அது ஒரு கனாக்காலம்.

சைக்கிள் கடைக்காரரிடம் பழைய சைக்கிள் டயர் ஒன்று வாங்கி சிறிய குச்சியை அதில் தட்டி தட்டி ஓட்டி கொண்டிருந்தான் சுரேஷ். டயரும் வெகு வேகமாக உருண்டு கொண்டிருந்தது. சிறிய கற்கள் மேல் டயர் ஏறி குதிக்கும் பொழுது இவனும் டயரை போலவே எகிறி குதித்து ஓட்டிக் கொண்டிருந்தான்.
இவனைப் போலவே பக்கத்து வீட்டு பாபுவும், அடுத்த் தெரு அகிலேஷும் டயரோடு ஓடிக் கொண்டிருந்தனர். இவன் டயரும் இவனும் மெல்ல மெல்ல அவர்களை நெருங்கி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் சுரேஷுக்கும் அவன் டயருக்கும் அப்படி ஒரு வேகம் பிறந்தது. சாலையில் கற்கள் எகிறி பறந்தன, புழுதி படலத்தோடு புகையாய் விரைந்து கொண்டிருந்தனர் டயரும் இவனும். போடா போடா.. இன்னும் வேகமாய் போடா என்று மானசீகமாய் டயரிடம் பேசியபடி பாபுவையும் அகிலேஷையும் கடந்து கொண்டிருந்தான் சுரேஷ்.
அவர்களை கடந்து சென்று டயரை நிறுத்தினான் சுரேஷ். பாபுவும் அகிலேஷும் கூட இவனை பார்த்து நின்றனர். வேகமாக மூச்சிரைத்தது மூவருக்கும். கையெல்லாம் டயரின் கறுப்பு கறைகளும், சாலையின் செம்மண் புழுதியோடு வியர்வையில் ஊறிக் கொண்டிருந்தது உடம்பு. குனிந்து டயரை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது முதுகில் பளாரென்று விழுந்தது அடி.
கையை இடுப்பில் வைத்து கொண்டு களியம்மன் வேடம் போட்டிருந்தாள் சுரேஷின் அம்மா. ”ஞாயிறு காலை ஏழு மணிக்கெல்லாம் ஹிந்தி டியூஷனுக்கு போகனும்னு எண்ணமில்லாமல் அப்படி என்னடா தூக்கம்?. எழுந்திரிடா” அம்மாவின் முகத்தை குளோசப்பில் பார்க்க பயந்து கைகளை பார்த்தான் அதில் டயரின் கரியும் உடம்பில் செம்மண் புழுதியும் இல்லாமல் இருந்தது. அப்போ டயர் ஓட்டியது...? கனவை நினைக்ககூட நேரமில்லாமல் இன்று ஹிந்தி வாத்தியிடம் வாங்க இருக்கும் அடியை நினைத்துக் கொண்டே எழுந்தான் சுரேஷ்.

4
Average: 4 (1 vote)

Comments

வாழ்க்கைல முதன் முதலா ஒரு கதை எழுதி இருக்கேன். இதில் எழுத்து நடையிலோ அல்லது எழுதிய விதத்திலோ ஏதாவது தவறுகள் இருந்தால் பெரியவங்க நீங்க மன்னிக்கனும்.

அன்புடன்
THAVAM

;) ஆனால்... தொடர்ந்து எழுதாவிட்டால் மன்னிக்க மாட்டேன்.

இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதியிருக்கலாம் தவம். அடுத்த போஸ்ட் சரியாக அமையும்.

‍- இமா க்றிஸ்

அடடா இப்படி ஒரு மன்னிப்பை நான் கேள்வி பட்டதே இல்லை இமாக்கா. இருந்தாலும் உங்க பெரிய மனசுக்கு நன்றி.
தொடர்ந்து எழுத முயல்கிறேன். நீளமாக எழுதினால் படிக்க முடியாமல் சிரமமாக இருக்குமே என எண்ணினேன்.
நன்றி அக்கா.

அன்புடன்
THAVAM

Ni
நல்ல‌ கதை தவமணி அக்கா

Anbudan,
Viji

நான் தவமணி அக்கா இல்லீங்க... தவமணி அண்ணா.

அன்புடன்
THAVAM

ஸம‌ காமடி போங்க......

Anbudan,
Viji

சாட்டா முடிச்சிட்டீங்களே.ஊரில் உள்ள குட்டிபசங்களை முன்னிருத்தி சூப்பரா சொல்லிருக்கீங்க தவமணி அண்ணா.

சின்ன‌ கதையா இருந்தாலும் நல்ல‌ அழகாக‌ சொல்லி இருக்கீங்க‌... படமும் அழகாக‌ உள்ளது.. எல்லாருக்கும் இது போல் எதாவது ஒரு நினைவு கனவாக‌ வரும் அண்ணா...

கதை நல்லாயிருக்குங்க, உங்களுக்கு வந்த கனவா?? இல்லை நிகழ்ந்த நினைவா :-)
நிறைய எழுதுங்க

நட்புடன்
குணா

தவமணி சார் கதை குட்டியா இருந்தாலும் நல்லா இருக்கு, அது ஒரு கனாக்காலம் தான் நானும் கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்கு போனா ஓட்டி இருக்கேன் அங்க இருக்கற ப்ரண்ட்ஸ் கூட

கதை சூப்பரா இருக்கு. நான் சின்ன வயசுல விளையாடின விளையாட்டு. ஆனால் இப்ப வளரும் தலைமுறைக்கு இந்த விளையாட்டு ஒரு கனவாகவே பொய்விடும் போல அண்ணா.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

படிக்க படிக்க‌ ஆசையா இருந்தது......... எனக்கு இந்த‌ விளையாட்டு அனுபவம் இல்ல‌... ஆனா short & sweet ஆக‌ இருந்தது... நிறைய‌ எழுதுங்க‌ அண்ணா...

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

அருமையான கதை. சாரி இதை கதைனு சொல்ல முடியாது நிஜம் தான் இன்னமும் எங்க தெருவில் இந்த மாதிரி பசங்க டயர் ஒரு சின்ன கம்பு வைத்துக்கொண்டு விளையாடுறாங்க.
எல்லா பசங்களுக்கிடையில் போட்டி வைச்சு விளையாடுறாங்க.
தலைப்பு அருமை அது ஒரு கனாக்காலம்.

ஆஹா சூப்பரு. ஸ்விட் &ஷார்ட் . மேலும் பல கதைகள் படைக்கணும்.நாங்க படிக்கணும்

Be simple be sample

தவமணி அண்ணா,
அவ்ளோதானா முடிஞ்சிருச்சா,

கதை சின்னதா இருந்தாலும் இந்த‌ கால‌ சிறு குழந்தைங்க‌ ஏக்கத்தை ரொம்ப‌ அழகா சொல்லீருக்கீங்க‌......

இனி இந்த‌ மாதிரி விளையாட்டை படிச்சு தான் தெரிஞ்சுக்கணும் போல‌......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இன்றைய கால பிள்ளைகள் மொபைலில் கார் ரேஸ் ஓட்டுதுங்க... எங்க டயர் வண்டி ஓட்டுதுங்க :( எல்லாம் இனி கனவு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கதை சின்னதா இருந்தாலும் டச்சிங்கா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

பாராட்டிய, ஊக்கு வித்த (காமெடிக்கு!) மன்னிக்கனும்...ஊக்குவித்த அனைவருக்கும் அறுசுவையின் அங்கத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

அன்புடன்
THAVAM