விஜய் டிவி நீயா நானாவில் பங்கேற்க அழைப்பு

நமது அறுசுவையில் நடைபெறும் பட்டிமன்றங்களும் அதில் வாதாடுபவர்களின் வாதங்களும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி வாதாடும் திறன் படைத்தவர்கள் தங்களது திறனை தொலைக்காட்சியிலும் காட்ட விரும்பினால் விஜய் டிவி தரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே சில நிகழ்ச்சிகளுக்கு இது போன்ற அழைப்பு வந்துள்ளது. ஒரு சிலர் அதில் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த சில வாரங்களுக்கான தலைப்புகள் சிலவற்றை நமக்கு கொடுத்து இருக்கின்றார்கள். வாதாட விருப்பம் உள்ளவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள எண்ணைத் தொடர்பு கொண்டு மேல் விபரங்கள் அறியலாம்.

நாளை (திங்கட்கிழமை) படப்பிடிப்பு நடைபெற உள்ள தலைப்பு,

"தனிக்குடித்தனம்தான் செல்வேன் என்னும் பெண்கள் Vs பையனை அனுப்ப விருப்பம் இல்லா பெற்றோர்."

இந்த தலைப்பிற்கான விவாதத்தில் பங்கு பெற விரும்பினால் உடனடியாக கீழ்க்காணும் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வரும் வாரங்களுக்கான மேலும் சில தலைப்புகள், இதில் ஆர்வமுள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

1. "தூங்குடா சீக்கிரம் பெற்றோர்கள் vs பிள்ளைகள்"

2. "பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் vs ஆண் பிள்ளைகள் மட்டும் பெற்றவர்கள்"

3. "பொறுப்பு, சம்பாத்தியம் இவை எல்லாம் ஆணுக்கு வலி மிகுந்தது VS மனைவிகள் / பெண்கள்"

ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய நபர் மற்றும் எண் - மேக்ஸ், 99400 81964.

பின்குறிப்பு:

திறன் வெளிக்காட்ட வாய்ப்பளிக்கும் ஒரு ஊடகத்தின் வாயிலுக்கு, திறன் படைத்தோரை வழிக்காட்டும் ஒரு பதிவுதான் இது. இதோ.. இப்படிச் செல்லலாம் என்ற வழிக்காட்டலோடு எங்கள் பணி முடிவுறுகின்றது. இது விளம்பரப் பதிவு அல்ல. அறுசுவை நிர்வாகத்திற்கும் அந்த ஊடகத்திற்கும் வேறு தொடர்புகளும் இல்லை. இதன்மூலம் உண்டாகும் லாப/நஷ்டங்களுக்கு அறுசுவை நிர்வாகம் பொறுப்பேற்காது. :-)

எங்குட்டுலாம் ஸ்மைலி?? நீங்க சும்மா சொன்னீங்களான்னு கேட்டுபுட்டாங்க சீதா ;) நிஜமாவே இப்படி ஒரு வாய்ப்பு இருக்குன்னு சொன்னேன். முன்பும் கூட இப்படி ஒரு முறை பதிவிட்டீங்கன்னு நினைக்கிறேன். ம்... நம்ம மக்கள் யாரும் போனா சொல்லுங்கப்பா... உங்களை டிவியில் பார்க்க தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போன வருடம் நான் இதில் கலந்துகொண்டேன்.நான் பேசியதை எடிட் செய்துவிட்டார்கள்.பொறுமை மிகவும் தேவை.ஏனெனில்,இரவு மிகவும் தாமதம் ஆகும்.ஒரே நாளில் 3 அல்லது 4 தலைப்புகளுக்கு நடக்கும்.

தலைப்பு:
Modern days Health conscious people Vs அதை விரும்பாதவர்கள்,பாதிக்கப்பட்டவர்கள்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

மேலும் சில பதிவுகள்