சுருள் முறுக்கு

தேதி: May 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி - அரை படி
பயத்தம் பருப்பு - கால் கப்
சீனி - கால் கப்
நெய் - 3 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

வாணலியில் பயத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மையப் பொடித்துக் கொள்ளவும்.
பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து விட்டு, அரைத்து மாவுச் சல்லடையில் சலித்து வாணலியில் நன்றாக ஈரத்தன்மை போகும் அளவிற்கு வறுக்கவும். வறுத்த மாவினை மீண்டும் மாவுச் சல்லடையில் சலித்து, அதில் வரும் கட்டிகளை மீண்டும் அரைத்துச் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பு மாவையும் சலித்துச் சேர்க்கவும்.
தேங்காய் துருவலில் பால் பிழிந்து முதல் பால் தனியாகவும், இரண்டாம் பால் தனியாகவும் எடுத்து வைக்கவும். முதல் தேங்காய் பாலுடன் சீனி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து லேசாக சூடுபடுத்தவும். (சீனி கரையும் அளவிற்கு வெதுவெதுப்பாக சூடானால் போதும்).
சலித்து வைத்திருக்கும் மாவில் சிறிதளவு உப்பு, நெய் மற்றும் சீனி சேர்த்து கரைத்து வைத்திருக்கும் முதல் தேங்காய் பாலை ஊற்றி, தேவைக்கேற்ப இரண்டாம் தேங்காய் பாலையும் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.
சுருள் முறுக்குக் கட்டையில் எண்ணெய் தடவி, சிறிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து விரலால் நீளமாக தட்டவும்.
அதை மெல்ல எடுத்து விரலில் வைத்து இரண்டு முனைகளையும் இணைக்கவும். (சுற்றிய முறுக்குகளை அதிக நேரம் காற்றில் காயவிடாமல் பொரிக்க வேண்டும்).
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சுவையான சுருள் முறுக்கு தயார். பத்து நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுருள் முறுக்கு... சூப்பர் முறுக்கா இருக்கும் போல. எனக்கு ஒரு பார்சல் அனுப்பிட்டிங்கதானே சுவர்ணா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முறுக்கு முறுக்கிகிட்டு சூப்பரா போஸ் கொடுக்குது ;) ஊருக்கு போகும் சமயம் செய்து பார்த்து சொல்றேன், இந்த மாவு அரைக்கிற வேலை எல்லாம் அம்மா உதவி இருந்தா தான் சரியா வரும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவா அக்கா,
முறுக்கு ஈசி அன்ட் சூப்பர், ட்ரை பண்றேன், இந்த‌ முறுக்கு அச்சு புதுசா இருக்கே, எங்க‌ வீட்ல‌ கடையில‌ புதுசா வாங்கனும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

தீபாவளி போது வீட்டில் அம்மா செய்வாங்க. உங்க குறிப்பு சூப்பர், படங்கள் அழகா இருக்குசுவர்ணா. எனக்கு ரொம்ப பிடிச்ச முறுக்கு இது, கடைக்கு போனாலே முதலில் எடுப்பது இதுதான்.

குறிப்பினை வெளியிட்ட அறுசுவை குழுவினர்க்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உமா வருகைக்கு மிக்க நன்றி. ம்ம் அனுப்பிட்டேனே இன்னும் வரலயா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி முறுக்கிட்டு இருப்பதால தான் அதுக்கு பேர் முறுக்கு ;) முடியும்போது செய்து பாருங்க வனி நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுபி வருகைக்கு நன்றி :) கண்டிப்பா செய்து பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

காயத்ரி வருகைக்கு மிக்க நன்றி :) அப்படியா உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோசம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நாங்க‌ இதை சீப்பு சீடைன்னு சொல்வோம். அச்சு கிடைக்காது. அதனால‌ புது சீப்பில் மாவை தேய்த்து இது போல‌ செய்வதால் அந்தப் பெயர்:)

ரொம்ப‌ நல்லா இருக்கு குறிப்பு.

அன்புடன்,
செல்வி.

முருக்கு சுப்பர் . இதர்கு அச்சு எதும் தேவையில்லை . முள் கரண்டியின் மேல் மாவை வைத்து தேயித்து சுருட்டினால் போதும்.

LIFE IS BEAUTIFUL

parthala sapidanam pola iruka mmmmmmmm

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மீனா மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//சுருள் முறுக்குக் கட்டையில்// அட! இப்படியும் ஒன்று இருக்கா? நான் அரிக்கன் சட்டிதான் பயன்படுத்துவேன். முட்கரண்டியும் புதுச் சீப்பும் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் கட்டை புதுசா இருக்கு சுவா.

‍- இமா க்றிஸ்