ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேதி: May 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

மட்டன் - அரை கிலோ
அரிசி - 2 1/2 கப்
வெங்காயம் - 4
தக்காளி - 2
புதினா, கொத்தமல்லித் தழை - ஒரு கப்
எலுமிச்சை பழம் - ஒன்று (சிறியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
அரைக்க 1:
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பல்
அரைக்க : 2
முந்திரி - 10
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
தாளிக்க:
ப்ரிஞ்சி இலை - 2
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
லவங்கம் - 5
நட்சத்திர மொக்கு - சிறிது
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
ஊற வைக்க:
சாம்பார் பொடி (அ) மிளகாய், தனியா கலவை - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - அரை கப்
மஞ்சள் பொடி - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது
உப்பு - சிறிது
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி


 

மட்டனை சுத்தம் செய்து ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மட்டனை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் மட்டனைத் தனியாகவும், தண்ணீரைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.
அரைக்க 1 - ல் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மேலும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வாசனை போக பிரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்த மட்டனைச் சேர்த்து 5 நிமிடங்கள் பிரட்டவும்.
அரைக்க 2’ல் கொடுத்துள்ளவற்றில் முந்திரியை 15 நிமிடங்கள் ஊற வைத்து சோம்பு, சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த முந்திரி விழுதை வதக்கிய மட்டன் கலவையில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வதக்கவும்.
பிறகு மட்டன் வேக வைத்த தண்ணீருடன் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி 4 1/2 கப் (அல்லது) 5 கப் அளவிற்கு தண்ணீரை அளந்து ஊற்றிக் கொதிக்கவிடவும். (தண்ணீரின் அளவு பயன்படுத்தும் அரிசியின் அளவைச் சார்ந்தது). கொதிக்கத் துவங்கியதும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் சிறு தீயில் வைத்து மூடி வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து அரை மணி நேரம் தம்மில் வைத்தெடுத்துப் பரிமாறவும்.
சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தயார். இந்த பிரியாணியை செய்தவுடனேயே சாப்பிடுவதைவிட ஒரு மணி நேரம் தம்மில் வைத்தெடுத்துச் சாப்பிடால் மிகுந்த சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையான‌ சூப்பர் பிரியாணி.. இது எனக்கே எனக்கு மட்டும் தான் வனிதா அக்கா.. நான் தான் முதலில் வந்தேன்...

எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் குறிப்பான‌ பன்னீர் டிக்கா செய்தேன் சுவை மிகவும் அருமையாக‌ இருந்தது... சிவக்க‌ வருக்கும் போது பனீர் குழைந்து விட்டது.. இதில் நான் செய்த‌ தவறு எதுவாக‌ இருக்கும் என்று சொல்லுங்கள்..எங்கள் வீட்டில் பனீர் டிக்கா ரொம்ப‌ பிடிக்கும் இங்கு இருக்கும் 3 star hotel ல‌ இது போல‌ தான் செய்வாங்க‌.. அதே சுவை உங்கள் குறிப்பில் இருந்தது.. இன்று பனீர் டிக்கா மறுபடியும் செய்யலாம் என்று இருகிறேன்.. இந்த‌ முறை கிரில் ல‌ வைக்கலாம்னு இருக்க அக்கா.. எதனால் பனீர் குழைய‌ வாய்பு இருக்கும் என‌ சொல்லுங்க‌ அக்கா...

நாவூறுது வனி. பிரியாணில சேர்த்துருக்க பொருட்கள பார்த்ததுமே தெரியுது டேஸ்ட் சூப்ப்ப்ப்பரா இருக்கும்னு. யம்மி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனி மிகவும் அருமையான பிரியானி.இப்பவே சாப்பிடனு போல ஆசைய தூன்டுது.செய்து பார்கலாம்னு கூட நினைக்க முடியல.இங்கு மட்டன் கிடைப்பதே அரிது.கிடைத்தால் கன்டிப்பா செய்து பார்கிரேன்

பனீர் டிக்கா செய்து பிடித்திருந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அபிராமி. உடையாமல் வர.... பனீர் கடையில் வாங்கியதா வீட்டில் செய்ததா? வீட்டில் செய்ததாக இருந்தால் நன்றாக நீர் வடிந்து கெட்டியாக உடையாமல் வரவிட்டீர்களா என் பாருங்கள். கடையில் வாங்கியது என்றால் மீண்டும் மீண்டும் திருப்பாமல் இருக்க வேண்டும். நான்-ஸ்டிக் தவா பயன்படுத்துவது தான் சரி, சாதாரண கல்லில் ஃப்ரை செய்தால் உடையக்கூடும். தீ குறைவாக வைக்க கூடாது. மிதமாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் வைத்து சிவந்த பின் திருப்பி அடுத்த பக்கம் சிவக்கவிட்டு உடனே எடுக்க வேண்டும். அதிகம் சமைக்க கூடாது, அடிக்கடி திருப்ப கூடாது. அவனில் க்ரில் செய்வது சுலபமே. இல்லை எனில் அவன் தட்டுகளில் எண்ணெய் தடவி விட்டு இவற்றை அடுக்கி மிதமான சூட்டில் விட்டு சிவந்ததும் ஒரு முறை திருப்பி விட்டு அடுத்த பக்கமும் சிவந்ததும் எடுத்து விடலாம். சூடு 180 - 200 c வரை பயன்படுத்தலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு கண்டிப்பா ஆம்பூர் பிரியாணி வேணும் மட்டன் வேண்டாம் சிக்கன் ல வேணும்,எப்போ செஞ்சு தறீங்க எவ்வளோ செலவு பண்ணியாது உங்க வீட்டுக்கு வந்து பிரியாணி சாப்பிடணும் என்னோட fav பிரியாணி தான் அக்கா.கடைசி படத்துல இருக்க பிரியாணி எனக்கு மட்டும் தான் சொல்லிட்டேன் ,அவ்ளோ ரியலா இருக்கு அக்கா.சூப்பர்.
by Elaya.G

டிக்கா ஒழுங்கா வந்ததா? செய்துட்டு சொல்லுங்க அபிராமி :) பிரியாணி அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்துட்டு சொல்லுங்க உமா :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) கிடைக்கும் போது செய்து பார்த்து சொல்லுங்க நித்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) உங்களுக்காக எப்போது வேண்டுமானாலும் பிரியாணி செய்து தர நான் தயாரா இருக்கேன்... வாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி பிரியாணி சுண்டி இழுக்குது போங்க கண்டிப்பா உங்க கையால செஞ்சுதான் சாப்பிடனும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிரியாணி சூப்பரா இருக்கு. வாராவாரம் பிரியாணி செய்தாலும், யாராவது செய்து கொடுத்தால் ரொம்பவே நல்லா தான் இருக்கும்:(

அன்புடன்,
செல்வி.

வாங்க சுவா கிளம்பி... ;) செய்து கொடுத்துட்டு தான் அடுத்த வேலை எனக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு நான் செய்வதா??!! அச்சச்சோ!! ஆசிரியருக்கே பாடமெடுப்பது போலாகிடும். நன்றி செல்வி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மையில் நன்றாக இருந்தது.