குழந்தை வளர்ப்பில் எச்சரிக்கை!

நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் சில தவறுகள் செய்து விடுவது உண்டு. அப்படி நீங்கள் செய்த தவறுகளும், அதை சரி செய்ய கையாண்ட முறைகளும், தீர்வுகளும் பற்றி அறிவுரை கூறினால் புதிய தாய்மார்கள் எச்சரிக்கையாக இருப்போம். தயவு செய்து உதவி செய்யுங்கள் சகோதரிகளே...

என் மகனுக்கு 10 மாதம் முடிந்துள்ளது.. அவன் இப்பொழுதே சரியான‌ குரும்பு. என் கணவர் இருந்தால் என்னை கண்டுக்கொள்ளமாட்டான்..அவர் அலுவலகம் சென்றுவிட்டால் போதுமே என் பாடு என்னுடைய‌ ஒவ்வொரு நொடியும் பயந்து பயந்து கழிப்பேன்.. என்னுடைய‌ சமையலரை முழுவதும் கபோர்டு வைக்க‌ பட்டுள்ளது.. கேஸ் அடுப்பின் ஒயர் தவிர‌ வேறு எதுவும் வெளியே தெரியாதபடி உள்ளது அதனால் என் மகன் சமையலரைகுல் அவன் தவள்வதை நான் கண்டுகொள்ள‌ மாட்டேன் ஒரு நாள் அவன் கேஸ் ஒயரை பிடித்து இழுத்து விட்டான்.. அது அவன் தலையில் விழும் நிலையில் நான் போய் பிடித்தேன்.. அந்த‌ ஒரு கணம் என் உயிர் போய்விட்டது..

மற்றொன்று படுக்கை அறையில் இருக்கும் அட்டாச்டு பாத்ரூம் அதை தெரியாமல் மறந்து தாள் பூட்டவில்லை என்றால் தவள்து பாத்ரூம் போய் வெஸ்டர்ன் டாய்லட் பிடித்து நிற்பான்.. அதுபோல் மீன் தொட்டி பிடித்து ஆட்டுவது.. வாஸ்பேசன் பிடித்து தொங்குவது.. கீழே எது இருந்தாலும் வாயில் போட்டு கொள்வது அதிலும் என்னை பார்த்து விட்டால் அசை போடுவதை நிறுத்தி விடுவான்.. இதற்கு மேல் என் வீட்டுக்கு வரும் யார் எடுத்தாலும் போய் விடுவான்..வீட்டை விட்டு வெளியே போனால் போதும் அவனுக்கு.. நான் டெல்லியில் வசிகிறேன் இங்கு பாதுகாப்பு எல்லோருக்கும் பொதுவாகவே குறைவு.. இதில் என் மகனை வைத்து நான் சமாளிப்பது இருக்கே அப்பா..

என்னுடைய‌ அனுபவத்தில் நான் சொல்லுவது.. கணவர் வீட்டில் இருக்கும் போது எல்லா வேலைகளையும் முடித்து கொள்ளுங்கள் அதன் பின் முழு நேரமும் ஒரு வினாடி கூட‌ அசராமல் குழந்தையை கண்காணிப்பதற்கே முழு நேரமும் எடுத்து கொள்ளூங்கள்.. குழந்தை தவள‌ ஆரம்பித்து விட்டாள் வீட்டை சுத்தமானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளூங்கள்.. எதாவது ஒரு பொருளை கீழே போடும் முன் அதை நம் குழந்தை வாயில் போட்டுவிடும் என்பதை மனதில்வைத்து குப்பையில் போடுங்கள் அவர்களூக்கு கை எட்டும் அளவில் சுவிட்ச் பாக்ஸ் ஹோல்டர் இருந்தால் அதை கருப்பு நிற‌ இன்சுலேசன் டேப் போட்டு அடைத்துவிடுங்கள்.. ஆபத்தான‌ பொருட்கள் (பெட்ரோல்,, வேதியல் பொருட்கள்..மருந்து) இருந்தால் அதை குழந்தைக்கு தெரியாமல் பார்துகொள்ளூங்கள்..

