டயட் சிக்கன்

தேதி: June 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 300 கிராம்
வரமிளகாய் - 20
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
அத்துடன் சிக்கன், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு மூடி போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது. மூடி வேக வைப்பதால் தண்ணீர் அதிலேயே வந்துவிடும்).
15 நிமிடங்கள் கழித்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடியைத் திறந்து மேலும் 10 நிமிடங்கள் (தண்ணீர் வற்றும் வரை) வைத்திருந்து இடையிடையே கிளறிவிட்டு சிக்கன் வெந்ததை சரிபார்த்து இறக்கவும்.
சுவையான மசாலா அதிகம் சேர்க்காத டயட் சிக்கன் தயார்.

கறிவேப்பிலை அதிகமாக சேர்த்தால் சுவையும், மணமும் அதிகரிக்கும்.

இது சாம்பார், ரசம், தயிர் மற்றும் அனைத்து வகையான கலந்த சாதத்திற்கும் ஏற்றது. லஞ்ச் பாக்ஸ் மற்றும் பயணங்களுக்கும் எடுத்துச் செல்லாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப ஈசியா இருக்கு வாணி டயட் சிக்கன் குறிப்பு. சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

டயட் சிக்கன் சூப்பர் செம டேஸ்டியா இருக்கும் போல, அருமையாகவும், எளிமையாகவும் உள்ளது, கண்டிப்பாக செய்துட்டு சொல்கிறேன்.

ஈசி ஹெல்தி ரெசிபி :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈசி & டேஸ்ட்டி சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல குறிப்பு.... குழந்தை பிறந்த சமயம் அதிகம் சிக்கன் சாப்பிடாதிங்கப்பா.... சூடு இல்லையா...

சிக்கன் சூப்பர் சிம்பிள் செய்முறையில் சிக்கனா? வாணி அருமை.

வாழ்த்துக்கள் வாணி. குழந்தை பொறந்துருக்கதா கேள்விப்பட்டேன். பாப்பா & நீங்க நலமா? என்ன குழந்தை? பேர் வச்சிட்டிங்களா? உடம்ப பார்த்துக்கங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Punch dialog is nice

Antony

Life is one time only enjoy with peaceful

உங்கள் வாசகம் அ௫மை உமா

ரம்யா ஜெயராமன்

வா்ணி சிக்கன் ஈஸியான செய்முறையில் பார்க்கவே அசத்தலா இருக்கு, முயற்சி பண்ணிட்டு சொல்றேன்.

Tnk u.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா