7 மாத கர்ப்பம் நீரின் அளவு குறைவு, advice please

வணக்கம், தோழிகளே நான் 7 மாத கர்பமாக உள்ளேன், நீரின் அளவு குறைவாக இருப்பதாக கூறி மருந்து கொடுத்துள்ளார் கள். வேரு வழிகள் இருந்தால் கூருங்கள் ப்ளீஸ்:-)

வேறு வழி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, உங்களுக்காவது ஏழாவது மாதத்திலே கண்டுபிடித்து விட்டார்கள், எனக்கு பிரசவத்திற்க்கு 2 வாரத்திற்க்கு முன் தான் கண்டறிந்து அதற்க்கென்று மருந்தும் தராமல் உடனே வலிக்கு ஊசி போட்டு குழந்தையை எடுத்தார்கள். டாக்டர் கொடுத்த மருந்தை தொடர்ந்து சாப்பிடுங்கள், தண்ணீர் நிறைய குடிப்பதும் நல்லது. தாயின் உடலில் நீர்(dehydration) குறைந்து அதினால் கருப்பையின் நீர்ச்சத்து வற்றிப் போக வாய்ப்புள்ளது, பயப்பட தெவையில்லை.

சாத்துக்குடி ஜூஸ் நிறைய‌ எடுத்துக்கோங்க‌.நீர் சத்து அதிகமுள்ள‌ பழங்கள்(தர்பூசணி,சுரைக்காய்)போல‌ எடுத்துக்கோங்க‌.மீண்டும் தெரிந்தால் சொல்கிறேன்.

உடம்பில் அமினோ ஆசிட்ஸ் & ப்ரோட்டீன் எடுத்துகிட்டால் ப்ரெக்னென்ஸில நீரில் அளவு அதிகரிக்கும். என் தங்கைக்கும் ப்ரெக்னென்ஸில இந்த ப்ரச்சினை இருந்ததால் டாக்டர் புரத சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்க சொன்னாங்க மேலும் ப்ரோடீனெக்ஸ் பொவுடரும் குடுத்தாங்க பாலில் கல்ந்து குடிக்க சொல்லி. நீங்க உங்க டாக்டரிடம் உங்களின் உடல் நிலையை தெரிந்துக்கொண்டு இந்த ப்ரோடீனெக்ஸ் பவுடர் பத்தி கேட்டு அவங்க என்ன சொல்றாங்கலோ அதை ஃபாலோ பன்னுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

எனக்கு நீர் அதிகமாக இருந்தது. இளநீர், ஜூஸ் ஐடம்ஸ் தவிர்க்க சொன்னாங்க. நீங்க தண்ணீரோடுஇவை போன்றவைகளை தினமும் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்