முக்கியமாக‌ தோடு தோட்டின் திருகாணி மோதிரம் எதையும் மறந்து வைத்து விட்டால் அல்லது படுக்கையில் விழுந்து விட்டால் அதை உடனே எடுத்து விடுங்கள் அதை எளிதில் வாயில் போட்டு கொள்ளுவார்கள்.. பால்கணியில் துனி காயவைபவர்கள் குழந்தையின் முன் வெளியே செல்லாமல் அவர்கள் தூங்கும் போதோ இல்லை யாராவது வீட்டில் இருக்கும் போது செய்யுங்கள்..

குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது கவணமாக‌ கொடுக்கனும்.. தேன் போன்ற‌ திக்கான‌ சிரப்புகள் இருந்தால் அதை கொஞ்சம் சுடுதண்ணீயில் கலந்து கொடுக்கவும்.. குழந்தை அழுகும் போது இப்படி திக்கான‌ மருந்து கொடுத்தால் தொண்டையில் கட்டி விடும் பிறகு குழந்தை மூச்சுவிடாமல் தடுமாறும் இந்த‌ மருந்து அனுபவம் இருக்கே எனக்கும் என்கணவருக்கும் எத்தனை வருஷம் ஆனாலும் மறக்காது... என் மகனுக்கும் 4மாதத்தில் சலி பிடித்த போது ஒரு நாள் இரவு 11 மணி அளவில் சிரப் கொடுத்தோம் அது தேன் போல‌ திக்காக‌ இருந்தது அதனால் அது தொண்டையில் அடைத்து அவன் மூச்சுவிடாமல் முழிகள் பிதுங்கிவிட்டது உடனே கார் எடுத்து கொண்டு மருதுத்துவமனைக்கு சென்று எமெர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்தோம் பின் வாமிட் எடுக்க‌ வைத்து மூச்சு சரி செய்வதுக்குள் எங்களுக்கு உயிரே போய்விட்டது.. எனவே குழந்தை இருப்பவர்கள் புதிய‌ தாய்மார்கள் கவனமாக‌ இருப்பது நல்லது... இவை அனைத்தும் என் 10 மாத‌ குழந்தையின் அனுபமே

மிக்க மிக்க நன்றி அபி... இதை போல தான் நிறைய அனுபவங்களை எதிர்ப்பார்க்கிறேன். இன்னும் நியாபகம் வந்தால் எழுதுங்கள். மற்ற சகோதரிகளும் தங்கள் அறிவுரைகளை வழங்குங்கள் ப்ளீஸ்... தனியாக சமாளிப்பது எளிதானது அல்ல கூடுதல் எச்சரிக்கை அவசியம் என்பதை உணர்கிறேன். இன்னும் சில தினங்களில்என் வீட்டுக்கு சென்றுவிடுவேன். அங்கு நானும், கணவரும் மட்டுமே. சற்று பயமாக உள்ளது. தெரியாமல் எதையாவது செய்து அவதிபட நேருமோ என்று.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

