல்ல காற்று கிடைக்கும் பொழுது இலைகள் பழுப்பாகாமல் இருக்கும்.

அன்புடன்
THAVAM

நன்றி தவமணி அண்ணா, துளசி செடியில் பூக்கள் பூக்க ஆரம்பித்தவுடன் அதை கிள்ளி விட வேண்டும் என்று படித்தேன். எதனால் என்று சொல்ல முடியுமா. கறிவேப்பிலை செடியும், சோற்று காற்றாலை யும் வைத்து உள்ளேன். கறிவேப்பிலை செடிக்கு மோர் ஊற்றினால் செழிப்பாக வளரும் என்று படித்தேன். வரட்டி போட்டாலும் நன்றாக வளரும் என்று படித்தேன். சோற்று காற்றாலைக்கு நீர் மட்டும் ஊற்றினால் போதுமா. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உரம் போட வேண்டும்.

எள் செடி , கொத்தமல்லி செடி எப்படி விதை போட்டு வளர்ப்பது என்று சொல்ல முடியுமா.

அடேங்கப்பா... செடிகள் வளர்ப்பில் ரொம்ப ஆர்வமா இருப்பீங்க போல!.
ரொம்ப சந்தோஷமா இருக்கு. செடிகள் ஒவ்வொன்றும் நமது குழந்தைகள் போல... செடிகளுக்கு வேலை செய்யும் பொழுது அதனுடன் பேசிக் கொண்டே வேலை செய்யுங்கள். அது மிக நன்றாக வளரும். எல்லா செடிகளுக்குமே இயற்கையான வரட்டி போட்டாலே போதும். கரைத்து ஊற்றுவதை விட வரட்டியை தூளாக நொறுக்கி மண்ணில் போட்டு கிளறி விட்டு நீர் ஊற்றுங்க மண் மிருதுவாக இருக்கும்.
எள் கொத்தமல்லி எப்படி விதைப்பது என்று இங்கே உள்ள வீட்டு தோட்டம் பக்கங்களில் சொல்லி விரிவாக இருக்கிறோம்.

அன்புடன்
THAVAM

நன்றி அண்ணா, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வரட்டி போட வேண்டும்.

பழைய பதிவுகளில் பார்த்தேன் கொத்தமல்லி விதையை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து போட வேண்டும் என்றும், கொத்தமல்லி விதையை இரண்டாக உடைத்து போட வேண்டும் என்றும் இரண்டு விதமான கருத்துகள் இருந்தது. எனக்கு குழப்பமாக உள்ளது. கொஞ்சம் தெளிவாக கூறவும்.

எள் செடி வளர்ப்பதற்க்கும் நாம் சமையலுக்கு உபயோகிக்கும் எள்ளை தூவி விட்டால் போதுமா. விதைத்த பிறகு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும்.

வெந்தய கீரைக்கு வீட்டில் வளர்க்க வெந்தயத்தை தூவினால் வளருமா.

வணக்கம் தவமணி அண்ணா, இன்று துளசி செடி க்கு தண்ணீர் விடும்பொழுது அதன் இலைகளில் வெள்ளை பூச்சிகள் இருந்தது. துளசி செடியின் இலைகள் வெள்ளையாக மாறுகிறது. இப்பொழுது என்ன செய்வது . நான் தண்ணீரில் கற்பூரம் கலந்து தெளித்தேன். இதனால் செடி க்கு பாதிப்பு வருமா? தயவு செய்து பதில் தரவும்.

என் கேள்விக்கு யாரேனும் பதில் தருங்கள்

வெள்ளை பூச்சி என மேலே தேடி பாருங்கள்... ஒரு இழையில் சமீபத்தில் தான் இதை பற்றி திரு.தவமணி விளக்கம் சொன்னார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெள்ளை பூச்சியை கட்டுபடுத்த முடியவில்லை என்று அதன் இலைகள் முழுவதும் நீக்கி விட்டேன். காம்பு மட்டும் உள்ளது. மீண்டும் இலைகள் முளைக்க என்ன செய்யலாம்.

மேலும் சில பதிவுகள்