க்யூட் கூட் & ராப்போ

எங்கள் மூத்தவர் அலன் தற்போது ஹமில்டனில் வசிக்கிறார். அவரைப் பார்க்கப் போயிருந்தோம்.

விசாலமான வீடு. அறையின் அளவைப் பொறுத்து ஒருவரோ இருவரோ வசிக்கிறார்கள். விசாலமாக சமையல் மேடை, பெரிது பெரிதாக கூடங்கள், வீட்டைச் சுற்றிலும் அழகாகப் பராமரிக்கப்பட்ட செடிகள்; இவை அனைத்திற்கும் மேலாக ஆங்காங்கே கதவுகளைத் திறந்தால் தெரியும் இயற்கைக் காட்சிகள். கிளம்பி வரவே மனதில்லை.

மதிய உணவின் பின் ஒரு சின்ன உலாக் கிளம்பினோம். வீட்டிற்கு முன்பு கிடுகிடுவென்ற ஓர் இறக்கம். அது அப்படியே ஒரு நீரோடையைச் சுற்றிக் கொண்டு வந்து அதே இடத்தில் முடியும். சுற்றிலும் நீர்க்கோரைகள். இங்கு இதை ராப்போ என்கிறார்கள்.

முன்பு ஒரு முறை ராப்போ மலரலங்காரம் ஒன்று செய்தேன். அங்கே ராப்போ புல்லைப் பற்றிய சில தகவல்கள் சொல்லியிருந்தேன். விரும்பினால் பாருங்கள். http://www.arusuvai.com/tamil/node/24918

இது இடைச்செருகல்....
ஒரு நாள், மட்டுநகர் உப்போடை வாவிக்கரை ஓரமாக நடக்கையில் சட்டென்று சின்னப் பறவை ஒன்று குறுக்கிட்டு ஓடிற்று. சரியாகத் தெரியக் கூட இல்லை. மறைந்து போய் மற்றொரு இடத்தில் தோன்றிற்று. மீண்டும் சட்டென்று மறைந்தது. கறுப்பாக இருந்தது என்பது மட்டும் நிச்சயம். புகைப்படம் எடுக்க அதன் பின்னால் ஓடித்திரிந்து வாகனம் கிளம்புவதற்கு நேரம் ஆகி விட யோசனையைக் கைவிட்டேன். அதைச் சம்புக்கோழி என்றார்கள். அப்போதுதான் ராப்போவை தமிழில் சம்புப்புல் என்பார்கள் என்று அறிந்தேன்.

சம்புக்கோழி பழைய நினைவுகளைக் கூட்டி வந்தது. மகன் வீட்டுக்கு முன் இருந்த நீரோடை ஓரமாகச் சில பறவைகள் - க்றிஸ் வாகனத்திலிருந்து உருளைக் கிழங்குப் பொரிகளை எடுத்து வர, கூட்டமாக ஓடி வந்தன அனைத்தும். புறாக்கள், வாத்துகள், புகேக்கோ... இந்த புகேக்கோகள் வெகு அழகு. முன்பு எங்கள் அடுத்த தெருவிலும் சில மேய்ந்து திரியும். அருகில் சில்வியா பார்க் கடைத்தெரு வந்து, சனநடமாட்டம் அதிகரித்ததன் பின்னால் காணோம் இவற்றை. ;( இன்னொரு சமயம் சொல்கிறேன் இவை பற்றி.

ஓடி வந்த பறவைகள் மத்தியில் ஒரு க்யூட் கூட். உணவு கிடைப்பது தெரிந்ததும் சட்டென்று ராப்போ நடுவிலிருந்து கிளம்பி ஒற்றையாய் ஓடி வந்து சாப்பிட்டது. சட்டென்று ஓடி புதரில் மறைந்தது. சற்று நேரம் கழித்து மீண்டும் வந்தது.

க்றிஸ் காலைச் சுற்றிற்று. அப்போதுதான் அதன் காலைக் கவனித்தேன் - கோழிக்கால் போலவுமில்லை, வாத்துக்கால் போல சவ்வுப் பாதமும் இல்லை. வினோதமான அமைப்பு அது. வெகு அழகாக இருந்தது. நிச்சயம் நீந்துகிற பறவைதான்.

