காதலில் ஏமாற்றம்

தோழிகளுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு பின் நான் இந்த தளத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு ஒரு பெரும் பிரச்சனை தோழிகள் தான் அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். நான் ஒருவரை 8 வருடமாக காதலித்தேன். அவரும் காதலித்தார். ஆனால் அவர் கடந்த நவம்பர் மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு என் கண் முன்னே உலா வருகிறான். இதை என்னால் தாங்கி கொள்ள முடிய வில்லை மனதை வேறு வழியில் திருப்பினாலும் அவன் நினைவே வாட்டுகிறது. இதில் இருந்து விடு பட ஒரு வழி சொல்லுங்கள் இறந்து விடலாம் என்ற எண்ணம் வந்து 2 முறை தோற்றும் விட்டேன். வாழவே பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றியதற்கு அவனுக்கு தண்டனை கிடைகுமா.

உங்களுக்கு இப்போது குறிப்பிட்ட அந்த நபர்மேல் கோபம் இருக்கிறது. (அவரில் ஆரம்பித்து அவன் என்று முடித்திருக்கிறீர்கள்.) :-) இதுவும் ஒரு வகையில் நல்லதுதான். உணர்வுகளை அடக்கி வைக்காது இருப்பது நல்ல விடயம். நிச்சயம் விரைவில் மறந்து விடுவீர்கள். மறக்கத்தான் வேண்டும். இதுதான் வாழ்க்கை.

//மனதை வேறு வழியில் திருப்பினாலும்// புதிதாக ஏதாவது செய்யவேண்டும். இடமாற்றம், வேலை மாற்றம்.. வழி இருக்கிறதா! எழுத்துத் திறமை இருந்தால் எழுதலாம். அது ஒரு சிறந்த வடிகால்.

//என்னை ஏமாற்றியதற்கு அவனுக்கு தண்டனை கிடைகுமா.// தண்டனை! யாராக இருந்தாலும் நன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே! கூடவே இன்னொரு பெண்ணும் இரண்டு குடும்பதாரும் தண்டனை அனுபவிக்க வேண்டுமா! இதனால் உங்களுக்கு இனி ஏதாவது நல்லது ஆகுமென்று நினைக்கிறீர்களா? போகட்டும் விட்டுருங்க. அவங்க உங்களுக்கு நல்லதுதான் பண்ணி இருக்காங்கன்னு நினைச்சுக்கங்க. இப்படி நிலையான ஒரு மனது இல்லாதவரை மணம் செய்திருந்தால் உங்கள் எதிர்காலம்!! நடந்ததெல்லாம் நல்லதற்குத்தான் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

சுலபமாகச் சொல்லிவிட்டேன். உங்கள் கஷ்டம் உங்களுக்குத்தான் தெரியும். விரைவில் மனதை மாற்றிக் கொண்டு இயல்புநிலைக்குத் திரும்பப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

தோழி அம்மு,
உங்கள் மன நிலைமையை நன்றாக‌ புரிந்துகொள்ளமுடிகிறது,

என்ன‌ ஒரு வருத்தம் நீங்க‌ நேசித்த‌ நபரை நீங்கள் 8 வருடமாகியும் புரிந்துகொள்ளாமல் விட்டீர்களே தோழி, போகட்டும் விடுங்கள் எல்லாமே நன்மைக்கே..............

நீங்கள் என்ன‌ காரணத்தினால் பிரிந்தீர்கள் என்று சொன்னால் ஆலோசனை சொல்ல‌ இன்னும் தோழிகளுக்கு உதவியாய் இருக்கும்,

நமக்கு தான் சொந்தம் என‌ எண்ணி இத்தனை வருடம் பழகி மனதால் வாழ்ந்து இப்போ நமக்கு இல்லை என்று நினைக்கும் போது மனது படும்பாடு, அனுபவிக்கும் வலி கண்டிப்பாக‌ உணரமுடிகிறது, அதுவும் இன்னோரு பெண்ணுடன் பார்க்கும்போது அது மிகவும் கொடுமையான‌ விஷயம்.........

சரி போனதை விடுங்கள், இனி இதை மாத்த‌ முடியாது .........
ஆவதை பாப்போம், செய்வோம்

நீங்கள் இதை மறக்க‌ வேண்டுமானால் முதலில் அந்த‌ நபரை மன்னிக்க‌ வேண்டும், கஷ்டம் தான் என்றாலும் அது தான் மன‌ நிம்மதிக்கு வழிவகுக்கும், இல்லையேல் அவன் நல்லா இருக்க‌ கூடாது என‌ மனம் சபித்துக் கொண்டே
இருக்கும், அதனால் உங்கள் மனது தான் நிம்மதி இழந்து தவிக்கும்,
அதனால் எதுவும் நடக்க‌ போவதுமில்லை ,
கண்டிப்பாக‌ செய்த‌ தவறுக்கு தண்டனை உண்டு, அதில் எந்த‌ மாற்றமும் இல்லை, கடவுள் இருக்கார் அவர் செய்வார்,

நீங்கள் சில‌ காலம் உங்கள் மனதை வேறு பிடித்த‌ விஷயங்களில் செலுத்துங்கள் .....

நான் வேறு இடத்தில் படிச்சது .

நாம் விரும்பியது நமக்கு கிடைக்கவில்லயே என்று நினைக்காதே,
அது கூட‌ உன் எதிர்கால‌ வாழ்க்கைக்கு நல்லதாக‌ கூட‌ இருக்கும்,

அது போல‌ இதுவும் நன்றே,

நன்மையும், தீமையும் பிறர் தர‌ வாரா ,

என் வாழ்க்கைக்கு வழி காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உடல் நல குறைவால் ஒரு வாரத்திற்கு அப்புறம் இப்பொழுதுதான் தளத்திற்குள் நுழைகிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என் வயது 30 வீட்டில் வரண் பார்கிறார்கள். 30.5.14 அன்று பெண் பார்க்க வருகிறார்கள். ஆனால் என்னால் சந்தோஷ பட முடியவில்லை.

உங்கள் கஸ்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் வாழ்க்கை எமக்கு தருவது தோல்வியை அல்ல.பாடத்தை தருகிறது...சில காலம் போநதும் யோசிப்பீங்க இதுக்கா இப்படி கவலப்பட்டம்ணு.....மிகச் சிறந்த ஒருவர் கணவனாக கிடைப்பார் உங்களுக்கு.....மனசு நம்ம வேதணை படுத்தும் போது நாம மூளை கிட்ட சரன்அடைஞ்சிரணும்..மூளை.நல்ல வழி காட்டும். தூக்கிப்போடுங்க........

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

dont worry nenga avoid pannala avanthana avoid pannirukan so vethanai avanthan padanum kadavul irukar avar pathupar ok, today ponnu pakka vanthangala inimel unga life nandraga amaiya my best wishes.god be with u always.

avenuku munnuku naame nalla vaalnthu kaatanum friend. muthalla mrg pannunga ellam ok aaidum

மேலும் சில பதிவுகள்