அன்பு சகோதரிகளே,
எனது மூத்த‌ மகள் மூன்று மாத‌ குழந்தையாக இருந்த‌ போது நடந்த‌ நிகழ்வு இது. இன்று நினைக்கும்போதும் ஒரு பயம் மனதிற்குள் ஆட்கொண்டுவிடும். அன்று இரவு 11 மணி இருக்கும். வீட்டில் எல்லோரும் உற‌ங்கி விட்டனர். எப்போதும் 10 மணிக்கு உறங்கி விடுவாள். அன்று என்னவோ வெகு நேரம் ஆகியும் அழுதுகொண்டிருந்தாள். பிள்ளைக்கு பசி தீரவில்லை போலிருக்கு என்று எண்ணி, நான் அவளை கட்டிலில் ப‌டுக்க‌ வைத்து சுற்றி தலையணை வைத்து விட்டு சுடு தண்ணீர் எடுக்க‌ சென்றேன்.
ஒரு மூன்று நிமிடத்தில், 'டம்' என்று ஒரு சத்தம் தொடர்ந்து குழந்தையின் பளீர் அழு குறல். பதறி அடித்துகொண்டு ஓடி வந்து பார்த்தால் குழ்ந்தை முகம் குப்புற‌ தரையில் கிடந்தாள். என் மனம் வெடித்து விட்டது. அலறிவிட்டு அவளை அள்ளி அணைத்தேன். பச்சிளம் பிள்ளை என்ன உணர்ந்தாளோ...என்னை இறுக்கி பிடித்துக்கொண்டு கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டில் எல்லோரும் ஓடி வந்தனர்.
என் அண்ணன் உடனே சென்று ஆட்டோ அழைத்து வந்தான். மணி 12 இருக்கும். கதறிய‌ நிலயில் நானும் என் தாயும் குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் என் அண்ணனோடு அருகிலுள்ள ஒரு குழந்தைகள் மருத்துவரிடம் சென்றோம். அவர் அரை உறக்கத்தில் வந்தார். குழந்தையை பார்த்து விட்டு, ஒரு மூன்று மணி நேரம் கழித்துதான் சொல்லமுடியும். குழந்தை வாந்தி எடுத்தால் நாளை எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து விட்டு உடனே இங்கு வாருங்கள் என்றார். அங்கேயே உடைந்து போய்விட்டேன்.
வீட்டிற்கு வந்து புலம்பி அழுது கொண்டிருந்தேன். நான் அழுவதை பார்த்து, குழந்தையும் அழுது விட்டு அப்படியே தூங்கி விட்டாள். மறுநாள் காலை 7 மணிக்கு விழித்தாள், சாதாரணமாக‌ இருந்தாள். நாங்கள் குடும்ப‌ மருத்துவரிடம் சென்றோம், அவர் பார்த்து விட்டு, குழ‌ந்தை விழுவது சகஜம். மூக்கிலோ, காதிலோ ரத்தம் வராமலும், குழந்தை வாந்தி எடுக்காமலும் இருக்கும் வரையில் எந்த‌ பயமும் இல்லை என்றார். அப்போதுதான் நிம்மதியாச்சு எங்களுக்கு.
இப்போது அவளுக்கு 3.5 வயது ஆகிறது, இறைவன் அருளால், நன்றாக‌ இருக்கிறாள். தாய்மார்களே! குழந்தையை எக்காரணம் கொண்டும் தனியாக‌ விட‌ வேண்டாம்.

அன்பு தோழிகளே! குழந்தை வளர்ப்பு என்பது சதாரணமான விஷயம் அல்ல. குழந்தை பிறந்தது முதல் நமது கவனம் முழுக்க அவர்கள் மீதே இருக்க வேண்டும். அதுவும் அவர்கள் தவள ஆரம்பித்து விட்டால் நமது வேலை கண்டிப்பாக அதிகம் தான். தவளும் நிலையில் குழந்தையை கட்டிலில் தூங்க போடுவது மிக தவறு. நாம் கன நேரம் கவனிக்காமல் போனாலும் ஆபத்து தான். குழந்தைகள் தவள்ந்து கட்டிலில் இருந்து கீழே விழ அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் நாம் குழந்தையின் அருகில் இருக்கும் சமயத்தில் கட்டிலில் தூங்க வைக்கலாம். இல்லையேல் கீழே படுக்கை விரித்து தூங்க வைப்பது சிறந்தது. இந்த நிலையில் தான் அவர்கள் அனைத்து பொருட்களையும் வாயில் வைக்க ஆரம்பம் செய்வார்கள், அதனால் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிறு குப்பையானாலும் அதனை குப்பை கூடையில் போடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போதும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். புதிதாக ஒரு உணவு கொடுக்கும் போது கொஞ்சமாக கொடுத்து, குழந்தைக்கு ஒத்து கொள்கிறதா என்று பார்க்க வேண்டும், அதுவும் பகலில் தான் கொடுத்து பார்க்க வேண்டும். இது என் அனுபவத்தில் இருந்து நான் கூரியவை. நன்றி