மருமகள் சொன்னார், அது குஞ்சுகளோடு இருக்கிறதாம். அருகே போனால் பெரிதாகக் கத்தித் துரத்துமாம். பத்திரம் என்றார். எங்கள் கண்ணில் பட்டது இந்த ஒற்றை கூட் மட்டும்தான். ஜோடி முட்டைகளோடு கூட்டிலிருந்தது போல.

வீடு வந்து கூகுள் செய்ததில் தெரிந்த தகவல்கள் ----
பெயர் - அவுஸ்த்ரேலியன் கூட் - Australian Coot (யாராவது நாமக்கோழி என்று என்பீர்களானால் அதற்கு நான் பாடு இல்லை. நான் சொல்வதெல்லாம் இங்குள்ள குட்டி கூட்களின் கதை.)

முதல்முதலாக நியூஸிலாந்தில்1958ம் ஆண்டில்தான் கண்டிருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து நீரோட்டத்தோடு எடுபட்டு ஒரு ஜோடி வந்திருக்க வேண்டும். பிறகு பெருகியிருக்கிறது. நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொள்ளும் இவை சமயத்தில் கரையோரமாகக் கிடைக்கும் உணவுகளையும் உண்ணும். ஓடும் நீரில் மிதக்கும் வண்ணம் குச்சுகள் காய்ந்த இலைகள் கொண்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் நீர் அடித்துப் போகாதவண்ணம் ராப்போ இலை அல்லது விலோ மரத்தின் தூங்கும் கிளைகளோடு சேர்த்துப் பின்னப்பட்டிருக்குமாம். அடுத்த தடவை செல்லும் போது கூடு கண்ணில் படுகிறதாவென்று தேடிப் பார்க்கவேண்டும்.

ஆமாம்!! இவற்றைப் பார்க்கும் யாருக்காவது கூட் - 65 சமைத்து நீங்களும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்பலாம் என்று தோன்றவில்லையா!!! ;)))

5
Average: 4.7 (3 votes)

Comments

அழகா இருக்காங்க... கால் நிஜமாவே வித்தியாசமா இருக்கு, நான் கண்டதில்லை இது போல. ஷூ காலையும் பக்கத்தில் இதையும் கண்டதும் கிவி நினைவு வந்தது. மூக்கு தான் குட்டியா போச்சு என்னை மாதிரி :P கூட் 65!!! இம்புட்டு அழகா இருக்கே... சமைக்க மனசே வராதே இமா!!! கூட் பறவையின் கூட்டை கண்டால் விடாதீங்கோ இமா... படம் பிடிச்சு கொண்டு வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெயரே வித்தியாசமாக பார்க்க அழகா இருக்குங்..
புதிதான தகவல்கள். . அருமைங்க
// ஆமாம்!! இவற்றைப் பார்க்கும் யாருக்காவது கூட் - 65 சமைத்து நீங்களும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்பலாம் என்று தோன்றவில்லையா!!! ;)) //
ஹிஹி.. :-) அப்படியே பறவை நகத்துக்கும் நெயில் ஆர்ட் பண்ணிடுங்க.. :-)

நட்புடன்
குணா

//அப்படியே பறவை நகத்துக்கும் நெயில் ஆர்ட் பண்ணிடுங்க.. :-)// - ஹஹஹஹா. இமா இந்த ‘ங்க’ தம்பி வாலுப்பையன், சேட்டைக்காரர்னு நான் சொன்னா யாருமே நம்புறதில்லை இமா... இப்போ நீங்க நம்புவீங்க தானே?

