டூனா மீன் வடை

தேதி: May 20, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

டூனா மீன் டின் - 300 கிராம்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 6
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு கப்
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு


 

டூனா மீனை உதிர்த்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும்.
ஊறவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், சோம்பு மற்றும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
உதிர்த்து வைத்துள்ள டூனா மீனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்புச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அத்துடன் கார்ன் ஃப்ளாரைச் சேர்த்து கொள்ளவும்).
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை வடைகளாகத் தட்டி போட்டு வெந்ததும் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.
சுவையான டூனா மீன் வடை தயார்.

டூனா மீனில் உப்பு இருப்பதால் பருப்புக் கலவை அரைக்கும் போது சிறிதளவு உப்புச் சேர்த்தால் போதும்.

டின் மீன் கிடைக்கவில்லையெனில் நன்கு சதையுள்ள மீனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்துச் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீன் வாசனையோட வடை வாசனை இங்க வரும் போலிருக்கே.... சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்ப்பரு...... நான் இதை மீன் வச்சு செஞ்சிருக்கேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மீன் வடை சூப்பர், பார்ப்பதற்கு மசாலா வடை போல உள்ளது, படங்கள் சூப்பர்.

வடை பார்க்க‌ அழகா இருக்கு!

அன்புடன்,
செல்வி.

மசாலா வடை போல் நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வித்தியாசமா இருக்கு நித்யா. ட்ரை பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்