அடிக்கடி கருச்சிதைவு???

எனக்கு 2 முறை கருச்சிதைவு ஆகிவிட்டது. அதுவும் 1 1/2 வருட‌ இடைவெளியில். (2வது குழந்தைக்காக‌). எதர்காக‌ அடிக்கடி இப்படி நடக்கிரது? 4 மாத‌ இடைவெளிக்கு பின் ட்ர்ய் பன்லாம்னு நினைக்கிரேன். அந்த‌ 4 மாதத்தில் நான் எப்படி தயார் படுத்துவது?. கர்ப்ப‌ பை ஆரோக்கியத்துக்கு என்ன‌ பண்ணலாம். எல்லா சகோதரிகலும் உதவுங்கள்? ப்ளீஸ்.

//4 மாதத்தில் நான் எப்படி தயார் படுத்துவது?. கர்ப்ப‌ பை ஆரோக்கியத்துக்கு என்ன‌ பண்ணலாம்.// முதல்ல நாலு மாத இடைவெளி போதுமா என்பதை உங்களைப் பார்க்கும் டாக்டர்ட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க.

‍- இமா க்றிஸ்

3 months pothumnu sonnangka.

இமா கேள்வி தான் எனக்கும். எனக்கு தெரிந்து ஒருவருக்கு இப்படி நேர்ந்தது. ஒரு அளவுக்கு மேல் விரியாமல் குழந்தையை வளர விடவில்லை. காரணம் வேறு இருந்த போதும், மற்றொரு காரணமாக மருத்துவர் சொன்னது அடுத்தடுத்த கருசிதைவு காரணமாக கருப்பை உள்ளே ஆன ரனம் ஆறும் முன் கருவுற்றது தான். அதனால் அதிக இடைவெளி விடுவது நன்று.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகள் சொல்வது போன்று கருச்சிதைவிற்க்குப் பின் போதிய இடைவெளி அவசியம், உங்கள் உடல் தன்மைக்கு மூன்று மாதத்திற்க்கும் மேல் தேவைப் பட்டால் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். தைராய்டு பிரச்சனை இருப்பின் கண்டறிந்து சரிசெய்து கொள்வதும் நலம். கருதரிப்பதற்க்கு மூன்று மாதத்திற்க்கு முன்னிருந்து Iron மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும் நல்லது.

முதல் கருசிதைவு 2011 நடந்தது சகோதரி. அடுத்தது 2014. போன‌ மாதம். கருப்பை வீக்காக‌ இருக்கினு சொன்னாங்க‌. எனக்கு தைரொய்ட் இருக்கு டெய்லி மாத்திர‌ போடுரென்க‌. உங்கள் பதில்கள் ஆறுதலாக‌ உள்ளது. இப்பொ நான் என்ன‌ பண்ணட்டும்???

தைராய்டை நன்கு குணப்படுத்தி விட்டு கர்ப்பத்திற்க்கு முயற்ச்சி செய்யுங்கள்.பலனளிக்கலாம். எல்லாவற்றிற்க்கும் மேலாக மனதை லகுவாக வைத்திருங்கள். நமக்கு எப்போழுது என்ன நடக்க வேண்டுமென்று இறைவன் நினைத்திருக்கிறாரோ அதின் படி அவ்வப்பொழுது நடக்கும், இது என் வாழ்வில் நான் கற்றுக் கொண்டது.அதினால் கவலைப் படாதீர்கள். எனக்கும் பல பிரச்சனைகள், போராட்டங்கள் மற்றும் கருச்சிதைவிற்க்குப் பின் இப்போதுதான் இரண்டாவது குழந்தை பிறந்தது. மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கேட்கவே சந்தோசமாக‌ உள்ளது. வாழ்த்துக்கள் வனி. நீங்கள் 2வது குழந்தைக்காக‌ எடுத்த‌ முயர்ச்சிகள் செய்த‌ மருந்துகளை சொல்ல‌ முடியுமா வனி.

வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி, எனக்கு தைராய்டு பிரச்சனை இருந்ததில்லைங்க, எனக்கு கருப்பையின் உடல்பகுதியில் கரு தங்காமல் கர்ப்பபையின் வேறு பாகங்களில் தங்கி கொண்டிருந்தது, அதை ஸ்கேன் மூலம் கண்டறிய முடியவில்லை,(பொதுவாக கருக்குழாயில் தங்கும் போது ஸ்கேன் மூலம் தெரிந்துவிடும்) மீண்டும் ஒருமுறை இப்படியானால் உய்ருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கருதி கருப்பையின் சில பகுதிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி விடுவோம் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள். கடவுள் புண்ணியத்தில் இந்த முறை பிரச்சனை எதிர் கொள்ளவில்லை. உங்களுக்காகவும் நான் கடவுளை பிராத்திக்கிறேன்.

நிச்சயமாக‌ வனி. எனக்கும் கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி. கைவிட‌ மாட்டார்.
2வது பிள்ளை பெற்ற‌ போது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்று புரிகிரது. அந்த‌ சந்தோசம் தொடர‌ வாழ்த்துக்கள் தோழி.

Frnd nambikaiya irunga pa nallathey nadakum 1st u take rest atleast 4month pa bcos unga health normala nalla irunthal than baby form aanalum problem ethum irukathu pa so care of ur health pa. Then eat more fruits main thing maathulai nalla sapdunga pa karpa paiku nallathu pa k va

மேலும் சில பதிவுகள்