பச்சை மிளகாய் ரசம்

தேதி: May 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பச்சை மிளகாய் - 10
பூண்டு - 4 பல்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தண்டு - கைப்பிடி அளவில் பாதி
கறிவேப்பிலைத் தண்டு (சிறிய குச்சிகள்) - கைப்பிடி அளவில் பாதி
தக்காளி - 2
எலுமிச்சை பழம் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
கறிவேப்பிலை - கைப்பிடி அளவில் பாதி
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலைத் தண்டுகளை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கி வைக்கவும்.
நறுக்கிய தண்டுகளுடன் தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்து, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
30 நிமிடங்கள் கழித்து நுரைத்து கொதிக்க துவங்கியதும் உப்புச் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். அத்துடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
சுவையான பச்சை மிளகாய் ரசம் தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிடுவதால் அதிகக் காரமாக இருக்காது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதுவரை ரசத்துக்கு நோ பச்சை மிளகாய்... ட்ரை பண்ணிடுவோம் :) கடைசி பாத்திரம் சூப்பர்... பார்சல் பண்ணிடுங்க ;) நீங்க தான் கேட்டதும் தந்துடுவீங்களே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரசம் சூப்பர்.. செய்து பார்கிறேன்

பச்சை மிளகாய் ரசம் வித்தியாசமான குறிப்பு அருமை. இந்த ரசத்திற்கு புளி தேவையில்லையா வனி, இல்லை புளிக்கு பதிலாக தான் எலுமிச்சை பழமா, எலுமிச்சை பழத்திற்கு பதிலாக புளி சேர்த்துக்கொள்ளலாமா.

பச்சை மிளகாயில் ரசமா? கலக்குறீங்க வாணி. நானும் மல்லித்தழை காம்புகளை க்ளீன் பண்ணி வச்சு ரசத்துக்கு அரைச்சு சேர்ப்பேன். குறிப்பு & படங்கள் சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பச்சைமிளகாய் ரசம் அருமை. அம்மா பருப்பு ரசத்தில் பச்சை மிளகாய் சேர்ப்பாங்க பார்த்திருக்கேன் ஆனா பச்சைமிளகாயிலேயே ரசம் இப்ப தான் கேட்கறேன். அந்த 2வது படம் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

பச்சை மிளகாய் ரசம் நல்லா இருக்கு. பாத்திரம் அதைவிட‌ அழகு. (வாணி, காரம் அதிகமா சாப்பிடற‌ மாதிரி தெரியுது, பார்த்து..)

அன்புடன்,
செல்வி.

எங்க வீட்ல எப்போது ரசம் வைத்தாலும் இது போல மெத்தட்ல தான் செய்வோம்.
எலுமிச்சைக்கு பதில் புளீ சேர்ப்போம்
ரச்க்குறிப்புக்கு நன்றி:)

பார்சல்தானே பண்ணிட்டா போச்சு வனி. டிரை பண்ணிப் பாருங்க.நன்றி

நன்றி அபிராமி

தாராளமா புளி சேர்க்கலாம்,எங்க வீட்ல புளி புழங்குவது குறைவு , மூட்டு வலி,வாத பிரச்சனை வர வாய்ப்புள்ளதாம்,அதினால முடிந்த அளவிற்க்கு குறைத்துக் கொள்வோம், ஆகவேதான் எலுமிச்சை சேர்த்தேன். நன்றி பாலபாரதி, அப்புறம் என் பெயர் வாணி செல்வின்.

நன்றி உமா.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி காயத்திரி

நன்றி செல்வி மேடம்.பச்சை மிளகாய் வாசனை எங்க வீட்ல எல்லோருக்கும் பிடிக்கும்,அதனால விதையை நீக்கி விட்டு சேர்த்துக் கொள்வோம்.

புளி சேர்த்தும் செய்யலாம்,நன்றி ஸகிதாபானு