சில்லி ப்ரோக்கோலி

தேதி: May 21, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

ப்ரோக்கோலி - ஒன்று (சிறியது)
மைதா - 4 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு கலவை - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

ப்ரோக்கோலியை நடுத்தரமான அளவு துண்டுகளாக நறுக்கி, உப்பு கலந்த வெந்நீரில் போட்டு அலசி தண்ணீரை வடித்துவிட்டு எடுத்து வைக்கவும்.
அனைத்து மாவு வகைகளையும் ஒன்றாகச் சேர்த்து மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு கலவை, உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்க்கவும்.
அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அலசி வைத்துள்ள ப்ரோக்கோலியை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும். சிவந்து, மொறுமொறுப்பானதும் எடுக்கவும். க்ரிஸ்ப்பியான சில்லி ப்ரோக்கோலி ரெடி.

சூடாக சாப்பிட க்ரிஸ்ப்பியாக இருக்கும். ஆறிவிட்டால் நமர்த்தது போல இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சில்லி ப்ரோக்கோலி சூப்பர்.

அன்பு பாலபாரதி,
மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.

அக்கா சில்லி ப்ரோக்கோலி சூப்பராகீது. அந்த பாக்ஸ்ல உள்ளதை அப்படியே எனக்கு குடுத்துருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நானும் இது போல தான் காலிஃப்ளவர், ப்ரோக்கலி இரண்டிலும் செய்வேன். நல்லா இருக்கும் பார்ட்டிக்கு சூடா செய்தா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு உமா,
அந்த‌ பாக்ஸ் மட்டும் போதுமா? வீட்டுக்கு வந்தால், அது போல‌ நிறைய‌ தருவேன்:)

அன்புடன்,
செல்வி.

அன்பு வனி,
ஆமா வனி, சூடா இருந்தா நல்லா இருக்கும். மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.