ரொம்ப நல்ல இழை டா நம்மைப் போன்ற புதிய தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Hi frnd,எல்லோரும் நலம? நான் ஒரு மாதம் கழித்து இந்த தளத்திற்கு வந்திருக்கிறேன்,சரி நான் விஷயத்திற்கு வருகிரேன்,என்னுடைய வீட்டில் பாத்ரூம் வீட்டிர்கு வெளிப்புரம் உள்ளது,னான் என்னுடைய 1 1/2 வயது பையனை மொட்டை மாடியில் விலயாட விட்டுட்டு நான் அவனை பார்துக்கொன்டே பாத்ரூமில் அவன் ஜட்டியைத்தான் அலசினேன் பா அதுக்குல்ல அவன் என்னை உள்ளே வைத்து தாழ்ப்பாள் போட்டுட்டான் பா,அப்புரம் அவனுக்கு அந்த தாழ்ப்பளை எடுக்க தெரியல பா,னான் பாத்ரூமில் இருந்து அழுரேன் அவன் வெளியே இருந்து அழுரான்,என்ன பன்னுரதுனே தெரியல பா,கையில் மொபைலும் இல்லை,
4ஆவது மொட்டை மாடி வேறு ,பையன் படியில இரங்கி கீழே விழுந்துட்டா என்ன ஆகும்னு நினைச்சி ஒரே அழுகை தலை வெடிசிரும்போல அழுகை எனக்கு வருது,1 மனி நேரம் 20 நிமிஷம் உள்ளேயே இருந்திருக்கென் பா. அப்புரம் பாத்ரூம் உள்ள வாளிய கமத்தி போட்டு பக்கத்து வீட்டு ஆன்டிய கூப்பிட்டு கதவை திரக்க சொன்னேன் பா,கடவுள் மாதிரி வந்து என்னையும் என் பையனையும் காப்பத்திட்டாங்க பா.இது நடந்து 1 1/2 மாதம் தான் ஆகுது பா.அப்புரம் நாங்க உடனேயே வேற வீடு பாத்து போஇட்டோம் பா. அது நடந்து 1 வாரம் கூட அந்த வீட்டுல நாங்க இருக்கல பா. அதனால எல்லோரும் கொஞ்ஜம் குழந்தைங்க இருக்குற வீட்டுல,கதவு தாழ்ப்பால்,மொட்டை மாடி எல்லாம் பாத்து கவனம இருங்க பா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

Hadhi, nazira, hasini அனைவரும் தங்கள் அனுபவங்களை சொல்லி எங்களுக்கு உதவி புரிந்ததற்க்கு நன்றிகள் பல...

faridha thank u so much da...

Friends பாலூட்டும் தாய்மார்கள் க்ரோசின், பாராசிட்டமல் போன்ற ஜுர மாத்திரைகளை எடுக்கலாமா? எனக்கு ஒன்னுமே தெரியல. சொல்லிதரவும் ஆள் இல்ல. அதனால் எது செய்தாலும் செய்யலாமா? கூடாதா? என்ற கேள்வி எழுகிறது. தோழிகள் உதவவும் ப்ளீஸ்..

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

பாலூட்டும் தாய்மார்கள் க்ரோசின்,பாராசிட்டமல் எல்லாம் அளவோடு எடுத்துக்கலாம் பா.ஒன்னும் பயம் இல்லை.நான் எடுத்திருக்கேன் பா.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

பச்சிளம் குழந்தைகள் மூச்சை பலமாக இழுத்து இழுத்து தான் விடுவார்களா? என் மகனுக்கு இரண்டு மாதமாகிறது. ஆரம்பம் முதலே அவன் அப்படி தான் மூச்சு விடுகிறான். தூக்கிட்டு நடந்தால் மேலும் சத்தம் அதிகமாக கேட்கிறது. தூங்கும் போதும் வயிறு வேகமாக மேலே வந்து வந்து போகிறது. இவை மூச்சு விடுவதில் பிரச்சனையா? அல்லது இயல்பான விஷயமா? மூக்கடைப்பு இல்லை.

மேலும் தற்போது மார்பு சளி உள்ளது. கர் கர் என்ற சத்தம் கேட்கிறது. டாக்டர் தந்த டானிக்கை கொடுத்தும் சரியாகவில்லை. என்ன செய்யாலாம்? கஷ்டமாக இருக்கிறது உதவுங்கள் சகோதரீஸ் ப்ளீஸ்...

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

எனது கேள்விக்கு ஆலோசனை தாருங்கள் சகோதரிகளே ப்ளீஸ்...

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்