குணா’ங்க... ஒருவேளை அந்த காலை போல அவங்க கையில் நெயில் ஆர்ட் பண்ணலாம் ;) சீமாட்டி வண்டை வரைஞ்ச மாதிரி. அப்படி தானே இமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஹஹஹஹா. இமா இந்த ‘ங்க’ தம்பி வாலுப்பையன், சேட்டைக்காரர்னு நான் சொன்னா யாருமே நம்புறதில்லை இமா... இப்:-)போ நீங்க நம்புவீங்க தானே? //
:-) ஹாஹா... இமாம்மா நம்பமாட்டாங்க வனிதாங்க...
நெயில் ஆர்ட்டெல்லாம் அவங்களுக்கு கை வந்த கலை ஆச்சே.!!
முதல் படத்திலேயே பறவை பாருங்க... நெயில்ஆர்ட் பண்ண ஏதுவாக காலை தூக்கி தயாரா இருக்கிற மாதிரி இருக்குங். :-)

நட்புடன்
குணா

//மூக்கு தான் குட்டியா போச்சு// ம். ;))
//இம்புட்டு அழகா இருக்கே... சமைக்க மனசே வராதே// போங்க வனி, அப்போ கோழிக்குஞ்சு அழகே இல்லையா! ;)
//கூட் பறவையின் கூட்டை// அவ்வ்! கலக்குது வார்த்தை ஜாலம். கட்டாயம். என்ன, போகும் போது எப்போதுமே தப்பான சீசனாகப் பார்த்துப் போகிறேன் வனி.
//காலை போல அவங்க கையில் நெயில் ஆர்ட்// ;)))))

‍- இமா க்றிஸ்

//நெயில்ஆர்ட் பண்ண ஏதுவாக காலை தூக்கி தயாரா// ;) குழப்படி குணா.
ரெண்டு பேருமா என்னை சிரிக்க வைச்சுட்டீங்க. ;))

‍- இமா க்றிஸ்

நானே நேற்று என் கண் முன்னாடி கோழியை எடை போட்டு வெட்டினாங்கன்னு ஃபீலிங்கில் சிக்கன் சாப்பிடாம இருக்கேன் :( கோழிக்குஞ்சு அழகா இல்லையான்னு எல்லாம் கேட்காதீங்கோ இமா. நான் சின்ன பிள்ளையில் பச்சை கலர் கோழிக்குஞ்சு ஒன்றை வளர்த்திருக்கேன். என் மேலவே வெச்சு தூங்க வைப்பேன் அதை. எனக்கு ரொம்ப பிடிக்கும் ;( இப்போ புத்தி மாறிப்போச்சு... அதன் அழகோட சேர்ந்து சுவையும் பிடிச்சு போச்சு :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோதமான அமைப்பு அது./// ஒத்துக்கிறேன், வினோதமாத்தான் இருக்கு! ஆனால், // வெகு அழகாக இருந்தது.// என்பது கொஞ்சம் இடிக்கிது....எனக்கு அந்தக் கால்களைப் பார்த்தா பயம்ம்ம்ம்மா இருக்கு இமா! ;) :)

வாவிக்கரை-சம்புக்கோழி-சம்புப் புல்...படிக்க நன்னார்க்கூ..கூட் கூட் க்யூட்டா இருக்காங்க.

அன்புடன்,
மகி

கூட் க்யூட்டா இருக்காரு, அழகா கால தூக்கிட்டு போஸ் கொடுக்கறாரு, தவம் இருக்காரா இல்ல அடம் பிடிக்கிறாரா ஒத்த காலில் நின்னு. சூப்பர் க்ளிக் இமாம்மா.
புதுசு புதுசா நிறைய பேரை அறிமுகப்படுத்துறீங்க.

//பயம்ம்ம்ம்மா இருக்கு// ம்... எனக்கு அது அழகாத்தான் தெரியுது. ;)

‍- இமா க்றிஸ்

//தவம் இருக்காரா இல்ல அடம் பிடிக்கிறாரா// இரண்டும் இல்லை. //ஒத்த காலில் நின்னு// அதுவும் இல்லை. நடக்கும் போது இப்படித்தான் காலைத் தூக்கி வைத்து நடப்பார் உமா.

‍- இமா க்றிஸ்

கூட் க்யூட்டா இருக்கு இமா!

அன்புடன்,
செல்வி.