பீர்க்கங்காய் கூட்டு

தேதி: May 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

திருமதி. சீதாலெஷ்மி அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.

 

பீர்க்கங்காய் - ஒன்று
தக்காளி - 2
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தேங்காய்ப் பூ - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க


 

பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காயுடன் பூண்டு, சீரகம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பீர்க்கங்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வேகவைத்த பருப்புடன் பீர்க்கங்காய், தக்காளி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வேகவிடவும்.
வேக வைத்த பீர்க்கங்காயுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்கவிட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் தாளித்து சேர்த்து இறக்கி வைக்கவும்.
சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... சீதா குறிப்போட வந்திருக்குறது சுவா!!! இதை விட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும் அதுவும் இன்னைக்கு :) சுவா... உங்க குறிப்புகள் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் ஆசை... ப்ளீஸ் முயற்சி பண்ணுங்க தொடர்ந்து வர. சூப்பரா இருக்கு குறிப்பு, அவசியம் செய்துட்டு சொல்றேன். படம்... சுவா... அத்தனை அழகா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான ரெசிபி... வாழ்த்துகள்!
(நான் தைரியமாக முயற்சி செய்யும் குறிப்புகளில் உங்களது குறிப்புகளும் அடங்கும்)
பகிர்ந்து கொன்டமைக்கு மிக்க நன்றி தோழி.

பீர்க்கங்காய் கூட்டு அருமையாக உள்ளது, குறிப்பும் எளிமையாக உள்ளது, கண்டிப்பாக செய்து பார்கிறேன்.

பீர்க்கங்காய் கூட்டு இது செய்ததே இல்ல ஸ்வர்ணா மேடம் செய்து பார்க்கறேன். கூட்டு செளசெள, புடலங்காய் ல தான் செய்திருக்கேன். படங்களை பார்க்கவே செய்யனும் போல இருக்கு

கூட்டு பார்க்கவே சூப்பரா இருக்கு! பாசிப்பருப்பில் மட்டும் நான் செய்வேன். வித்தியாசமாக‌ இருக்கு.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப எளிமையான கூட்டு சுவர்ணா சூப்பர். ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பை வெளியிட்ட‌ அறுசுவை குழுவினர்க்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி நீண்ட நாட்களுக்கு பிறகு என் குறிப்பு முதல் பதிவு உங்களுடையது ரொம்ப சந்தோசமா இருக்கு :)
//படம்... சுவா... அத்தனை அழகா இருக்கு.// நன்றி வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்திற்க்கு மிக்க நன்றி :)

//(நான் தைரியமாக முயற்சி செய்யும் குறிப்புகளில் உங்களது குறிப்புகளும் அடங்கும்)// ரொம்ப சந்தோசம்ங்க ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றிங்க கண்டிப்பா செய்வது மிக எளீமைதான் சிதாம்மா குறிப்பாச்சே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வருகைக்கு மிக்க நன்றி :) கண்டிப்பா செய்து பாருங்க நானும் பீர்க்கங்காயில் முன்பெல்லாம் செய்வது இல்ல சீதாம்மா குறிப்பை செய்து ருசித்தபின் இப்போலாம் அடிக்கடி செய்ரேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வருகைக்கு மிக்க நன்றி :)
நானும் இதுவரை பாசிப்பருப்பில் தான் கூட்டு செய்துருக்கேன் சீதாம்மா குறிப்பை பார்த்து செய்ய நினைக்கும் போது என்னடா புதுசா கடலைபருப்பு சொல்லிருக்காங்களேன்னு யோசிச்சிட்டே செய்தேன் அதுவும் 2 தேக்கரண்டி அளவிலா என்ற யோசனையோடு
செய்து சுவைத்தபின் ஆஹா அருமை என்று சொல்லவைத்தது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உமா நன்றி :) கண்டிப்பா செய்து பாருங்க நொடியில் ரெடின்னு செய்துடலாம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

படங்கள் அருமையா இருக்கு. நான் பாசிபருப்பில் மட்டும் செய்வேன். கடலை பருப்பு சேர்த்து செய்து பார்க்கிறேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

செய்து ரொம்ப நாளாச்சு, பதிவு போட மறந்தே போனேன் :(

ரொம்ப சுவையான குறிப்பு சுவா, செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி :) சுவையான குறிப்பு கொடுத்த சீதாக்கும் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நானும் இதுவரை பாசிப்பருப்பில் தான் கூட்டு செய்துருக்கேன் சீதாம்மா குறிப்பை பார்த்து செய்ய நினைக்கும் போது என்னடா புதுசா கடலைபருப்பு சொல்லிருக்காங்களேன்னு யோசிச்சிட்டே செய்தேன் அதுவும் 2 தேக்கரண்டி அளவிலா என்ற யோசனையோடு, செய்து சுவைத்தபின் ஆஹா அருமை என்று சொல்லவைத்தது :)
//

அதே அதே... அப்படியே டிட்டோ போட்டுக்கறேன் சுவர்ணா! :‍) போனவாரம் ஒரு நாள் இந்த‌ கூட்டு செய்தேன். சூப்பரா இருந்தது. குறிப்பு தந்த‌ சீதாம்மா + அழகா செய்துக்காட்டிய‌ உங்களுக்கு மிக்க‌ நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