கத்தரி வாழை புளிக்குழம்பு

தேதி: May 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கத்தரிக்காய் - 200 கிராம்
வாழைக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - அரை கப்
பூண்டு - 8 பல்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெல்லத் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கத்தரிக்காய் மற்றும் வாழைக்காயை நீளமாக நறுக்கி தனித்தனியாக மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரை கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம் தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, மிளகாய் தூள் சேர்த்து பிரட்டவும்.
பிறகு புளிக்கரைசல், அரை கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
புளிக் கரைசலின் பச்சை வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள காய்கள் மற்றும் வெல்லத் தூள் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான கத்தரி வாழை புளிக்குழம்பு தயார். சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அருமையான புளிக்குழம்பு பார்ப்பதற்கு கெட்டியாக உள்ளது. சூப்பர்.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவுக்கும் வருகைக்கும் நன்றி பாரதி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாழைகாய் கத்தரிக்காய் புளி குழம்பு புதுமையாக‌ இருக்கு அக்கா.. வெங்காயமும் பூண்டு அப்படியே முழுதாக‌ சேர்க‌ வேண்டுமா அக்கா?..நான் நேற்று மதிய‌ உணவுக்கு உங்கள் குறிப்பு வெண்டகாய் தயிர் பச்சடி செய்தேன் வெண்டகாய் வலுவலுப்பு இல்லாமல் ரொம்ப‌ நல்லா இருந்துச்சு அக்கா..கிராம்பு அரைத்து சேர்தது நல்ல‌ மணமாகவும் இருந்தது...

நன்றி அபி. பச்சடி வீட்ல எல்லோருக்கும் பிடிச்சிருந்ததா? செய்து பார்த்து சொன்னதுக்கு நன்றி. பூண்டு, வெங்காயம் வெட்டிதான் சேர்த்துருக்கேன். எப்படி வேணும்னாலும் சேர்க்கலாம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குழம்பு பார்க்கும் போதே நல்லாஇருக்கு.தெளிவான‌ படங்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எனக்கு இந்த வகை குழம்பு விருப்பம், இரண்டும் கைவசம் இருக்கு, கட்டாயம் செய்துட்டு சொல்றேன் உமா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எண்ணெயில் பொரிச்சு செய்வது வித்தியாசமாக‌ இருக்கு. பட்டியலில் சேர்த்து வைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

செய்துட்டு கண்டிப்பா சொல்லுங்க வனி. நல்லாருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா